நான் அதிகம் புதிய சினிமா பார்த்தவன் இல்லை ....
பார்ப்பதற்குரிய சந்தர்ப்பமும் இது வரை கிடையாது..
இப்போது தான் நிறைய புதிய படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம்..
வாரத்தில் பத்து பதினைந்து புதிய படங்களுக்கு மேல் பார்க்கிறேன்..
ஒன்று கூட மனதில் பதியவில்லை...
ஒரே குழப்பம்...'இந்த படத்தை தான் பார்த்தாச்சே...இல்லை இது வேற..ஊகூம்...அது தானே இது...' போன்ற குழப்பங்கள்...
ஒரே பார்முலா....ஒரே அடிதடி.....காமெடி போய் ஒவ்வொரு ப்ரேமிலும் காம நெடியாய்...
வயலன்ஸே சர்வ வியாபியாய் ...
கமர்ஷியல்....வசூல் என்பதே ப்ரதானமாய்...
இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு நம் நாட்டில் அறுபது விழுக்காடுகளுக்கு மேல் இளைஞர் தான் இருக்கிறார்கள்...இருக்கப் போகிறார்கள்...அந்த இளைஞர்களுக்கு Mass Visual Media என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் சமுதாய உணர்வு என்பது துளிக்கூட இல்லாமல், அவர்களால் வசூல் என்பதை மட்டுமே தாரகமாக கொண்டு எடுக்கப் படும் இத்தகைய மசாலா படங்கள் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறதோ?
Mass க்கு பிடித்ததைத் தான் நாங்கள் கொடுக்கிறோம், என்கிறார்கள், அவர்கள்.
அவர்கள் கொடுத்ததினால் தான் எங்களுக்கு பிடிக்கிறது என்கிறார்கள், இவர்கள்.
குற்றவாளிகளை விட, குற்றங்களை நியாயப்படுத்துபவர்கள் தான் நாட்டை கெடுக்கிறார்கள் கொஞ்சம் அதிகமாகவே!
எப்படி ஐயா, சாதாரணமாக ஒரு வீட்டை கட்டும்போது,செங்கல் வைத்து சுவர் எழுப்பும் வேலையை எலக்ட்ரீஷியனும், கதவு, ஜன்னல் போன்ற தச்சு வேலைகளை செய்ய பிளம்பரும் முன் வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாத நம்மால், கவர்ச்சி,காமெடி,Fight,Romance என்று சகலத்தையும் ஒரு ...ஒரே ஒரு ஹீரோ எடுத்துக் கொள்ளும் போது,எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது?
ஏதோ எனக்கு தோன்றியதை சொல்லி விட்டேன்...
ஒரு வழியாய் மனதிலிருந்த பாறாங்கல்லை மெள்ள மெள்ள நகர்த்தியாகி விட்டது..
அப்பாடா!
......
10 comments:
எப்படியும் எல்லோருக்கும் முந்தி, ‘கபாலி’ பார்த்து விடத்தான் போகிறீர்கள். பார்ப்போம்.
சில நல்ல படங்களும்....
காக்கா மூட்டை, விசாரணை,இறைவி,
அப்பா, அம்மாக் கணக்கு, போல
இந்தச் சூழலில் வருவதும்
கொஞ்சம் கமர்சியலாக ஓடுவதும்
கொஞ்சம் ஆறுதலளிக்கும் விஷயம்
அட..அட..எப்படி கண்டுபிடித்தீர்கள்,இளங்கோ சார்?
அட இதெல்லாம் நான் இங்கே பார்க்கவில்லையே!
நான் பார்த்த படங்களெல்லாம். சுத்தமாக மறந்து போய் விட்டது...
நினைவில் நின்றவை மான் கராத்தே, (violence கம்மி தான்), ரஜனி முருகன்,(வீடு வச்சிருக்கறவன் பாடெல்லாம் கஷ்டம்) தியெட்டர்ல பார்த்தது 2 சிவகுமார் டைம் மிஷின் படம்,அந்த பேய் படம் பார்ட் 2 (language தெரியாததினால் பயம் இல்லை அப்பாடா!) எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல கமலின் பாபநாசம்..ஹப்பா.....என்ன ஒரு வயலன்ஸ்?
இதெல்லாம் நிழல்...ஸ்வாதி கொலை நிஜம்!
எல்லாவற்றையும் விட நியூஸ் சேனலில் ட்ரம்ப்பின் காட்டு கத்தல்...
நம்மூர் ஆட்கள் தோற்றார்கள்...
நன்றி ரமணி சார்!
மிகச் சில நல்ல படங்கள் புதிய படங்கள் லிஸ்ட்டில் உண்டு. தெகிடி என்று ஒரு த்ரில்லர் அதில் ஒன்று. புது முகம் நடித்தது. ரமணி ஸார் சொல்லியிருக்கும் படங்களும் உண்டு. சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் குப்பை!
குப்பை என்று தயவு செய்து சொல்லாதீர்கள் ....ஶ்ரீராம்!
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாமாம்!
நீங்கள் திரைப்படங்களைப் பற்றிச் சொல்லியிருப்பது அப்படியே தமிழக பிரபல பத்திரிகைகளுக்கும் பொருந்தும். இலக்கியத்தைத் தவிர அத்தனையும். சினிமா என்பது சர்வ வியாபகம் எங்கணும். சோறு, தண்ணீர் கூட அடுத்தபடி தான் என்று எண்ணும் அளவுக்கு மக்களுக்குப் பிடித்திருப்பது அது ஒன்று தான் என்று தவறாகவோ சரியாகவோ கணக்குப் போட்டிருப்பது போலத் தெரிகிறது.
தில்லியில் பெரும்பாலும் சினிமா பார்க்க வாய்ப்பிருப்பதில்லை. வாய்ப்பு கிடைத்தாலும் போவதில்லை. டி.வி.யில் சில படங்களைப் பார்க்க நினைப்பதுண்டு. ஆனாலும் பாதிக்கு மேல் பார்க்க முடியல!
வணக்கம் ஜீவி சார்...தங்கள் கருத்துக்கு நன்றி..
உங்களுடைய தீவிர வாசகன் நான்...ப்ளாக்குக்கு எழுதிய புதிதில்.
திரும்பவும் அட்லீஸ்ட் மாதம் ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.
நன்றி, தங்கள் வருகைக்கும்!
தங்களின் கருத்து தான் எனக்கும்.
நன்றி வெங்கட்!
Post a Comment