Saturday, June 12, 2010

ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....

நீ............ள்........பதிவு நெ.1


வீடு நீங்கும் படலம்

ரொம்ப நாளாகி விட்டது, எல்லாருமாய் டூர் போய் என்று நினைத்துக் கொண்டோம். பேசிக் கொண்டிருக்கும் போதே, என் பெண் யாருக்கோ ஃபோன் பண்ணினாள். அங்கிருந்து இரண்டு தடவை ஃபோன் வந்தது!
'என்னப்பா...போலாமா'
நான் பதில் சொல்வதற்குள், ஒரு ஃபோன் வர,
இப்படித் தான் 'க்ளிக்'காகியது, எங்கள் இனிய பயணம்.
என் குடும்பம்(நால்வர்), நண்பர் சுப்ரமணியம் குடும்பம் (மூவர்)(பேசிக்கொண்டே வந்ததில் இவர் எனக்கு உறவுக்காரர் என்பது பிறகு தெரிந்தது)
நண்பர் மோஹன் குடும்பம் (நால்வர்) என்று மொத்தம் 11 பேர் கிளம்புவதாகப் ப்ளான்!
அந்த 11 பேரும் இதோ உங்கள் முன்!நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த இனிய ஞாயிறும் வந்தது. எனக்குத் தான் கடைசி வரை ஊர் வேலை! டூர் போகும் மூடே வராமல், மசமசவென்று இருந்தேன்! ஒருவாறு, குளித்து முடித்து, துணிகளை 'அயர்ன்' செய்து கொண்டிருக்கும் போது, அம்மா 'எல்லாரும் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு' என்று ஒரு காட்டுக்கூச்சல்! அரக்க,பரக்க ஏதோ வயிற்றிலும், வாயிலும் அடைத்துக் கொண்டு அடுத்த ஐந்தாம் நிமிடம் நாங்களும் ரெடியாகி, வாசலில் தயாராய் நின்றிருந்த ஆட்டோவில் பிரித்விராஜ் சௌஹான் ராணி ஸம்யுக்தையை தூக்கிக் கொள்வது போல் ஆளுக்கொரு லக்கேஜைத் தூக்கிக் கொண்டு பறந்தோம்!
அடுத்த அரை மணியில் பஸ் ஸ்டாப்!
எங்கள் பஸ் ஸ்டாப்பில் நாங்கள் வெயிட் பண்ண, மறுபடியும் ஒரு ஃபோன்!
' நீல நிற அரசுப் பேருந்து, இதோ உங்கள் முன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, இரண்டு ஜோடி கரங்கள் நட்புடன் கை ஆட்ட, பஸ்சினுள் ஏறினோம்!
எனக்குத் தான் உள்ளூர ஒரு குடைச்சல்! அவசரத்தில் ஏதாவது மறந்து வைத்து விட்டு வந்து விட்டோமோ என்று!
முழுதாய் நான்கு மணி நேரத்தை சாப்பிட்டுவிட்டு, ஈரோடு வந்தது. ஜங்ஷன் ஸ்டாப்பில் எல்லாரும் இறங்க, நான் ரொம்பவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இன்னொருத்தர் சூட்கஸையும் எடுக்க..அவர் அலற ..செம காமெடி!
இந்த சம்பவத்தினால் எதையோ மறந்து வைத்து விட்டு கிளம்பினோமோ என்ற குடைச்சல் போயிந்தி!
அப்பாடா..ஒரு வழியாய் ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு!!
அது சரி, நீங்க சொல்ல வந்த விஷயத்திற்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அடுத்த பதிவில் சொல்கிறேனே..

12 comments:

Riyas said...

எங்கே,,,?

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_13.html

:-)

VAI. GOPALAKRISHNAN said...

தங்கள் இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள்.
பயணம் செய்யும் போது தங்கள் நகைகள் ஜாக்கிரதை.

பயணத்தின் போது நகைச்சுவையை மட்டும் கொள்ளையடிக்க நாங்கள் ரெடியாகிவிட்டோம்.

ரிஷபன் said...

நாங்களும் ரெடி! லக்கேஜ் இல்லாமல்! ஹப்பாடி.. இந்த மாதிரி உட்கார்ந்த இடத்துல எல்லாம் பார்க்கற சௌகர்யம் என்ன ஜோர்.

கமலேஷ் said...

தொடருங்கள்..நண்பரே...வாழ்த்துக்கள்..

asiya omar said...

உங்கள் ப்ரொஃபைல் பார்த்தேன்,என்னுடைய வாழ்த்துக்கள்.குரூப் போட்டோ சூப்பர்.பிக்னிக்கிலும் பயணக்கட்டுரை போல் தொடருமா?நன்று.

அஹமது இர்ஷாத் said...

இந்த மாதிரி பயண கட்டுரை படிக்கும்பொழுது மனதிற்குள் ஒரு சந்தோஷம்..

சி. கருணாகரசு said...

இப்ப ஏமாத்திட்டிங்க.... அடுத்ததிலாவது சொல்லுங்க.

K.B.JANARTHANAN said...

பயணம் ஜோர் ஆரம்பம்!

Chitra said...

It is a nice photo. the post is good too.

தொடருங்க, சார்!

வலைச்சரத்தில் padiththeergalaa?
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_13.html

thenammailakshmanan said...

எங்கேதான் போனீங்க ராமமூர்த்தி.. இந்த ஃபோட்டோவில் நீங்க யாரு..?

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

Thennammai Madam,

Pl. view my another blog:
betaofbusinessthoughts.blogspot.com