Sunday, December 29, 2013

டிக்...டிக்.....டிக்....

டிக்...டிக்.....டிக்.....
 எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி கடிகாரம் செவ்வனே தன் கடமையை செய்து
கொண்டிருந்தது.
 குழுமியிருந்த யாரும் பேசவில்லை.
 ஒரு மெல்லிய சோகம் எல்லார் முகங்களிலும்!
 ஆழ்மௌனத்தை கலைத்தான் ஒருவன்.
  "இன்னும் இரண்டு மணி நேரம் தாங்கினாலே ஜாஸ்தி"
 கட்டிலைப் பார்த்தோம். அவன் சொன்னது சரி. மூப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்து கொண்டிருக்க, அதனால், கொஞ்சம்,கொஞ்சமாக குறுகிக் கொண்டிருக்க....
  "எப்டி dispose பண்றது?"
   ச்சே ....என்ன மனுஷன் இவன்...
    " It will take it's own course"
    இன்னும் விடியவில்லை...
    நேரம் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருந்ததை எல்லாராலும் உணர முடிந்தது.
     கவிந்திருந்த சோகத்தை சட்டென்று புறம் தள்ளுவதைப் போல...      "க்வா....க்வா...."            அனிச்சையாய் ஒரு வித உற்சாகம்
     கவ்விக் கொள்ள......
     குரல் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓட...
      அதே சமயம்,
       "It will take it's own course" என்று
      சொன்னதிற்கு ஏற்றார் போல்.....
      கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
       கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது 2013.
       
         
       
       

     
     
    

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது 2013.....
"டிக்...டிக்.....டிக்...." ஒலியுடன்..!

2014 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கற்பூர புத்தி ஸ்வாமி உமக்கு! ;).

டக்குனு ஒரு பதிவு எழுதிட்டேள்.

நான் என்னவோ ஏதோவென்று பயந்தே பூட்டேன்.

2014 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எங்கிருந்தாலும் நீர் வாழ்க !

நிலாமகள் said...

பயணம் இனிதாக கழிந்ததா?

கரைந்து கொண்டிருக்கும் இன்றின் இறுதிப் புள்ளியில் துளிர்க்கும் நாளை நலம் பெருக்கட்டும்!

வெங்கட் நாகராஜ் said...

என்னமோ ஏதோ என்று படித்துக் கொண்டு வந்தால் 2013.... :)

நல்ல பகிர்வு.

ஊர் திரும்பியாச்சா?