நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Thursday, June 23, 2011
அங்கார...இங்கார.....(கதை ஆரம்பிச்சாச்சு!!)
அந்த ’பத்துக்கு ஆறு’சைஸ் ரூமில் அவர்..சாரி..’அது’ அந்த மரக்கட்டிலில் மல்லாந்து கிடக்க, பக்கத்து டேபிளில் ஒரு பேப்பர் காற்றினால் படபடத்துக் கொண்டிருந்தது. விடுதி காப்பாளர் வந்த பின்பு அந்த பேப்பரை எடுக்கலாம் என்று பிச்சுவையர் சொல்லவே, அங்கு கூடியிருந்த எல்லோரும், விடுதி காப்பாளருக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
* * * *
"அங்கார..இங்கார நாமம் சார்த்தி,
அனுதினமும்..அனுதினமும் கரம் கூப்பி,
சிங்கார தேவனே சீனிவாஸா...
சீரங்கத்துப் பெருமாள..சேவிக்கப் போறோம்..போறோம்..அங்கார..
’போறோம் அங்கார..’என்பதில் ஒரு ஜெர்க் கொடுத்து, அந்த மரக்குதிரையை ரங்க சுந்தரம் ஆட்ட, குழந்தை ஸ்ரீதர் மழலையில் ’போதோம்..அங்காத..’என்று பாடினான்.
வண்ணாரப் பேட்டையில் ரங்கசுந்தரம் வீடு என்றால் சிறு குழந்தை கூட அடையாளம் காட்டும்,தன் கண்களை அகல விரித்துக் கொண்டு!பாகம் பிரித்து அவருக்கு வந்த வகை பணம்,அது தவிர கொஞ்சம் கடனும் வாங்கி ரங்கசுந்தரம் அந்த பழைய வீட்டை வாங்கினார்.அவர் அதிர்ஷ்டம் அந்த உத்திரத்து தேக்கின் மதிப்பு விற்பவனுக்குத் தெரியவில்லை!
’நமக்குத் தான் குழந்தை இல்லையே, எதுக்குங்க, இவ்வளவு பெரிய வீடு’ என்ற பார்வதியை சமாதானப் படுத்தினார்.அவர் நினைத்தது போலவே, அடுத்த ஐந்தாவது வருடம் பிசினசில் நல்ல லாபம்..வீட்டை கானாடுகாத்தான் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடு போல் ஆக்க, அடுத்த இரண்டாவது வருடம் ஸ்ரீதர் பிறந்தான்!
பெரிய குடை கவிழ்ந்தார்போன்ற கும்மிருட்டை ஒரு சிறு அகல் விரட்டுவதைப் போல் வீட்டின் அமைதியை தன் மழலையால் விரட்டி விட்டது குழந்தை சட்டென்று!
மத்தியானம் சாப்பிட வரும் போது ஒரு அரை மணி நேரம் அவனுடன் விளையாடி விட்டுத் தான் சாப்பிட அமர்வார்.வாராது வந்த மாமணி ஆதலால் அவனுக்கு அப்பாவும் செல்லம்..அம்மாவும் செல்லம்!
’அப்பா..அப்பா ஆததிச்சா..அம்மா அதிச்சா..எப்டீ அதிச்சா..பல்தி அதிச்சா’ என்று குட்டிக் கரணம் போட்டு குதூகலம் உண்டாக்குவான், சமயத்திலே!
* * * *
”வந்தாச்சு...சார் வந்தாச்சு வழி விடுங்க..”
வார்டன் வந்தார்.
“என்னாச்சு?”
“ ஒண்ணும் தெரியலே! போன வாரம் தான் வந்தார். வரும்போதே கண்ல சோகம் தெரிந்தது..’இது என்ன சந்தேகம்,எல்லார் வீட்லையும் போல், இவரும் புள்ள, மருமகளுக்கும் ஒத்துக்காமத் தான் இங்க வராருன்னு’ நினைச்சோம். ஆனா, நேத்து நைட்டு வாய் விட்டு அழுத சத்தம் கேட்டது..போய் பாக்கலாம்னா, உடம்பு இடம் கொடுக்கல..கார்த்தால பார்ப்போம்னு படுத்துண்டுட்டேன். கார்த்தாலப் பார்த்தா..இப்படி..”
“தற்கொலையா இருக்குமோ? போலீஸ்க்கு இன்ஃப்ர்ம் பண்ணனுமா?”
”அதெல்லாம் இல்ல..மாஸிவ் ஹார்ட் அட்டாக் டாக்டர் கன்ஃப்ர்ம் பண்ணினார்”
” உறவுக்காரங்க..யாராவது?”
”ஒருத்தரும் இல்லைன்னு தான் சொன்னார்..அந்த டேபிள் மேல் ஒரு காயிதம் இருக்கு..உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கோம்”
“கொண்டாங்க”
அதனை உரத்தக் குரலில் படிக்க ஆரம்பித்தார், வார்டன்.
* * * * * *
(இதன் தொடர்ச்சி அடுத்த 01.07.2011 அன்று வெளியிடப்படும்)
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
இது அடுத்த சிறுகதை அல்லது தொடர்கதைக்கு முன்னோட்டமா ஆர் ஆர் ஆர் :))
தொடர் சிறுகதை? சஸ்பென்சோடு ஆரம்பமாகியிருக்கு..
சார் இப்படியா suspenseல் நிறுத்துவது? அந்த ’கூடிய
விறைவு’ நாளையே இருக்குமா? ஆர்வமாக இருக்கிறது.
அது என்ன சஸ்பென்ஸ்?
டிரெய்லரா...! தலைப்பும் தொடக்கமும் படுபரபரப்பாய்....!! கலக்குங்க....ம்ம்ம்.
’எப்போது?’ என்கிற சஸ்பென்ஸ்... ’எப்படியிருக்கும்?’என்கிற சஸ்பென்ஸ்....அடாடா சீட்டு நுனியில் அமர வைத்து விட்டீர்களே,சார்....
ஏழே வரியில்
எங்களின்
எதிர்பார்ப்புகளை
எகிற வைத்துவிடீர்களே சார்
அருமையான விளம்பரம்.
”இந்தியத் தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக புத்தம் புதிய திரைப்படம் - சூப்பர் ஸ்டார் நடித்தது - காணத்தவறாதீர்கள்”
என்ற ஞாபகம் வருதே!
புரியலையே?
அட அடுத்த பதிவுக்கான முன்னோட்டம்…. இது கூட நல்லாத்தேன் இருக்கு! சீக்கிரமா முழு பதிவு போடுங்க! சஸ்பென்ஸ் தாங்கல…
டீசர் ஆட் போட்டு ஒரு தொடரா?.... ஆரம்பமே அமர்க்களம்.. 'தொடர்'பூஜை எப்போது? ;-))
அங்கு கூடியிருந்த எல்லோரும், விடுதி காப்பாளருக்காக காத்துக் கொண்டிருந்தனர்
எப்போ வருவாரோ...
டிரெய்லரே அதிருதுல்ல!!!!!!!
முழுப்பதிவுக்கு காத்திருக்கிறோம்.
இப்படியெல்லாம் டென்ஷன் பண்ணக் கூடாது..
கூடிய விரைவில் RAMVI!!!!!
அட! சூப்பரா ஆரம்பிச்சு சஸ்பென்ஸ்ல நிறுத்தியாச்சு.
பாட்டு முடிந்து வார் ரீல் அல்லது நியூஸ் ரீல் போட்டுக் கொண்டிருக்கும் டெண்ட் கொட்டாயில் பரபரப்பாக வரிசையில் நகரும் பிரகஸ்பதி டிக்கெட் வாங்கும் சமயம் படத்தைப் போட்டுவிட அடித்துப் பிடித்து ஓடுவது போல் 'கதை ஆரம்பிச்சாச்சு' என்றதைப் பார்த்து ஓடிவந்தால், மறுபடி தவிக்க விட்டாச்சா...! நகைச்சுவையோடு திரில்லர் சஸ்பென்ஸெல்லாம் ஒரு கை பார்த்துடறதாயிருக்கீங்க போலிருக்கு.
அந்தக் கொழந்தையோட மழலை ரொம்ப அழகு. அந்த சாஞ்சாடிய பாட்டும்!
தல! என் என் பின்னூட்டங்கள் கொஞ்ச நாளா காணாமப் போகுது.. காத்திருக்கணும் கொஞ்ச நேரம்!
Post a Comment