Wednesday, February 24, 2010

ஜல்லிகட்டு!!


அந்த இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.ஆங்காங்கே அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அனைத்து வயதுக் காரர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். மரணத்தின் விளிம்பில் உள்ள வயசாளிகளும் கொஞ்சம் நேரம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மௌனம் காத்தார்கள்!

அங்கே உள்ள கூட்டத்தைத் தவிர, இந்த நிகழ்ச்சியை 'டி.வி'.யிலும் 'டெலிகாஸ்ட்'
செய்வதால், எல்லா மக்களும் டி.வி. முன் வேறு தவம் இருந்தனர்.

என்ன ஒரு குரூரத்தனமான விளையாட்டு இது! ஒவ்வொரு முறையும், வெவ்வேறு விதமாய் மனிதர்கள் ரத்தம் சிந்துகிறார்கள்.
ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ..... ஆடம்பரம்..
எட்டு திக்கு விளம்பரங்கள்.ஊரே பரவசமாய் இதைப் பற்றி பேசுவார்கள். ஆனால் முடியும் போது எல்லார் முகத்திலும் பேஸ்து அடித்தாற்போல் ஒரு வெறுமை ! ஆனால், அடுத்த ஆண்டு வரும்போது, எல்லாருக்குமே...எல்லாமே மறந்து போய் ஒரு பரவசத்துடன்....ஒரு எதிர்பார்ப்பு தொக்கி நிற்க....
" எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " என்று ஒருவன் குஷியாகப் பாடிக்
கொண்டே செல்ல..அங்கு கூடி இருந்த அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு மைக்கில் ஒலி பரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
" இதோ இன்னும் ஐந்தே..ஐந்து நிமிஷத்தில், நாம் எல்லாரும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீலவேணி வருகிறான்.....வந்து கொண்டே இருக்கிறான்...இதோ..."
ஒரு பரபரப்பு எல்லாரிடமும் தொற்றிக் கொள்ள, ஜல்..ஜல்..என்று சலங்கைகள் கட்டியம் கூற, மெள்ள நடந்து வந்தான், நீலவேணி.
பிறந்ததில் இருந்து ஒட்டஒட்ட தாய்ப் பால் குடித்து வளர்ந்தவன் தான் இந்த நீலவேணி. தாய் பால் மட்டுமே குடித்து வளர்ந்ததால் அப்படி ஒரு புஷ்டி! ஆள் பார்க்க கம்பீரம்! இதில் கொம்பை ஒட்ட சீவி வைத்திருந்தார்கள். அதில் எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, பளபளவென்று இருந்தது. குத்தினால், வலியை விட எரிச்சல் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் காரணம்!


எல்லாருடைய கண்களும் நீலவேணியையேப் பார்த்துக் கொண்டு இருக்க..அதோ அங்கே ஒருவன் வெகு தைரியமாய்....!!

வந்தவனைப் பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்கிறது. நீலவேணி அவனை கொம்பால் குத்தாமல்,அப்படியே அலாக்காகத் தூக்கி,
பக்கத்தில் உள்ள பழங்கள் காய்த்துத் தொங்கும் மரத்தில் போட..எல்லாரும் அந்த பணக்காரப் பையன் வீட்டுக் கன்றுகுட்டி தான் நீலவேணி என்று பேசிக் கொண்டார்கள்!

அடுத்து வந்தவனைப் பார்த்தால் சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு ,ஆபீஸ் போகிறவன் போல், பேண்ட்,ஷர்ட்டில் வர,
ஆக்ரோஷத்துடன் நீலவேணி அவன் மேல் பாய்ந்து, புரட்டி..புரட்டி எடுக்க, பரிதாபமாய் குடல் சரிந்து அவன் விழ..ஆம்புலன்ஸ் வந்து அழைத்து சென்றார்கள்!
அவனை ICU வில் வைத்து..VENTILATOR மாட்டி, எதுவும் இருபத்திநான்கு மணி நேரம் கழித்துத் தான் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள்!!

அதோ அங்கே ஒருவன் வருகிறான். அவனைப் பார்த்தாலே
பஞ்சத்தால் அடிபட்டவனைப் போல இருக்கிறது. அவனையும் சின்னாபின்னப் படுத்தி ஓய்ந்தது நீலவேணி!

எல்லாரையும் ரணப்படுத்தி விட்டு ஜல்..ஜல்.. என்று சலங்கை ஒலி முழங்க...
கொட்டிலுக்கு நீலவேணி செல்ல..

பலத்த கரகோஷம் வானைப் பிளந்தது!

டி.வி. பெட்டியை அணத்து விட்டு எல்லாரும் கனத்த இதயத்துடன் சாப்பிட சென்றார்கள்!!

ஹல்லோ... இது நிஜமாவே ஜல்லிகட்டு தாங்க..நீங்க ஏதாவது அந்த ..
நீலவேணி தான் பட்ஜெட்..அந்த புஷ்டியான மனிதன் நாட்டின் பெரிய பணக்காரர்கள்..அந்த பேண்ட்,சட்டை ..பரிதாபத்துக்குரிய BANK/PUBLIC SECTOR EMPLOYEES ... அந்த பஞ்சத்தில் அடிபட்டவன் ஏழை விவசாயி என்று
பயங்கரமாய் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல !!!!!

7 comments:

aarvie88 said...

The last bit was excellent

வசந்தமுல்லை said...

சூபர் பட்ஜெட் ஜோக் !!! நல்ல அபரிதமான கற்பனை !!!! வெல்டன் !!!!!!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உம்மை மத்திய நிதிமந்திரியின் ஆலோசகராக நியமிக்கலாம்.
பட்ஜெட் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தி, அதை டீ.வீ ..யில்
பார்ப்பவர்களுக்கும் (சேவை வரிபோல) பார்வை வரி என்று போட்டு
அசத்திவிடுவீர்கள்.

Chitra said...

அந்த பஞ்சத்தில் அடிபட்டவன் ஏழை விவசாயி என்று
பயங்கரமாய் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல !!!!!


............பட்ஜெட் ஜல்லிக்கட்டு .......... இந்த பதிவும் ஐடியாவும் நக்கலும் மட்டும்தான் உங்க பொறுப்பு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஒரு கற்பனை - ஜல்லிக்கட்டுக்கும் பட்ஜெட்டுக்கும் முடிச்சு போட்டது.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

Kumar said...

Nice one...

ரிஷபன் said...

சரியான காமெடி நம்ம பட்ஜெட் மாதிரியே..