Wednesday, December 4, 2013

MISSING........


விடியல் நாலு மணி.
கனத்த சூட்கேஸ்கள் புடை சூழ, அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் பரபரப்புடன்
நுழைந்தான், ஜிம்.
"ஹலோ....ஹலோ....இங்க இன்ஸ்பெக்டர் யாரு?"
"எஸ் ப்ளீஸ்" 
"என்னோடது தொலைந்து போய் விட்டது"
"எது?"
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் சொன்னதை அவன் சுத்தமாக காதில் வாங்கிக் கொள்ளவே
இல்லை.
"ரொம்ப ஜாக்கிரதையாகத் தான் இருந்தேன், இன்ஸ்பெக்டர். இங்க இருந்தவரைக்கும்
என் கிட்ட தான் இருந்தது அது"
"எது என்று சொன்னால் தானே கண்டு பிடிக்...  " - மிகவும் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டார்,
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்.
"ம் சொல்லுங்க."
இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பொறுமைக்கு பெயர் போனவர்.போதாததிற்கு போன வாரம் தான் 
'போலீஸ் உங்கள் நண்பன்' அவார்ட் வாங்கியுள்ளார்.
"ம்ம்ம்ம்ம்...    எதுல விட்டேன்" என்று யோசித்தவனுக்கு ஞாபகம் வந்து விட்டது."ஆங்..ஆமா,
நடுவில தோஹா வந்தது....அப்பவே எனக்கு லைட்டா சந்தேகம்..மனப் பிராந்தின்னு 
விட்டுட்டேன்...."
'.....பிராந்தியா......தண்ணி கிண்ணி போட்டுட்டு வந்திருக்கானோ...'
"இன்ஸ்பெக்டர் கேட்கறீங்களா?"
"ம்...சொல்லுங்க"
"HOUSTON போய் 'லேண்ட்' ஆகி, நம்மூருக்கு செல்லில பேசின அப்புறம் தான் 'கன்பர்ம்' ஆச்சு..."
"அங்கேயே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்க வேண்டியது தானே..."
'.........ஏன்யா சாவு கிராக்கி நான் தான் உனக்கு கிடைச்சேனா.... ' மனசுக்குள் நினைத்துக் கொண்டார்
அந்த இன்ஸ்பெக்டர்.
"பண்ணியிருக்கலாம் தான்... ஆனா நம்மூரு மாதிரி அங்க 'ப்ராப்பரா ரெஸ்பான்ஸ்' பண்ணுவாங்கன்னு
தோணல" என்றவன் மேலும் தொடர்ந்தான்.
 "பத்தாயிரம் ரூபாய்க்கு வத்தி பெட்டி வாங்கினா பாரின் டூர்
இலவசம்னு சொன்னாங்க...  எல்லாம் சரியாகத் தான் போய்க் கிட்டு இருந்தது...18ம் தேதி விடியல்
காலை நாலு மணிக்கு ப்ளைட். அங்க லேண்ட் ஆகும் போது 19 ம் தேதி மாலை நாலரை. நம்மூர்ல டைம்
கேட்டா, 20 ம் தேதி விடிகாலை நாலரைங்கறான்.அன்னிக்கு மட்டுமில்ல....அங்க இருந்த அத்தனை
நாளும் கார்த்தால ஏழு மணின்னா,நம்மூர்ல சாயங்காலம் ஏழுங்கறாங்க.....அங்ஙன சாயங்காலம் ஏழுன்னா,
இங்ஙன அடுத்த நாள் காலலை ஏழு மணி.ஆபீஸ் போய்ட்டிருக்கேன்...டிஸ்டர்ப் பண்ணாதே ப்ளீஸ்ங்கறான்.
ஒரு நாள்.... ரெண்டு நாள் இல்லை...டெய்லியே பன்னிரெண்டு மணி நேரம் எங்கே போச்சுன்னே
தெரியல....காணாமல் போன என்னோட அந்த பன்னிரெண்டு மணி நேரத்தை கண்டுபிடிச்சு தாங்க
இன்ஸ்பெக்டர் ப்ப்.ளீ.ஸ்"
சட்டென்று, நாற்காலியை விட்டு எழுந்து பரபரவென இன்ஸ்பெக்டரின் தோள்களை குலுக்கினான்,ஜிம்.
சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டரின் பொறுமை எல்லை மீறி போய் விட்டதால் பொளேரென்று பிடரியில்
ஒன்று போட்டார்.
திடீரென விழுந்த தாக்குதலினால் நினைவு தப்பியஜிம்மிற்கு  "யோவ் 109, இந்த விடியா மூஞ்சியை
கீழ்ப் பாக்கம் ஹாஸ்பிடல்ல சேர்த்துடு"என்று நூறு டெசிபல்லுக்கு மேல் போன அந்த இன்ஸ்பெக்டரின்
அலறல் நல்ல வேளையாகக் காதில் விழவில்லை! 

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

கிணறு மாதிரி ஏதும் காணாமப் போச்சோன்னு நினைச்சுட்டே படிச்சேன். கடைசில 12 மணி நேரம் காணாம போயிடுச்சா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

செளகர்யமா லேண்ட் ஆகி செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கு. மிக்க மகிழ்ச்சி.

இதே கான்செப்டில் ஏற்கனவே சமீபத்தில் ஒரு அம்மா பதிவு எழுதி வெளியிட்டு விட்டார்கள்.

இருப்பினும் உங்களுடையதும் நகைச்சுவையாகத்தான் உள்ளது. பாராட்டுக்கள்.

வாழ்த்துகள். தங்கள் குழந்தைகள் இருவரையும் நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.

அன்புடன் கோபு

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா கிளம்பிட்டாங்கய்யா

G.M Balasubramaniam said...


@ time and tide waits for no man. தொலைத்த இடத்தில் தேட வேண்டும். திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் சில நாட்களுக்கு முன் இப்படித்தான் தொலைத்து விட்டுதேடிக் கொண்டிருந்தார். வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா! நல்ல காமெடிதான்!