Friday, July 1, 2011

அங்கார...இங்கார.....(2)


ஸ்ரீதர் எது கேட்டாலும் உடன் வாங்கி தந்து விடுவார்கள்..அவன் எது செய்தாலும் அங்கீகாரம் தான்..மறுப்பே கிடையாது..அவனுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணை உட்பட..
ஆம்...பையன் காலேஜ் பர்ஸ்ட் வந்தவுடன் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்க விரும்பினான்..படித்து முடித்ததும் அங்கேயே வேலை...பையன் தனக்குப் பிறகு கடையை பார்த்துக் கொள்வான் என்கிற நினைப்பில் விழுந்த அடி அது! இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்..
“ எந்த ஊர்லப்பா வேலை?”
“ லாஸ் ஏஞ்சல்ஸ் “
“ டேய்...எனக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் பார்க்கணும்னு ஆசை..என்னையும், உங்க அம்மாவையும் ஒரு தரம் கூட்டிட்டுப் போப்பா”
“ அப்பா,இப்பத் தான் நானே வேலைல சேர்ந்திருக்கேன்..அப்புறம் பார்க்கலாம், அதை!”
” நம்மூர் எப்பப்பா வருவே...”
“ ஒரு ரெண்டு வருஷமாவது ஆவும்!”
ஆனால், திடுதிப்பென்று வந்தான்,ஒரு நாள் . கூடவே ஒரு பெண்! இருவரும் சொல்லி வைத்தாற்போல் காலில் விழ, இவர்களிருவரும் திடுக்கிட, “ அப்பா..அம்மா..இது தான் ஜூலியட்..இவளை அங்கேயே சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டாகி விட்டது..உங்கள் ஆசிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூற, முதலில் சமாளித்துக் கொண்டவள் பார்வதி தான்!
”என்னங்க மசமசன்னு நிக்கறீங்களே..மருமக வந்திருக்கா..போய் முந்திரி பருப்பு, பால் வாங்கியாங்க..பால் பாயசம் பண்ணறேன்” என்று சொன்னவுடன் சுதாரித்துக் கொண்டு ஓடினார், நாடார் கடைக்கு!
மனம் மெள்ள அசை போடும்போது வலித்தது. ’ நம்ம குடும்ப பாரம்பர்யம் என்ன ...எத்தன வருட வேர் இது! எல்லாருக்கும் இப்படி ஒரு அவமானம் பண்ணி விட்டானே!’
மனம் குமையும் போது அவரை சமாதானம் பண்ணியது, பார்வதி தான்! “ வருத்தப் படாதீங்க..எல்லாத்தையும் விட நம்ம பையன் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்!
ஆமாம்...பையன் சந்தோஷம் தான் முக்கியம்...
அந்த வருகைக்குப் பிறகு, மாதம் ஒரு தடவை தான் பேசுவான்...அப்புறம் கொஞ்சம்..கொஞ்சமாகக் குறைந்து....எப்போதாவது தான் பேசுவான்..அவராலும் அவனை தொடர்பு கொள்ளத் தெரியவில்லை..ஏதோ ஒரு நம்பர் கொடுத்தான்..பெரும்பாலும் அவன் ஃபோனை எடுப்பதே இல்லை..அந்த வெள்ளைக் கார பெண் தான் எடுக்கிறாள் அவள் பேசும் இங்க்லீஷ் அவருக்கு சுத்தமாய் புரிவதே இல்லை..
அவர்கள் இருவரும் கடைசியாய் ஃபோனில் பேசிக் கொண்டது இது தான்:
“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆகியிருக்கா....”
” டேய் ஸ்ரீதர்....உங்க அம்மா செத்துப் போயிட்டாடா..!!!!!”
அவ்வளவு தான்.
தொடர்பு துண்டிக்கப் பட்டு விட்டது!

* * * * *
வார்டன் கடிதத்தை படிக்க ஆரம்பித்தார்..
“ அன்புள்ளம் கொண்டவர்களுக்கு ..”என்று ஆரம்பமே அசத்தலாக இருந்தது..சத்தம் போட்டு படிக்கட்டுமா என்று அவர் அங்கு கூடி இருந்தவர்களைக் கேட்க, எல்லாரும் சரி என்றார்கள்...
திடீரென்று வார்டனுக்கு சந்தேகம் வந்தது.
அவர் எந்த ஊர்?”
“ இந்த ஊர் தான்.. நம்ம வண்ணரப் பேட்டை தான்..இரும்பு யாபாரம்..மளிகைக் கடை நாடார் சொல்லக் கேள்வி”
“அவருக்கு சொந்தக் காரங்க யாராவது?”
” போன வருஷம் தான் இவங்க சம்சாரம் செத்துப் போனாங்களாம்..இதுவும் அந்த நாடார் தான் சொன்னார்.....”
”காயிதத்தை மேல படிங்க, வார்டன் சார்”
கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார், வார்டன்.

18 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
மனசை அசைக்கிறது.

நிலாமகள் said...

ஸ்ரீத‌ர் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ம‌ன‌தை தைக்கும்ப‌டி அக்க‌டித‌த்தில் என்ன‌ எழுதியிருக்கும்....?

முனைவர் இரா.குணசீலன் said...

கதைபோல இல்லை அன்பரே இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் பண்பாடு படும் பாடு இதுதான்..


அப்பா - ஏம்மா நேற்று உனக்கு கல்யாணம் நடந்துச்சாம்ல. ஏன் எனக்கிட்ட சொல்லல?

மகள் - ஆமாப்பா வேலையா இருந்திட்டேன். அதால மறந்துட்டேன். அடுத்தமுறை கல்யாணம் செய்யும்போத நிச்சயமா சொல்றேன்பா!!!!!

என்று ஒரு நகைச்சுவை படித்தேன்.

இன்று இதுதான் நடந்துகொண்டிருக்கிறது பண்பாட்டுப்படையெடுப்புகள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

இன்று நாம் யாரையும் எதிர்த்துப் போராடவேண்டியதில்லை நம்மைநாமே எதிர்த்துக் கேள்விகேட்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.

பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளைத் தூண்டுகிறது கதை தொடருங்கள் அன்பரே..

;)

முனைவர் இரா.குணசீலன் said...

ஐயா தங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டுமே.

வலைப்பக்கத்தி்ல் ப்ரொபைல் பக்கம் எங்கே..?

RAMA RAVI (RAMVI) said...

கதை மனதை உலுக்கும் விதமாக உள்ளது..இன்றுதான் இரண்டு பகுதிகளையும் படித்தேன் ராமமூர்த்தி சார்...கடிதத்தில் அப்படி என்னதான் இருக்கும் என்று ஆவலாக இருக்கிறது.. அடுத்த பகுதியை விறைவில் எதிர்பார்க்கிறேன்....

middleclassmadhavi said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா?!!

அப்பாதுரை said...

சுருக்கமாக எழுதினாலும் சுருக். தொடருங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை இன்றைய யதார்த்தமாகவும், மனதுக்கு மிகவும் நெருடலாகவும் உள்ளது. சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லுகிறீர்கள். பாராட்டுக்கள். தொடருங்கள்.....
அன்புடன் vgk

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

யதார்த்தம் + விறுவிறுப்பு = மூவார்முத்து.

ரிஷபன் said...

“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆகியிருக்கா....”
” டேய் ஸ்ரீதர்....உங்க அம்மா செத்துப் போயிட்டாடா..!!!!!”

அம்மாதான் அங்கார போயிட்டாளா மறு பிறவிக்கு?
விறுவிறுப்பாய் போகிறது.

மோகன்ஜி said...

மூவார்! புரியுது.. ஒரு திட்டத்தோட தான் இதைகிக் கொண்டு போறீங்க.. என்னவா இருக்கும்?! கதை சொல்லலில் காட்சிகள் கண்முன் விரிகின்றன.. வாழ்த்துக்கள் !

A.R.ராஜகோபாலன் said...

கதை மனதை
கதையால் அடிக்கும் வேளையிலே
நிறுத்திவிட்டீர்களே சார்
அடுத்த பகுதியை உடனே பதிவிட முடியுமா ???

தக்குடு said...

இது கதை இல்லை சார், எல்லா இடத்துலையும் நடக்க ஆரம்பித்து இருக்கும் கலாசார சீரளிவு இது. நம்முடைய சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக பணத்துக்கும், வீண் பகட்டுக்கும் விற்று வருகிறோம். நானும் கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்து நிற்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் சிறுகதை... சிறு சிறு பகுதிகளாய் வெளியிடுவது எங்களுக்கு இன்னும் அதிக ஆர்வத்தினை வெளிப் படுத்தி உள்ளது..

“அப்பா..அப்பா..ஒரு குட் நியூஸ்...ஜூலியட் கன்ஸீவ் ஆகியிருக்கா....”
” டேய் ஸ்ரீதர்....உங்க அம்மா செத்துப் போயிட்டாடா..!!!!!”

அதிர்ச்சி தந்த கடிதம்....

Thenammai Lakshmanan said...

உறவுமுறைகள் இன்று இப்படித்தான் இருக்கின்றன. ஆர் ஆர் ஆர். :((

ADHI VENKAT said...

விறுவிறுப்பாக செல்கிறது. அந்த கடிதத்தில் என்ன தான் எழுதியிருந்தது.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

கடிதம் படிக்கக் காத்திருக்கிறோம்.

நிலாமகள் said...

எங்க‌ளையெல்லாம் நின்ன‌ நிலையிலேயே விட்டுட்டு எங்க‌தான் போவீங்க‌ ச‌கோ...? க‌டித‌ம் எங்காச்சும் காத்துல‌ ப‌ற‌ந்துட‌ப் போகுது... சீக்கிர‌மா வாங்க‌ளேன்.