Monday, February 8, 2010

பதி பக்தி !!!



(என்னுடைய நண்பரும், நானும் ஒரு லஞ்ச் அவரில்
நிகழ்த்திய சம்பாஷனையின் சாராம்சத்தை இங்கே தருகிறேன்)

நான் : ஹாஸ்பிடல்ல.. எத்தனை வருஷம்
இருந்தீங்க?


நண்பர்: மூன்று வருஷம் அங்கே மெடிக்கல்
ஸ்டோர்ஸ்ல இருந்தேன்..


நான் : வேலை எப்படி? டைட்டா இருக்குமா?


நண்பர் : சில நேரங்கள்ள...ரொம்ப பிசியா
இருக்கும்...

நான் : அப்படியா?

நண்பர் : நான் ஆபீஸ் வந்த உடனேயே
ப்ரேயர் பண்ணிப்பேன்..'ஆண்டவா..
இன்னிக்கு என் டூட்டி டயத்தில யாரும்
மண்டையை ப் போடக்கூடாதுன்னு..
நான் : ஏன்?


நண்பர் : என்னோட டூட்டில ஒண்ணு..
யாராவது ஆஸ்பத்திரியில் செத்துப்
போய்ட்டா..ஆம்புலன்ஸ் ஏற்பாடு
பண்றது.. போன்ற அது தொடர்பான
வேலைகள்..நேற்றை வரைக்கும் பேசி
கிட்டு இருந்து விட்டு,அடுத்த நாள்
ஆள் காலின்னா நமக்கே 'ஷாக்'காத்
தான் இருக்கும். இல்லீங்களா..இதுல
சொந்தக்காரங்க...குய்யோ..முறையொன்னு
கூப்பாடு போட்டா..நமக்கு டென்ஷன் தான்!
நான் : ஆமாமாம்....


நண்பர் : சுகமாகி டிஸ்சார்ஜ் ஆகிப் போனா
சந்தோஷம் தான்...


நான் : நிச்சயம் இருக்கும்..


நண்பர் : இதக் கேளுங்க...உங்களுக்கே
சிரிப்பா இருக்கும்..

நான் : ஆஸ்பத்திரியில சிரிப்பா..?
சொல்லுங்க..சொல்லுங்க...


நண்பர் : நம்ம எம்ப்ளாயீ தான் அவர். ஒரு வாரம்
'பெட்'டில இருந்தார்.அவங்க சம்சாரம் ..ஒரு
பையன்..சின்ன குடும்பம்..அவங்களுக்கும்
இங்கேயே டோக்கன் கொடுத்து டீ, பன்,காபி,
பலகாரம், சாப்பாடு எல்லாம் சாப்பிடுக்கலாம்..
டிஸ்சார்ஜ் பண்ணும்போது அந்த அம்மாவைப்
பார்க்கணுமே..ஒரே சோகம் தான்..
நான் : எதுக்கு வருத்தப்படணும்? குணமாகித்தானே
போறாங்க..


நண்பர் : என்னன்னு தெரியல்லே...


நான் : அடப் பாவமே..


நண்பர் : மிச்சத்தையும் கேளுங்க..அடுத்த அரை மணி நேரத்தில்

ஆட்டோவில திரும்பவும் வந்தாங்க..அந்த ஐயா தலை
பூரா ஒரே ரத்தம்... என்னம்மான்னேன் நான்
பதட்டத்துடன்..


நான் : என்ன ஆச்சாம்?




நண்பர் : அதுக்கு அந்த அம்மா சொல்றாங்க..இங்கேர்ந்து டிஸ்சார்ஜ்
பண்ணிட்டுப் போனோமா..வீட்டில் போய் கட்டில்ல
படுத்தாரு. என்ன ஃபேன் போட சொன்னாரு..போட்டேனா..
திடீர்னு அந்த ஃபேன் கழண்டுபோய் அவர் தலைல விழுந்துடுச்சு..
சொல்லும் போதே அந்த அம்மாக்கு சிரிப்பு தாங்கலைன்னா
பார்த்துக்குங்க..


நான் : எதுக்கு சிரிக்கணும்?


நண்பர் : இதேயே தாங்க நானும் கேட்டேன்..அதுக்கு அந்த
அம்மா..'அட போங்க தம்பி..உடம்பு குணமானா
இந்த எளவெடுத்த மனுஷன் அதை ஆக்கிப் போடு..
இத ஆக்கிப் போடுன்னு என் உசிரேயில்ல
எடுத்துடுவாரு..' ன்னாங்க..


(இந்த சம்பாஷனைக்குப் பிறகு என் சகதர்மிணியிடம் சாதாரணமாய்
காஃபி, டிபன் கேட்பதற்குக் கூட பயமாக இருந்தது, ஒரு வாரத்திற்கு)

6 comments:

வசந்தமுல்லை said...

ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி மூலம் தெரிந்துக் கொள்வது என்னவெனில்,பத்தினியை தொந்தரவு செய்யாமல் தேவையானவைகளை செய்துக்கொள்ளவேண்டும், அப்படித்தானே! ராமமூர்த்தி சார்.!!!!!!!!......

Chitra said...

போட்டாங்களே ஒரு போடு. நல்ல நகைச்சுவை பதிவு.

அண்ணாமலையான் said...

நம்பவே முடியல

ரிஷபன் said...

இது கற்பனையாகவே இருக்கக்கடவது..

தாராபுரத்தான் said...

உண்மையாத்தான் இருக்கும்.என் நண்பர் ஒருவர் மனைவியிடம் அதை எடு இதை எடு, செருப்பை துடை...அடஅட..நமக்கே அந்த ஆளு கழுத்தை.....அந்த மகராசிக்கு எப்படி இருக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

"பதிபக்தி" படித்தேன். ரசித்தேன். ஒரே சிரிப்பாகத்தான் இருந்தது. இது ஒன்றும் கற்பனை+நகைச்சுவைக்காக எழுதப்பட்டதல்ல. ஆங்காங்கே நடைபெறும் உண்மை நிகழ்ச்சியும் கூட என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்.

எனக்குத்தெரிந்த ஒரு வயதான தம்பதி. பல்லாண்டு வாழ்ந்தவர்கள் தான். கடைசி ஒரு ஆறு மாதங்கள் அந்த மனிதர் நடமாட்டமில்லாமல் படுக்கையிலேயே
எல்லாமாகப் படுத்துவிட்டார். அந்த அம்மாளும் எல்லாப் பணிவிடைகளும் அவருக்கு எந்தக் குறையுமில்லாமல் செய்து வந்தார்கள். பாவம் அவளுக்கும் முதுமையான வயது தான். ஒரு நாள் அந்த வயதானவர் டிக்கெட் வாங்கிவிட்டார். மனைவி அதிகமாக அழுது ஆர்பாட்டம் ஏதும் செய்யவில்லை.

துக்கம் விசாரிக்கச சென்று இருந்தேன்.

"உங்களுக்கு இந்த வயதான காலத்தில் இப்படி ஒரு கஷ்டம் வேண்டாம். இப்படி ஒரு (விதவையென்ற) எழுத்துக்கு ஆளாகி விட்டீர்களே!" என்றார் வந்திருந்த ஒரு இளம் வயது உறவுக்கார ஆண்மகன்.

அதற்கு அந்த அம்மா: "போறும்டா, நான் வாழ்ந்தது. எவ்வளவு நாளைக்குத்தான் அவரின் மலஜலம் எடுத்தெறிவது. ஏதோ அவரும் கஷ்டப்படாமல் என்னையும் கஷ்டப்படுத்தாமல் இப்போதே போனவரை சந்தோஷம்தான். நீ வருத்தப்படாதே!"
என்று வந்தவருக்கு ஆறுதல் கூறினாள்.

உங்கள் பதிவைப்படித்ததும் எனக்கு அந்த சம்பவம் தான் நினைவில் வந்தது.























அன்று அனுபவமில்லாத எனக்கு அவள் பேச்சு ஆச்சர்யமாக இருந்தாலும்
அதுதான் உண்மை என்பது இப்போது புரிகிறது.

உங்கள் பதிவைப்படித்ததும் எனக்கு இந்த நிகழ்ச்சி தான் ஞாபகம் வந்தது. .