Sunday, July 24, 2016

தத்வ ம(ச்)சி!


டி.வி.ல வர்ற வெளம்பரங்க அல்லாத்தையும் பாருங்க....உத்து உத்து கவனிங்க....ஆனா, எதையும் நம்பி ஆர்டர் பண்ணாதீங்க!
ஆர்டர் பண்ணினீங்க.....
அம்புட்டு தான்!!
உதாரணத்துக்கு ஒண்ணு!
ஓல்டு ஏஜ் பேரடைஸ்!
தனி தனி ஊடுங்க......காமன் டைனிங் ஹால்.....ரிச் வெஜ் மீல்ஸ்...ரீடிங் ரூம்....பிட்னஸ் பார்க்...
கர்னாடிக் ம்யூசிக்.....கம்யூனிட்டி சென்டர்....டெம்பிள் விசிட்...டாக்டர் விசிட்...வீணை, தவில், தம்புரா...ப்ளூட்டு...புல்லாங்குழல்..
அல்லாமே, வெறும் அறுபது லட்சம்னு தான்னு சொல்லி ஒங்க காசை அல்லாத்தையும் புடுங்க ட்ரை பண்ணுவாங்க...
அங்ஙன தான் நாம உஜாரா இருக்கணும்!
அதுக்கு பதிலா...
LKG,UKG போற பச்ச மண்ணுங்க...அத்த கூட்டிட்டு போற தாய்மாருங்க...ப்ளஸ் டூ பசங்க...காலேஜ் கேர்ள்ஸ், ஆபீஸ் கோயர்ஸ், நடுத்தர வயசு...இப்டி அல்லாரும் கலந்து கட்டி இருக்கற இடத்தில வூட்டை வாங்கி போடுங்க...
வாள்க்கை லவ்லியாவும், லைவ்லியாவும் போகும்!
நான் வடக்கு ஆண்டார் வீதில இருந்தப்ப, ஜனங்கலாம் கலந்து கட்டி இருந்ததுங்க..
எங்க க்ரூப் படிச்சு வேலை வெட்டி இல்லாத பட்டதாரிங்க ஒரு ஆறேழு பேரு அப்படியே, ஆண்டார் வீதி நெ.1 
வீட்டுக்கு ஒரு க்ரூப்பா போவோம்..
அடுத்த அஞ்சு நிமிஷத்துல அங்க நம்ம போஸ்ட் மேன் வருவாரு...அவரு வூட்டுக்கு வரதுக்கு நாளியாகும்...நாம இங்ஙன ஆண்டார் வீதி மொகணை போனா, 'மாடும் மேச்சா மாதிரி ஆச்சு..மச்சின்னுக்கும் பொண்ணு பாத்தா மாதிரி ஆச்சு'ன்னு மல்டி பர்ப்பசா வேலை நடக்கும்..
எங்க க்ரூப்பை பார்த்ததும், "தம்பிங்களா, நாளைக்கு ஒங்களுக்கு ஆர்டர் தரேன்..என்று பாசிட்டிவ் வாக சொல்லிட்டுப் போவாரு, அவரு வழக்கம் போல..
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரவில்லை என்பதற்காக, disappointment ஆகாமல், ஆபீசுக்கு லொங்கு லொங்கு என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடும் அக்காகளுக்கு 'டாடா'காண்பித்து விட்டு, அப்படியே சங்கரம் பிள்ளை ரோடு வந்தால், அன்ன தான சத்திரம் வரும்...அங்கு எனக்கு கொஞ்ச நாள் கழித்து, ஒரு விபத்து...இன்று வரை எனக்கு இருக்கும் ஊமை காயங்கள்...இதை தவிர,  'காற்றில் இணை கையை தூக்கிக் கொண்டு வர, அதனை அப்படியே கன்னத்தில் வாங்கும் கலை'யை எனக்கு கற்றுக் கொடுத்த அஸ்திவாரம் அது என நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்...அதனை தனிப் பதிவாக பிறிதொரு சமயம் எழுதுகிறேன்...
   எங்கே விட்டேன்...ஆ..சங்கரம் பிள்ளை ரோடு..அங்ஙன சமயபுரம்,மணச்ச நல்லூர்,லால்குடி,ஜீயபுரம் ஊர்களிலிருந்து SR காலேஜ் வரும் பெண்களுக்கு வலிப்பு காட்டி விட்டு,பிறகு அப்படியே பட்டர்ஒர்த் ரோடு, வடக்கு ஆண்டார் வீதி உள்ளூர் பெண்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்து படுத்துக் கொண்டு டிஃபன் சாப்பிடுவோம்..(ஊட்ல 'வேலை வெட்டி இல்லாம, உட்கார்ந்துண்டு சாப்பிடறது பாரு'ன்னு யாரும் நம்மள சொல்லக் கூடாது, அதான்!)
அப்ப எளுதின கவிதை ஒண்ண வாசிக்கறேன், கேளுங்க..
        பட்டத்தை 
        பறக்க விட்டு,
        பரதேசி போல்,
        முடி வளர்த்து,
        பக்கவாட்டில்,
        கிருதாவை,
        பாங்குடனே,
        வளர்த்து விட்டு,
        இஞ்சி தின்ற 
        குரங்கு போல்,
         எப்போதும் முகம் 
        தொங்கி,
        கடை வீதி,
        நடந்து சென்றால்,
        ஜவுளி கடை 
        பொம்மை கூட,
        சட்டென,
        திருப்பி கொள்ளும்!
சமீபத்தில் நான் unemployed graduate ஆக இருக்கும் போது  திட்டு வாங்கின PU படித்த இளஞ்சிட்டு ஒன்றை எதேச்சையாக சந்தித்தேன்...
       தலை நரைத்து, விந்தி விந்தி நடந்து உடம்பு எக்கசக்கமாய் ஊதிப் போய் இரண்டு டிபன் பாக்சுடன் காமகோடியில் Lkg, ரெண்டாங்க்ளாஸ் படிக்கும் பேரன், பேத்திகளுக்கு ஊட்டி விட போய் கொண்டிருந்தாள்..
     'இன்னும் தாத்தா ஆகவில்லை' என்று தோள்களை குலுக்கிக்கொண்டு நடந்தேன்.
எதற்கு இவ்வளவும் சொல்கிறேனென்றால், அன்று நாங்கள் ..அன்றென்ன இன்றும் பலதரப்பட்ட மனிதர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
அத்த விட்டுட்டு, கரன்சியால காது குடையற வசதி வந்தால் கூட ..அங்ஙன..அதாங்க அந்த old age segment ல போய் மாட்டிக்காதீங்க!
வாள்க்கை காத்து போன பலூன் போல புஸ்ஸுனு போயிடும்!
ஏதோ,இன்னிக்கு ஒங்க எல்லாரும் இத்த சொல்லணும்னு தோணிச்சு!
அம்புட்டு தான்!
வா......ரே.....ன்!!

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்படியே, ஆண்டார் வீதி நெ.1 வீட்டுக்கு ஒரு க்ரூப்பா போவோம்.. அடுத்த அஞ்சு நிமிஷத்துல அங்க நம்ம போஸ்ட் மேன் வருவாரு...அவரு வூட்டுக்கு வரதுக்கு நாளியாகும்...நாம இங்ஙன ஆண்டார் வீதி மொகணை போனா, "தம்பிங்களா, நாளைக்கு ஒங்களுக்கு ஆர்டர் தரேன்..என்று பாசிட்டிவ் வாக சொல்லிட்டுப் போவாரு, அவரு வழக்கம் போல..//

அந்தப் போஸ்ட்மேன்களில் இருவர் உண்டு. ஒருவர் பெயர் நாயுடு. இன்றைய உங்களைப்போல அன்றைக்கே இருப்பார்.

மற்றொருவர் பெயர் கண்ணப்பன். இன்றைய என்னைப்போல அன்றைக்கே இருப்பார்.

தினமும் பாஸிடிவ் ஆக ”நாளைக்கு” என சொல்லி வந்தவர்கள் என்பது உண்மையே.

1970 அக்டோபரில் ஒருநாள் இந்தக் கண்ணப்பன் தான் எனக்கான REGISTERED POST - BHEL PERMANENT APPOINTMENT ORDER ஐக் கையில் கொடுத்தவர்.

நான் உடனே பக்கத்தாத்து மாமா ஒருவரிடம் கடன் வாங்கி அவருக்கு ரூ.2-00 (ரூபாய் இரண்டு மட்டும்) டிப்ஸ் ஆகக் கொடுத்தேன்.

அதில் அவருக்கு மிகவும் சந்தோஷம். அவருக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான்.

அன்று வந்த அந்தத் தபாலை 45 ஆண்டுகள் ஆகியும் இன்றும் என்னிடம் அப்படியே பத்திரமாக வைத்துள்ளேன்.

//அதுக்கு பதிலா... LKG, UKG போற பச்ச மண்ணுங்க...அத்த கூட்டிட்டு போற தாய்மாருங்க...ப்ளஸ் டூ பசங்க...காலேஜ் கேர்ள்ஸ், ஆபீஸ் கோயர்ஸ், நடுத்தர வயசு...இப்டி அல்லாரும் கலந்து கட்டி இருக்கற இடத்தில வூட்டை வாங்கி போடுங்க... வாள்க்கை லவ்லியாவும், லைவ்லியாவும் போகும்! நான் வடக்கு ஆண்டார் வீதில இருந்தப்ப, ஜனங்கலாம் கலந்து கட்டி இருந்ததுங்க.. //

இன்றும் நான் அதே இடத்தில்தான் வசித்து வருகிறேன் என்பதில் எனக்கோர் தனி சந்தோஷமாக உள்ளது.

அன்று நடந்த மற்ற லவ்லி மேட்டர்ஸ் இதோ இந்த என் பதிவினில் உள்ளது:

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

தலைப்பு: மறக்க மனம் கூடுதில்லையே !

sury siva said...

அன்றைய ஆண்டார் வீதியில் 1961 வரை ...
அதற்குப்பின் எப்போதாவது ஒரு முறை.
அண்மையில் சென்றபோது என் தலைமுறை

உண்மையில் ஓரிருவர் இருக்கத்தான் செய்கின்றார்.

அந்தக் காலத்துப் பரிவும் பாசமும்
ஆங்காகே இருக்கும் என்ற
ஆசை மட்டும் இருக்கிறது.

அடுத்த மாதம் வரும்போது
ஆரண்யத்துக்கு வரவேண்டும்.
ஆனைக்கா வீதியிலே
அந்தக் காலம் முதல் நடக்கும்
பஞ்சப்பிரகாரங்கள், பலகாரங்கள்
இன்றும் இருக்கின்றனவா என
பார்க்கவேண்டும்.

சுப்பு தாத்தா.

G.M Balasubramaniam said...

.இதை தவிர, 'காற்றில் இணை கையை தூக்கிக் கொண்டு வர, அதனை அப்படியே கன்னத்தில் வாங்கும் கலை'யை எனக்கு கற்றுக் கொடுத்த அஸ்திவாரம்......../ புரியலியே

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வைகோ சார்...அந்த போஸ்ட்மென் ரெண்டு பேரும் ஞாபகம் இல்லை...ரங்கராஜு என்கிற பொஸ்ட் மேன் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது...
தங்கள் வருகைக்கு நன்றி..
அதை விட ரொம்ப தேங்க்ஸ் மஞ்சு சிஸ்டர் போன்ற தங்களின் இந்த ஒண்ணரை கிலோ மீட்டர் விமர்சனத்திற்கும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அதென்ன சுப்பு தாத்தா!
சூர்யா சார்னு தான் கூப்பிடப் போறேன்...
தற்சமயம் US ல் இருக்கிறேன்...
நாளை கிளம்பி விடுவேன்...
அவசியம் ஆரண்யத்துக்கு வாங்கோ...
பஞ்சப்ப்ரகாரம் இருக்கிறது...பக்ஷஅண்மையில் தான் தெரியவில்லை ...
You are always welcome...
என் செல் நம்பர் தங்களிடம் இருக்கிறதா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பக்ஷணம் என்று திருத்திக் கொள்ளவும்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

GMB சார்...
தங்கள் வருகைக்கு நன்றி..'காற்றில் இணை கையை தூக்கிக் கொண்டு வர, அதை அப்படியே கன்னத்தில் வாங்குவது' என்பது மனைவி அறை கொடுத்தாள் என்கிற விஷயத்தை சற்று நாசுக்காய் சொல்கிறேன்...

ஜீவி said...

அத்தனைக்கும் நடுவே அந்தக் கவிதை ஜ்வலிப்புடன் ஒளிர்கிறது.

இப்போலாம் பின்னூட்டங்களுக்கு உங்கள் பதிலையும் பார்ப்பதில் அது என்னவோ தெரிலே, அதுலே அலாதி திருப்தி இருக்கு! சுவத்லே அடிச்ச பந்து திரும்பி வர்ற சுகம் இது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

⚽️🏐🏀🏉🏈🎱⚾️🎾
ஆஹா....தன்யனானேன் ஜீவி சார்!