Friday, February 5, 2010

அங்கீகாரம்.....


அஞ்சோ, பத்தோ
கடன் வாங்கி,
தன்மானத்தை தவிர,
(அது விலை போகாது !)
அத்தனையையும்,
விற்று காசாக்கி,
அத்யாவசிய செலவுகளையும்
குறைத்து..
பெரியவளான அவன்,
தங்கைக்குச்செய்யும்,
சடங்குச்செலவையும்,
அவளின் படிப்பு
செலவையும்
கணிசமாய் குறைத்து..
அப்பா,அம்மா,தங்கை..
என்று எல்லாரும்,
அவனை ஆசையாய்
படிக்க வைக்க......
அந்த ஏழைக்குடும்பம்,
செய்த தியாகத்தின்
விலை தான்
என்ன?
அரசு அறிவிப்பு..
பையன் படித்த,
அந்த பாழாய்ப்போன,
பல்கலைக் கழகத்தின்
அங்கீகாரம் ரத்தாம்!
அட கடவுளே .....!!!!

8 comments:

Chitra said...

இந்த கொடுமைக்கு யாரிடம் முறையிட வேண்டும்?

அண்ணாமலையான் said...

ஆமாங்க,, இந்த மாதிரி எத்தனயோ ஏழ பாழைங்க தலயில கல்ல போடறவனுங்க உருப்படுவாங்களா?

Chitra said...

உங்கள் கோபத்தை கவிதையில் சரியாக வெளிப்படுத்தி இருக்கீங்க. அந்த ஏழை மாணவரின் எதிர் காலம்?

வசந்தமுல்லை said...

கல்லூரிகளின் அங்கீகாரம் அரசு கையில்!
மாணவர்களின் எதிர்காலம் ஆண்டவன் கையில்!
யாருடைய விதியை நோவது?
மாணவனா? அல்லது அவனுடைய பெற்றோரா?
இதில் எதை சொல்வது ? ஆண்டவா!
இதற்கு பதில் என்ன?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த ஏழைக்குடும்பம்,
செய்த தியாகத்தின்
விலை தான்
என்ன?
அரசு அறிவிப்பு..
rombavum varuththam thaaan, any solution for this?

மதுரை சரவணன் said...

arasu arivippu irukkattum . kasaivaiththu kalviyai peralaam enraal intha nilamai thaan. irunthaalum ungkalai pol naanum antha kutumpaththukkaaka anuthavapata mudiyum . nanraay patiththaal iv avala nilai illaiye.

Thenammai Lakshmanan said...

உண்மைதான் ஆரண்யநிவாஸ் இது பல மாணவர்களூக்கு பாதகமாத்தான் இருக்கு சேரும் போதே பார்த்து முடிவு செய்யணும்

ரிஷபன் said...

குமுறல் அடிவயிற்றிலிருந்து பீரிடுகிறது..
விளையாட்டிலும் அரசியல்.. படிப்பிலும் அரசியல் இதுதான் இன்றைய கால கட்டம்.. பலியாவது நல்ல விஷயங்கள்தான்.. அருமையான கவிதை