Wednesday, February 10, 2010

சார் உங்க கார், தாங்க !!


இப்போதெல்லாம் பேப்பரைப் பிரித்தால் புதிதாய் ஒரு செய்தி உங்கள் கவனத்தை கவரும்.
இது எப்படி சாத்யம் என்று மலைப்பீர்கள். அந்த கம்பெனியின் மீது உங்கள் மதிப்பு கூடும். இது அந்த கம்பெனியின் BUSINESS EXCELLANCE என்று சந்தோஷப் படுவீர்கள். நானும் அப்படி சந்தோஷப்பட்டவன் தான்! ஆனால் இன்னொரு கம்பெனியும் அதே TECHNIQUE ஐ FOLLOW
பண்ணும் போது சில கேள்விகள் என் மனதிற்குள் எழுந்தது. அதை என் BLOG VIEWERS உடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இது தான் அந்த செய்தி. 'பிரேக் பெடல்' ப்ராப்ளத்தினால் ஒரு பெரிய MULTINATIONAL
CAR COMPANY வாடிக்கையாளர்களிடமிருந்து புதிதாக விற்ற லட்சக்கணக்கான கார்களை வாபஸ் வாங்கிக் கொண்டது.அட என்ன ஒரு CUSTOMER FOCUSED என்று நானும் ஆச்சர்யப் பட்டேன். ஆனால் இன்றும் அதே செய்தி. மற்றொரு கார் கம்பெனி இதே காரணத்திற்காக நான்கு லட்சம் கார்களை வெவ்வேறு நாட்டு கஸ்டமர்களிடமிருந்து வாபஸ் வாங்கிக் கொண்டதாம்!
இங்கு தான் நமக்கு சந்தேகமே! அது எப்படி ஒரே மாதிரியாக வாபஸ் அதுவும் லட்சக் கணக்கில்! ஏதோ ஒன்றை ஒருவன் செய்து கொஞ்சம் காசை கல்லாவில் பார்க்க, கண் மூடித் தனமாக அந்த PIONEER ஐ BENCH MARK செய்கிறார்களோ!
சராசரியாக ஒரு காரின் விலை மூன்று லட்சம் என்று வைத்துக்கொண்டாலும், நான்கு
லட்சம் கார்களின் விலை 12,000 கோடி! மேலும் நான்கு லட்சம் கார் என்பது எப்படி பார்த்தாலும்
அந்த கம்பெனியின் அத்தனை தொழிற்சாலை விற்பனையிலும் ONE THIRD ஆகவாவது இருக்கும்! மொத்த விற்பனையில் ONE THIRD FAULT ஆக இருக்கும் பட்சத்தில் அந்த REPUTED CAR COMPANY யின் QUALITY DEPT. என்ன செய்து கொண்டிருந்தது என்பது
முதல் கேள்வி!
இந்த மாதிரி செய்வதற்கு எதாவது PRECEDENT இருக்கிறதா என்பது அடுத்த
கேள்வி? அப்படி இல்லையென்றால் நம் சந்தேகத்தின் பிடி மேலும் இறுகுகிறது!
கார் என்பது ஒரு ASSEMBLY LINE PRODUCT. இந்த SEGMENTல் CORPORATE CUSTOMERS அவ்வளவாக இல்லை.மேலும் இருக்கும் INDIVIDUAL CUSTOMERS களை அவ்வளவு SHREWD என்றும் சொல்ல முடியாது! மேலும் ' LET THE PURCHASER BEWARE' என்கிற CAUVEAT ஷீல்டாக விற்பனையாளர்கள் கையில் இருக்கிறது!
பட்ஜெட் வெகு அருகில் இருக்கும் நிலையில் நமக்கு ஒரு சந்தேகம். இந்த கார்
COMPONENT எதற்காவது EXCISE/CUSTOMS DUTY அதிகரிக்கப் போகிறார்கள் என்கிற செய்தி அதற்குள் கசிந்து விட்டதா? அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் எதையாவது REPLACE செய்து அதில் லாபம் பார்ப்பார்களா!
இல்லாவிட்டால் அவர்கள் R & D LAB எதாவது புதிதாக எதாவது முக்கியமான பார்ட்டை WITH REDUCED COST REPLACE செய்து காசு பார்க்கலாம் அல்லவா?
AUTOMOBILE SECTOR ல் RECESSION என்று கேள்வி. இந்த மாதிரி WITHDRAWAL AGAINST SALES என்று எதாவது STRATEGY PLAY பண்ணுகிறார்களா?
ஐயா..ஒரு பைசா கூட வாங்காமல் அதே கார்களை வாடிக்கையாளர்களிடம்
திரும்பவும் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் ..FAMILY PLANNING OPERATION க்கு கூட்டிக்கொண்டு போய் KIDNEY திருடும் செய்தி ஒன்றும் நமக்கு புதிது அல்லவே!
ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்!!

16 comments:

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க...

நீங்க சொல்வதும் கரெக்ட்தான். சூசகமா நடந்துகுங்க நண்பர்களே...

Thenammai Lakshmanan said...

பயமாத்தான் இருக்கு ராமமூர்த்தி எச்சரிக்கையா இருப்போம்

Chitra said...

எச்சரிக்கையாக இருங்கள்!!

...........வியாபாரிகளில், சமூக சேவை மனப்பான்மை கொண்டவர்கள் வெகு சிலரே. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமானது.

ரிஷபன் said...

ரூம் போட்டு யோசிக்கறாங்களா..

கமலேஷ் said...

அடடா நீங்க க்ரைம் பிராஞ்ச்ல இருக்க வேண்டிய ஆளு....ரொம்ப நல்ல ஆழமான சிந்தனை...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

your R&D on this issue has made you to give a quality article to all of us. Excise/customs patriya seythikaL ezhutha ungkalukku theiriyam koduththathu yaar endru enakkuth theriyume!

கே. பி. ஜனா... said...

அட, இப்படியெல்லாம் இருக்கா? உபயோகமான பதிவு.

கிருஷ்ணா said...

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

"ஆஹா... எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க..."
உங்கள் ஆதங்கம் நியாயமானது தான் ராகவன்.விழிப்போடு இருப்போம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பயப்பட வேண்டாம், தேனம்மை.. நம்மை ஏமாற்றுபவர் எங்காவது ஏமாறுவார்கள்! இங்கு எல்லாமே “balance" ஆகி விடும்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒத்துக் கொள்கிறேன்...எச்சரிககை தேவை தான் சித்ரா மேடம் ...!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

"ரூம் போட்டு யோசிக்கறாங்களா.."
எல்லாருமே இதைத் தான் சொல்கிறார்கள்...
அப்படி என்றால் என்ன? நாமும் ரூம் போட்டு யோசிக்க வேண்டியது தான்!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

"அடடா நீங்க க்ரைம் பிராஞ்ச்ல இருக்க வேண்டிய ஆளு....ரொம்ப நல்ல ஆழமான சிந்தனை...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி "
மிக்க நன்றி தோழரே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ சார்...ரொம்ப தேங்க்ஸ் !!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஜனா ஸார்..வாங்க...வாங்க..!!THANQ FOR THE COMMENT

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க கிருஷ்ணா..தங்கள் வரவு நல்வரவு ஆகுக>>>