Sunday, May 23, 2010

கர்ப்ப வாச சிசு!


மூன்று வயதில்..
prekg,
நாலில் Lkg,
ஆறாம் வயதில்,
ஐந்து kg
புக்ஸ்,
கூடவே...
பாட்டு,மிருதங்கம்,
ஹிந்தி,கராத்தே..
க்ளாஸ்கள்..
பத்தாம் க்ளாஸ்
வரை
பதட்டம்...
பதினொன்று,
பன்னிரெண்டில்,
பரபரப்பு..
ரேஸ் குதிரைக்கு,
ஊட்டம் போல..
ட்யூஷன் க்ளாஸ்..
அதன் பிறகு,
engineering admission...
படிப்பு முடிந்ததும்,
campus selection..
அடக் கடவுளே....
நமக்கே நமக்காக,
இங்கு
வாழ முடியாதா?
வெளியில் நடக்கும்,
அவலங்களைப்
பார்த்து,
கர்ப்ப வாச சிசு
பயத்துடன்
கதறியது..
" அம்மா...என்னை
அழித்து விடு ....!!!!!"

10 comments:

வசந்தமுல்லை said...

அடக் கடவுளே....
நமக்கே நமக்காக,
இங்கு
வாழ முடியாதா?

வயிற்றில் இருக்கும் சிசு அலறுவது , நான் என் அம்மாவின் இருந்து கதறுவது போல் உணர்ந்தேன். அந்த வரியின் உயிரோட்டம் என் மனதில் இன்னும் வருடுவது போல் இருக்கிறது!

வசந்தமுல்லை said...
This comment has been removed by the author.
கமலேஷ் said...

நன்றாக உள்ளது தோழரே...

கே. பி. ஜனா... said...

//மூன்று வயதில்..
prekg,
நாலில் Lkg,
ஆறாம் வயதில்,
ஐந்து kg //

பிரமாதம்!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மக்கா.

வெங்கட் நாகராஜ் said...

பிறந்ததிலிருந்தே கருத்துத் திணிப்புகள் - பிரமாதமாக சொல்லியிருக்கீங்க சார்.

பத்மா said...

கடவுளே கஷ்டமாயிருக்கு ஆனா இதானே உண்மை

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆங்காங்கே நடைபெறும் கருக்கலைப்புகளுக்கு, இது போன்ற கர்ப்ப வாச சிசுக்களின் பயத்துடன் கூடிய கதறல்களும், கோரிக்கைகளும் தான் காரணமாக இருக்குமோ !

simariba said...

உண்மை! பிறந்ததிலிருந்து மற்றவர் வகுத்த வழியிலேயே ஓடி ஓடி, தனி மனிதத் தன்மையை இழந்து தவிக்கிறோம். மிக நன்றாக உள்ளது !!!

vasan said...

ஆசை, போராசையானிதின் அவ‌ல‌ம்.
"த‌ன‌க்கென‌ வாழாது பிறர்கென‌ வாழ்த‌லை"
த‌வ‌றாய் புரிந்து,த‌ன்நிலைக்கு வாழாது
பிற‌ர் ம‌திக்கும் நிலைக்கு வாழ‌, வ‌லிந்து
சில‌ பொய்முகமூடிய‌ணிந்து சுய‌மிழ‌ந்து
வ‌லி சும‌க்கிற‌ர்க‌ள் வாழ்க்கை முழுவ‌தும்.