ஆறு ஒன்று குறுக்கிட்டது..
குரு நீந்தி கொண்டிருக்கிறார்...
சீடர்கள் தொடர்கின்றனர்...
அப்போது...
'என்னை காப்பாற்றுங்கள்'...
தீனமாய் ஒரு குரல் ..
அழகிய இளம் பெண் ஒருத்தி ஆற்றில் மூழ்கி கொண்டிருந்தாள்..
மனதை கல்லாக்கிக் கொண்டு குரு நீந்தி கொண்டிருக்க, சீடன் ஒருவன் அந்த பெண்ணை தன் முதுகில் தூக்கிக் கொண்டு, கரை சேர்த்தான்...
ஏகத்துக்கு தண்ணீர் குடித்து உப்பிப் போயிருந்தாள் அவ்வழகிய இளம் பெண்..
பக்கத்தில் ஒரு பாறையில் அவளை மல்லாக்க கிடத்தி, வயிற்றிலும்..மா..
தகுந்த முதலுதவி செய்து, திரும்பி வந்தான் அந்த சீடன்...
ஒரு வாரம் கழித்து குரு மெலிதான குரலில் அவளைப் பற்றி கேட்க, சீடன் சொன்னான்..
"குருவே, இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?"
இதுவல்ல கதை!
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகி இருக்கும்..
இப்போதும் குரு நடந்து கொண்டிருக்கிறார்..
சீடர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்..
ஒரு அசந்தர்ப்பமான இடத்தில் குருவின் எதிரில் அவருடைய பூர்வாசிரம வூட்டுக் கார அம்மாள்
எதிர்பட்டாள்.
"இன்னாய்யா...ஒன்ன எங்கெல்லாம் தேடறது?"
நிராயுதபாணியாக குரு நிற்க, அவருடைய உத்தரீயத்தை கோர்த்து பிடித்தாள் அவள்.
குருவின் முகத்தில் ஈயாடவில்லை..
"சன்யாசி ஆனால், தப்பிச்சுடலாம்னு பார்த்தியா?"
கலங்கி போய் நின்றார்,குரு!
"ந்தா...ஆறு மாச ஊட்டு வாடகை பாக்கி ஆறாயிரத்தை குடுத்தா தான் நான் உன்னைய இங்கேர்ந்து போக விடுவேன்"
ஈவு இரக்கமற்ற அந்த House Owner உத்தரீயத்தினால், குருவானவரின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்க...
ஆறாயிரம் கொடுத்து அவரை விடுவித்தான், ஒரு சீடன்..
ஆம்...அந்த அழகிய இளம் பெண்ணை ஆற்றிலிருந்து காப்பாற்றிய அதே சீடன் தான் இவன்!
தழுதழுத்த குரலில் குரு சொன்னார்..
"இன்னும் ஆறு மாதத்தில் செட்டில் செய்து விடுகிறேன்.."
ஆறு மாதமும் கடந்தது...
சிஷ்யன் இப்போது கேட்டான்.
குரு சொன்னார்..
"இன்னுமா நீ சுமந்து கொண்டிருக்கிறாய்?"
........
11 comments:
ஹா.... ஹா..... ஹா... அடப்பாவி குருஜி!!
குரு பூர்ணிமாவுக்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் கதையோ?
நல்லதொரு கற்பனை. :)
யார் நினைவுகளைச் சுமக்கிறது நல்ல குரு நல்ல சிஷ்யன் ....!
ஹாஹாஹா! பாவம் சீடன்!
செம.... குரு விவகாரமானவரா இருக்காரே!
ஶ்ரீராம் நம்ம குரு இல்லை...வம்பில மாட்டி விட்டுடாதீங்கப்பூ!
வருகைக்கு நன்றி ஶ்ரீராம்!
குரு பூர்ணிமாக்காக இல்லை..எதேச்சையாக எழுதியது.....
தங்கள் வருகைக்கு நன்றி, வை கோ சார்!
சமயத்தில் நினைவுகள் சுமக்க முடியாத அளவு கனமாகி விடும்...
நன்றி GMB சார், தங்கள் வருகைக்கு!
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
சீடனும் ஒரு நாள் குருவாய் ஆவான்...
ஆகவே கவலைப்பட படேல் ..
தளிர சுரேஷுக்கு நன்றி வருகைக்கு!
வருகைக்கு நன்றி வெங்கட்..
விவகாரமானவராக இருப்பதால் தான் அவர் குருவாக இருக்கிறார்..
காலம் மாறும், காட்சிகள் மாறும்.
Post a Comment