Saturday, February 27, 2010

சிறுத்தை கடித்து ....


"சிறுத்தை கடித்து பிழைத்தவனும் இருக்கான்...செருப்பு கடித்து செத்தவனும் இருக்கான் " என்றார் நண்பர், நான் சொன்ன ஜோக்கைக் கேட்டதும்!
பாவம், என் பேச்சு அவரை அந்த பாடு படுத்தி இருக்க வேண்டும்!!
எதற்கு இதை சொல்கிறேன் என்றால்.. பேச்சு அவ்வளவு வலிமையானது. பதினான்காம் லூயியின் மனைவி சொன்ன வார்த்தை தானே பிரஞ்சு புரட்சிக்கே ஆரம்பம்.
அப்படி அவள் என்ன தான் சொன்னாள்?
அம்சதூளிகா மஞ்சத்தில், மேரி ஆண்டனாய்ட் படுத்துக் கொண்டே, நாவை சுழட்டி மேலே தொங்கிக் கொண்டிருந்த திராட்சை கனிகளோடு விளையாடும் போது அவள் எரிச்சல் அடையச் செய்த கூக்குரலை கேட்டு அங்கு என்ன சப்தம் என்று வினவ, அதற்கு மந்திரி 'மக்கள் BREAD க்காக போராட்டம் நடத்துகிறார்கள்' என்று சொல்ல, அதற்கு அந்த மகாராணி திரு வாய் மொழிந்தாளாம்:
" IF THEY DON'T HAVE BREAD, LET THEM TAKE CAKES"
எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றியது போல ஆயிற்று அவள் பேச்சு!
வேறு சில பேச்சுக்கள் நிலைமையை தலைகீழாய் மாற்றி விடும். ஜூலியஸ் சீசர் அவருடைய நண்பர் புரூடஸால் கொலையுண்டபோது, அவருடைய இன்னொரு நண்பர் ஆண்டனி பேசிய பேச்சு தானே சூழ்நிலையை தடம் புரட்டியது!
சில பேச்சுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை..உதாரணம். ஆப்ரஹாம் லிங்கனின் "கெட்டிஸ்பர்க் உரை!" சில பேச்சுக்கள் மேலை நாடுகளை நம் கீழ்த்திசை நாடுகளின் கலாச்சாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது. உதாரணம்.".விவேகானந்தரின் சிகாகோ உரை!"
வெறும் வார்த்தை ஜாலங்கள் அரசு கட்டிலையே அசைத்த வலிமை பெற்றவை என்பதை
நாம் அறிவோம்!!
ஆனால், பேச்சுத் திறமையினால் சாவின் விளிம்பு வரை சென்ற இருவர் மீண்ட கதை தெரியுமா,உங்களுக்கு ?
இப்படியாகத்தான் ஒரு பேச்சாளன் ஒரு நிகழ்ச்சிக்குப் போகும் போது எதிர்த்தாற் போல் ஒரு சிங்கம்! (மீண்டும் ஒரு சிறுத்தை என்றால் VIEWERS களினால் தாங்க முடியாது என்பதால் சிங்கம் என்று மாற்றினேன்!)
அவன் சொன்னான் .
" சிங்கமே...நீ காட்டு ராஜா தானே..அது போல நானும் ஒரு ராஜா தான். எனக்கு பேச்சு சக்ரவர்த்தி என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள் மக்கள்"
" அதுக்கென்ன.." - எரிந்து விழுந்தது,சிங்கம்.
" பக்கத்து ஊரில் மக்கள் என் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்."
" என்னால் அனுமதிக்க முடியாது. நான் பசியோடிருக்கிறேன். உன்னை இதோ
புசிக்கப் போகிறேன்" - கர்ஜித்தது சிங்கம்.
" ஆனாலும் சிங்கமே..ஆவலுடன் அங்கு மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களை ஏமாற்றுவது மகா பாவம். போயிட்டு கட்டாயம் வந்து விடுவேன்.."
மன்றாடினான், அவன்.
சிங்கத்துக்கு மனம் இளகி விட்டது.
" சரி..உன்னை விட்டுப் போக முடியாது. நீ பேசும் மேடையின் அருகில் உள்ள புதர் மறைவில் நான் காத்துக் கொண்டிருப்பேன்.கட்டாயம் வர வேண்டும். ப்ராமிஸ்?"
"ப்ராமிஸ்"
அவன் பேச ஆரம்பித்தான்.....
பேசிக்கொண்டே இருந்தான்...
பேசி முடித்தான்....
கூட்டம் ஒரு வழியாய் கலைந்ததும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற..அந்த புதர் பக்கம் விரைந்தான்..படபடப்புடன்.
அங்கே......
அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்தது!
நம்ம ஆள் நினைச்சான்.
" நல்ல வேளை சிங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. பொழைச்சோம்"
சிங்கம் நினைத்தது.
" நல்ல வேளை. தூங்கறா மாதிரி நடிச்சோமோ ..பொழைச்சோம்..இல்லாட்டி
அந்த ஆள் பேசியேக் கொன்னுருப்பான்..!!! "

7 comments:

Chitra said...

சிங்கம் நினைத்தது.
" நல்ல வேளை. தூங்கறா மாதிரி நடிச்சோமோ ..பொழைச்சோம்..இல்லாட்டி
அந்த ஆள் பேசியேக் கொன்னுருப்பான்..!!! "


............ha,ha,ha,ha.... terror comment!

வசந்தமுல்லை said...

fantastic!!!!!!!!!!!!!!

ரிஷபன் said...

சிங்கம் சரியாத்தான் சொல்லியிருக்கு!!!!

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

அகல்விளக்கு said...

சூப்பர்....

இப்போ சிங்கத்து தெரிஞ்சிருக்கும். யார டெரர்னு...

ஹாஹாஹாஹா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிலர் மேடையேறி பேச ஆரம்பித்தால் ஆடியன்ஸ்க்கு, தூக்கம் வருவது சகஜம்.
அதுபோலவே சிங்கத்திற்கும் தூக்கம் வந்திருக்குமோ என்று நினைத்தேன்.
தூங்குவதுபோல நடிப்பதிலும் தான் ஒரு சிங்கம் என்று நிரூபித்துவிட்டதே !
வரவர ப்ளாக் செய்திகளைப்படிக்கும் போதே, வயதான எனக்கு தூக்கம் வந்து தொலைக்கும் போல இருந்து வருகிறது. முன்பெல்லாம் இரவில் தூக்கம் வராமல் தவித்த எனக்கு, இது பரவாயில்லை என்றும் தோன்றுகிறது. (வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவும் - தவறாக நினைக்க வேண்டாம்.) நன்றாகவே எழுதுகிறீர்கள் ! பாராட்டுக்கள்

k.ramesh said...

singam ennai eppothu parthathu.intha post office pakklam vanthatho?.
k.ramesh