Saturday, May 22, 2010

இன்றாவது.........


இலைகள் உதிர்வது
போல்,
ஒவ்வொரு நாளும்
உதிர்ந்து,
கொண்டு
இருக்கிறது...
காலக் கண்ணாடி
பெட்டகத்தின்,
முட்கள் வேகமாக,
நகருகின்றன..
பருவ நிலை,
காலத்திற்குத்
தகுந்தாற் போல்,
மாறுகிறது..
எதையும்
தடுக்க முடியாமல்,
அசக்தனாகி...
இயற்கையின் வேகத்துக்கு,
ஈடு கொடுக்க,
இயலாமல்
தேய்ந்து கொண்டிருக்கிறோம்..
நாமுமே...!!!!!!

8 comments:

Chitra said...

இயற்கையின் வேகத்துக்கு,
ஈடு கொடுக்க,
இயலாமல்
தேய்ந்து கொண்டிருக்கிறோம்..
நாமுமே...!!!!!!


...... அருமையா சொல்லி இருக்கீங்க....

ரிஷபன் said...

நாம் எதையும் தடுக்க வேண்டாம்.. இன்றாவது நம் வாழ்வை அர்த்தப்படுத்தும் ஏதேனும் ஒரு செயலை.. வார்த்தையை.. செய்து விடுவோம்.. இந்தக் கவிதையைப் போல..

எல் கே said...

arumai

வை.கோபாலகிருஷ்ணன் said...

"இன்றாவது" தேய்ந்து அசக்தனாகி விட்டதை நீர் உணர்ந்துள்ளது, உமது தலைக்குள் ஏற்பட்டுள்ள அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிறது. எனக்கு அதுவே வெளியேயும் பளபளப்புடன் பிரதிபலிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு annual increment போல நமக்கும் ஒரு வயது ஏறி வருகிறது. வெய்யிலோ, மழையோ, காற்றோ, குளிரோ தாங்க முடியாமல் அவதிப்படுகிறோம். வயது ஏற ஏற தாங்கும் சக்தி + எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. அதன் தாக்கமோ என்னமோ “இன்றாவது” கவிதை; ஆனால் நன்றாகவே உள்ளது.

வசந்தமுல்லை said...

இலைகள் உதிர்வது
போல்,
ஒவ்வொரு நாளும்
உதிர்ந்து,
கொண்டு
இருக்கிறது...

இன்றுதான் காலையில்தான் காலம் எப்படியெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று காலத்தைப் பற்றி யோசித்து கொண்டிருந்தேன். உங்கள் கவிதை அதற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. கிரேட்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. காலம் வேகமாக ஓடிக்கொண்டு இருப்பதை இதைவிட அழகாக சொல்லமுடியும் என தோணவில்லை.

விஜய் மகேந்திரன் said...

உங்களின் தொடர் வருகைக்கு நன்றி ராமமூர்த்தி,
அன்புடன்
விஜய் மகேந்திரன்

பத்மா said...

காலம் போகும் நாமும் அதோடு உருப்படியாகப் போவோம் ..
நல்ல சிந்தனையினால் விளைந்த கவிதை