Saturday, May 8, 2010

பூக்களே சிரிக்காதீர்கள் !!!!


தோட்டத்திற்கு
சென்றேன்...
இன்று எத்தனை
மனிதரை
புண்படுத்தினாய்...
எத்தனை பேர்
மனதைக்
காயப் படுத்தினாய்...
எத்தனை பேரை
மொக்கை ஜோக்
கடி ஜோக்
சொல்கிறேன்
என்று
சொல்லி
சங்கடப்படுத்தினாய்..
சொல்.. மனிதா..சொல்..
என்று
கொல்லென்று
சிரித்தாள்
இயற்கை,
பூக்கள் வழியாக..!!!!!!!
*
இரண்டு பக்கமும்
பார்த்து,
வெகு ஜாக்கிரதையாய்...
தேசிய நெடுஞ்சாலையை,
கடந்து சென்றது
மாடு ஒன்று,
மனிதன் போல்
அல்லாமல்!!!!!!!
*
என்னை தூக்கிக் கொள்..
எடுத்துக் கொள்..
என்றன,
கடையிலிருந்து
காய்கறிகள்..
ஆனால்,
அதன் கோரிக்கைகள்
நிறைவேறவில்லை..
காரணம்......
என் பர்ஸ்,
பலவீனமாயிருந்தது,
அப்போது!!!

10 comments:

பத்மா said...

இரண்டு பக்கமும்
பார்த்து,
வெகு ஜாக்கிரதையாய்...
தேசிய நெடுஞ்சாலையை,
கடந்து சென்றது
மாடு ஒன்று,
மனிதன் போல்
அல்லாமல்!!!!!!!

நச் வரிகள் பாராட்டுகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

1) கொல்லென்று சிரித்த அந்தப்பூக்களையாவது காயப்படுத்தாமல், புண்படுத்தாமல், சங்கடப்படுத்தாமல் வந்தீர்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

2) ஆறறிவும், வாய்ச்சவடாலும் உள்ளவன் மனிதன்.
அவன் என்ன ஐந்தறிவு உள்ள வாயில்லாப்பிராணியா? தெருவை இருபுறமும் பார்த்து பயந்து கொண்டே கடக்க; ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற துணிவு உள்ளவனய்யா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவ்வப்போது பச்சைக்காய்கறிகளை நீங்கள் சாப்பிடும் போது உங்கள் பர்ஸுக்கும் ஊட்டி வந்திருந்தால் அது பலகீனமாக இல்லாமல் புஷ்டியாக இருந்திருக்கும்!

கமலேஷ் said...

நல்லா இருக்கு நண்பரே...

ரிஷபன் said...

முக்கனிகள்! இனித்தன..

Chitra said...

அருமையான கவிதை தொகுப்பு. :-)

கே. பி. ஜனா... said...

மாட்டுக்கு ஒரே கவனம், மனிதனுக்கு பல... கவிதை பிரமாதம்!

வசந்தமுல்லை said...

arumai nanbare

சுந்தரா said...

அருமை!

ரெண்டும் மூணும் ரொம்ப நல்லாருக்கு.