Wednesday, January 1, 2014

அடியேனின் குறள் அஞ்சலி
-----------------------------

1. மண்ணுலகில் செய்த மகத்தான பணி தொடர 
    விண்ணுலகம் சென்றாயோ நீ.
2. வெற்றுடம்பு வெண்தாடி கொண்ட இவன்
    சிற்றெறும்பிற்கும் செய்யான் தீங்கு.
3. மக்கிய உரமும் மண்புழுவும் இருக்குமட்டில்
    மன்னுலகம் மறவாது உனை.
4. மின்னும் மணி அரிசி பசுந்தாள் உரம் இட்டால்
    இன்னும் ஒரு கவளம் கொள்.
5. பண்ணிற்கு ஆழ்வார் பலர் இருந்த மாநிலத்தில்,
    மண்ணிற்கு இவனே கதி.
6. உழவினைத் தொழிலாகக் கொண்டோர்க்கெல்லாம் இக்
    கிழவனே இனி நல் தெய்வம்.
7. நிலம் என்னும் நல்லாள் நம்மாழ்வார் என்றாலே
    பலம் பல கொள்வாள் நயந்து.
8. செயற்கை உரமிட்டால் செத்தொழிந்து போவீரென,
    செவ்விளக்கு காட்டிய செம்மல்.
9. மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதம் அறிந்தவனை,
    விண்ணுலகம் ஏற்கும் வியந்து.
10. நல்லார்க்கு தெரியும் இவனொருவனால் தான்,
      எல்லோர்க்கும் பெய்தது மழை.

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களது அஞ்சலியுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்

திண்டுக்கல் தனபாலன் said...

குறள் மூலம் சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

தங்களின் குறள் அஞ்சலியுடன் நானும் இணைந்து கொள்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

குறள் மூலம் அஞ்சலி சொல்லியிருப்பது ....

அடியேனும் உங்களுடன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான மனிதரை ஈரடிக் குறள் மூலம் சிறப்பித்தமை நன்று...

மனோ சாமிநாதன் said...

அருமையான குறள்களால் ஒரு நல்ல‌ மனிதருக்கு அருமையான ச‌மர்ப்பணம் செய்திருக்கிறீர்கள்! உங்களின் அஞ்சலிகளுடன் நானும் இணைந்து கொள்கிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்