நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Monday, February 22, 2010
முற்பகல் செய்யின்.......
"சார் உங்க அப்ளிகேஷனைக் கொடுங்க.."
'இந்தாங்க..."
"என்ன சார்..இது..டேட் போடலை..என்ன 'ட்ரைன்'னும் எழுதலை? சரியா FILLUP பண்ணிக்
கொண்டாங்க..சார்...நெக்ஸ்ட்...."
"சார்..ப்ளீஸ்..கொஞ்சம் தயவு பண்ணுங்க...எப்பவும் ஆபீஸ் பையன் தான் ரிசர்வேஷனுக்கு வருவான்..இன்னிக்கு லீவு..அதான் நானே வந்தேன்..தேதி 25.4.2010 வண்டி கொரமண்டல் எக்ஸ்ப்ரஸ்.
ட்ரைன் நெம்பர் கொஞ்சம் எழுதிடுங்க சார்"
"என்ன சார், விளையாடுறீங்களா?QUEUE பார்த்தீங்களா? ஒவ்வொருத்தருக்கும் நான் இப்படி எழுதிக் குடுத்தா, நான் எப்பங்க LUNCH க்குப் போறது..ப்ளீஸ் அந்த போர்டுல எழுதி இருக்கும் . சார்.. நெக்ஸ்ட்"
நிர்தாட்சண்யமாய் குமாரை விரட்டினான் மோகன்.
ஏமாற்றத்தோடு இடத்தை காலி செய்தான்,குமார். அவன் எல்லாவற்றையும் 'பில்லப்' பண்ணி திரும்பவும் QUEUE வில் வருவதற்கு
முழுதாய் அரை மணி நேரமாகி விட்டது. அரை மணி நேரம் தான் பர்மிஷன் கிடைத்தது. டிக்கெட் வாங்க ஒரு மணி நேரமாகி விட்டது.
"ராஸ்கல்...கொஞ்சம் கூட மனுஷத் தன்மை இல்லாம..எங்கிட்ட வராமலாப் போகப்போறான்.."
குமார் மனசுக்குள் கறுவிக் கொண்டு ஆபீஸ் சென்றான்.
என்ன ஆச்சர்யம் ! சொல்லி வைத்தாற்போல் அடுத்த இரண்டாவது நாளே குமாரும்,மோகனும் சந்தித்தார்கள்.
இப்போது குமார் கௌண்ட்டரில்.
மோகன் DD வாங்க QUEUE வரிசையில் !
மோகனுக்கு குமாரை அடையாளம் தெரிந்து விட்டது. அடப்பாவி இவனிடமாய் வந்து மாட்டிக் கொண்டோம் என்கிற பதட்டத்திலேயே தப்பு,தப்பாய் DD APPLICATION FILLUP பண்ணினான்.
இப்போது குமார் டர்ன். DD
யில் டேட் இல்ல.. 'அமௌண்ட் காலம் ப்ளாங்க்.'பயலே..வசமா மாட்டினியா ?
படபடப்புடன் கௌண்ட்டரின் வெளியே நின்றிருந்தான், மோகன்.
"சார்..நிறைய CORRECTIONS பரவாயில்லை..நான் எழுதிட்டேன். உங்க கையெழுத்து நான் போடக்கூடாது..ப்ளீஸ். கையெழுத்து போட்டுத்தாங்க.. அடுத்த ஐந்தாவது நிமிடம் உங்க DD ரெடியாயிடும் "
குனிந்து கொண்டு கையெழுத்து போட்டான், மோகன்.
DD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது !!!
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
:))
ஓகே... ஓகே..
இன்னா செய்தாரை....
DD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது !!!
.......... :-)
இராகவன் நைஜீரியா சொன்னத நானும் ஆமோதிக்கிறேன் இன்னா செய்தாரை ஒருத்தல்
சூப்பர் சிறுகதை..
கலக்கல் சார்...
ரொம்ப தேங்க்ஸ், ரிஷபன்!!
முதலில் இந்த தலைப்பு தான் செலக்ட் பண்ணினேன்,
ராகவன்.யோசித்துப் பார்த்ததில், கதையின் க்ளைமாக்ஸ் சட்டெனத் தெரிந்து விடும் என்பதால் அதை மாற்றினேன்...
வருக...வருகவே....
சங்கருக்கும்..டக்கால்டிக்கும்...ஒறுத்தல் என்று இருக்க வேண்டும், திரு சங்கர்!
DD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது
”குற்ற உணர்வில்” என்று வாசகன் மனதில் தோன்றினால் அதுவே எழுதியவனுக்கு வெற்றி, சித்ரா மேடம்!
அண்ணாமலையானுக்கு.....
நன்றி !!
tit for tat! :)) :)) :)) :))
இன்ன செய்தாரை ஒருத்தல், அவர் நாண
நன்ணயம் செய்துவிடல்! -
இந்த பதிவிற்கு கருத்துரை மேல் கண்ட திருக்குறள் !!!!!!
Good one from a Good man (rrm)
Post a Comment