Saturday, June 5, 2010

எங்கே எம் குழந்தைகள்????????


புத்தகப் பை சுமந்து,
பாரம் தாங்காமல்,
தலை கவித்து,
கண்களில் வெறுமை
பொங்க..
ஊக்க ஊசி ஏற்றி,
ரேஸில்,
ஓடப் போகும்,
குதிரைக் குட்டிகளைத்
தான்,
வழி நெடுங்கும்,
காண்கிறேன்..
கன்றுகுட்டிப்
போல்,
துள்ளி குதித்து,
குழந்தைமையுடன்,
ஓடி விளையாடும்
எம் குழந்தைகள்,
முப்பது, முப்பத்தைந்து..
வருடங்களாக,
எங்கு போய்,
ஒளிந்து கொண்டன?
அன்று,
குழந்தைகள் புஸ்தகங்களைக்
கிழித்துக் கொண்டிருந்தன...
இன்றோ,
புஸ்தகங்கள்
எம் குழந்தைகளைக்
கிழித்துக் கொண்டிருக்கின்றன !!!!

14 comments:

துரோகி said...

என்ன செய்யிறது? we have no choice now!

கே. பி. ஜனா... said...

உங்கள் கவிதை நல்ல கருத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது!

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

Anonymous said...

Its like Abdul Rahman's kavidhai..Especially the last few lines!

பித்தனில் இருந்து "புத்தகம்"
பித்தனில் இருந்து "புத்தகம்"
புத்தகம்
--------
பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்...

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை..

ரிஷபன் said...

இன்னும் பல வருடங்கள் போனாலும் சொல்லக் கூடிய வரிகள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தன்னிலை விளக்கம்: தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ராதை மேடம்.கடைசி வரிகள் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வரிகள். என்னையும் மீறி அந்த வார்த்தைகள் அந்த இடத்தில் வந்து ஜம்மென்று உட்கார்ந்து கொண்டன. திரு அப்துல் ரஹ்மான் ஸார் அடியேனை மன்னிப்பாராக!

தவறு நேர்ந்ததற்கு வருத்தத்துடன்,

ஆர்.ஆர்.ஆர்.

வெங்கட் நாகராஜ் said...

புத்தக மூட்டையை சுமந்து நிறைய குழந்தைகள் கூனர்களாக ஆகிக் கொண்டு இருக்கும் அவலத்தை அழகாக சொல்லி இருக்கீங்க சார்.

அண்ணாமலை..!! said...

சரியா..ன கேள்விகள் நண்பரே!!!!
நல்ல கவிதையாகவும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலமையை நீங்களும் கிழி கிழியென்று கிழித்து விட்டீர்கள் !

Riyas said...

//துள்ளி குதித்து,
குழந்தைமையுடன்,
ஓடி விளையாடும்
எம் குழந்தைகள்,
முப்பது, முப்பத்தைந்து..
வருடங்களாக,
எங்கு போய்,
ஒளிந்து கொண்டன?//

அருமையான கவிதை வாழ்த்துக்கள்..

மாதேவி said...

இன்றைய குழந்தைகளின் சுமையை அழகாகச்சொல்லிவிட்டீர்கள்.

Thenammai Lakshmanan said...

புத்தகங்கள் குழந்தைகளைக் கிழிப்பது,,ம்ம்ம்ம் புதுமையான வார்த்தை.. வலியுடன்,,..

ராம மூர்த்தி கவிதை அருமை

கமலேஷ் said...

அருமையான கவிதை நண்பரே...
அழகான கருத்து...
வாழ்த்துக்கள்..

Anonymous said...

ஆர் ஆர் ஆர் சார்.. திடீரென்று நியாபகம் வந்தது.. சொன்னேன்.

நாம் ரசிக்கும் விஷயங்கள் நம் படைப்புகளில் வெளிப்படுவது இயற்கை என்றே நான் எண்ணுகிறேன்.

அன்புடன்
ராதை