Thursday, July 14, 2016

சுய விமர்சனம்!

இதற்காகத் தானா ஆசைபட்டாய் இராம மூர்த்தி?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
. கொஞ்ச நாள் யோகா கற்றுக்கொண்டேன்....ஹட யோகி என்று பெயர் வாங்க ஆசை..Preliminaryஐ     கூட தாண்டவில்லை! Practice விட்டு இரண்டு மாமாங்கம் ஆயிற்று!
. உலகமே திரும்பி பார்க்குமாறு ஒரு சிறுகதை...ஒரே ஒரு சிறுகதை ..ஒரு சிறுகதை தான், எழுத ஆசைபட்டேன்...முடியவில்லை!
. பெயருக்குப் பின்னால், அரை டசன் Post Graduate போட்டுக் கொள்ள ஆசைபட்டேன்...கால் டசன் தான் முடிந்தது!
. Flute ல் ரவிச்சந்திரிகா என்னும் ராகத்தை ராகம் தானம் பல்லவியாக ஒரு மணி நேரம் ஸோலோவாக கொடுக்க முயற்சி செய்தேன்...கமகம் சுத்தமாக வரவில்லை...கல்யாண வசந்தம் வர்ணத்தோடு காலாவதி ஆயிற்று,அது!
. வெண்பா எழுத ஆசைபட்டேன்..சீர்கள் இல்லாத தொடையை தட்டிக் கொண்டு, கொக்கரித்துக் கொண்டிருக்கிறது  தளை, இன்னமும்!
. Dabmash ம் பண்ணினேன்...ஊகூம்!
. காமெடி try பண்ணியதில்   அழுகை வந்தது.
. அரிய பெரிய தத்துவங்களை எளிய இன்னிசை தமிழில் கீர்த்தனைகள் எழுதி உத்தம வாக்கேயனாக ஆசை...அப்படியா என்று கெக்கலித்தது உள்ளம்!
. Strategic Management ல் சிகரம் தொட ஆசை. கை வசம் ஒரு டிப்ளமா கூட இல்லை!
. காளிதாசனின் சாகுந்தலத்தை சர்க்கம் சர்க்கமாக அனுபவிக்க ஆசை..ஆனால், வடமொழியில் ஒரு அட்சரம் கூட தெரியாது!
. அண்டா நிறைய ஆசை இருக்கிறது...ஸ்வாசத்திற்கு அடுத்ததாய் ஆர்வமும்  இருக்கிறது...
கற்றுக் கொண்டே இருப்பேன், காலம் பூராவும்!
இப்போது, Caricature Drawing ல் அடியேன்!
..............


9 comments:

ஸ்ரீராம். said...

கற்றுக் கொள்ள வயது ஒரு தடையில்லை என்று நிரூபிக்கிறீர்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆமென்று தான் நினைக்கிறேன் ஶ்ரீராம்.
தங்கள் வருகைக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

கற்றுக்கொள்ள ஆசையும் இடைவிடாத முயற்சியும் இருப்பதற்கு பாராட்டுகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி...வெங்கட்...
தங்கள் வருகைக்கும், விமர்சனத்திற்கும்!

தி.தமிழ் இளங்கோ said...

எப்படியோ ... எல்லாவற்றிலும் ஒரு சுற்று வந்து விட்டீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

சொல்லிச் சென்றதைப் பார்த்தால்
அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட எல்லை
தொடப்பட்டதைப் போலவும்
உச்சம் தொட ஆசைப்படுவது போலத்தான்
எனக்குப் படுகிறது
உச்சம் தொட...
தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தமிழ் இளங்கோ சார்...வருகைக்கு தன்றி...
இனி அடிக்கடி பிலாக் பக்கம் வரலாமென்றிருக்கிறேன்...
தங்கள் பிலாக்கில் என்னால் கமெண்ட் போட முடியவில்லை..
தங்களுடைய லேட்டஸ்ட் பதிவிற்கு அடியேன் இட்ட கமெண்ட்ஸ்.
'ஜேகே க்கு பிடித்த சக ஹ்ருதயர் என்கிற பதத்தை நாம் ஒருவருக்கொருவர் உபயோகப்படுத்தி கொண்டால் என்ன?'

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரமணி சார் வாங்க...ரொம்ப நாளாச்சு நீங்க என் வலை தளம் வந்து...
முக நூல் மூலம் தங்களை மீண்டும் தொடர்பு கொண்டதில் மகிழ்ச்சி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தமிழ்இளங்கோ சார்...
தற்போது தங்கள் தளத்தில் கமெண்ட்ஸ் போட முடிந்தது...
நன்றி!