Monday, February 8, 2010

வாய் மெய்யைக் கொல்லும்!!


கசாப்புக் கடை
வீட்டு சேவல்
சிலிர்த்தெழுந்து..
விடியலில்
கூவியது..
'நான் உயிரோடிருக்கிறேன்'
என்று!

பசியோடிருக்கும்
பாம்புகளுக்கு
தன் இருப்பை
வெளிப்படுத்துக்
கொண்டிருந்தன
தவளைகள் தன்
வாயினால்...

துரியன் விழுந்ததை
வாய் பிளந்து....
இதழ் விரித்து
நகைத்தாள் பாஞ்சாலி..
பாரதப் போர்
மூண்டது!!

மௌனியாய்
இருக்கும் வரை,
'தன்னை
அறிந்தவன்' என
உலகு சொல்லும்
வாயைக்
காட்டினால்,
அதே உலகம்
அவனையே
அரிந்து விடும்!!

9 comments:

ரிஷபன் said...

யாகாவாராயினும் நா காக்க..

வசந்தமுல்லை said...

"வாய் மெய்யை கொல்லும்" தலைப்பு செலெக்சன் குட் !!!!!!!!!!!!!!!!

Chitra said...

மௌனியாய்
இருக்கும் வரை,
'தன்னை
அறிந்தவன்' என
உலகு சொல்லும்
வாயைக்
காட்டினால்,
அதே உலகம்
அவனையே
அரிந்து விடும்!!

...........அமைதியாக யோசித்து கொண்டு இருக்கிறேன். :-)

Thenammai Lakshmanan said...

நுணலும் தன் வாயால் கெடும்னு நல்லா சொல்லி இருக்கீங்க ராம மூர்த்தி

அண்ணாமலையான் said...

கரெக்டா சொன்னீங்க

Unknown said...

கவிதை அருமை. தேர்ந்தெடுத்த வார்தைதைகளும் சேகரித்து தொகுத்த கருத்துக்களும் சொல்லியவிதமும் எழுத்தின் நடையும் அருமையின் சிகரம்.உமது பதிவு தொடர்க! வளர்க!

மதுரை சரவணன் said...

/athe ulakam avanaiye aliththuvidum / etharththamaana varikal. asaththukireerkal'.

Matangi Mawley said...

:-) brilliant!

வை.கோபாலகிருஷ்ணன் said...

paavam antha sEvalum, thavaLaiyum. comments sollave payamaaka uLLathu. Anyhow Superb.
You are GREAT.