Tuesday, January 24, 2012

முதியோர் விடுதியும்...முனுசாமி தாத்தாவும்...


”முனுசாமி தாத்தா எப்பவுமே ஜாலி தான்! அதுக்காக இப்படியா?”
”அப்படீன்னா?”
”ஒண்ணுமில்லீங்க..எப்பவும் ஜாலியா இருக்கிற தாத்தா,இப்பவும் ஜாலியாத் தான் பேசறாரு.. .அதுவும் முதியோர் இல்லம் போறதை..யாராவது இதுக்குப் போய் இப்படி அலட்டிப்பாங்களா? போறவங்க, துண்டால மூஞ்சைப் பொத்திக்கிட்டு தளும்பி வர கண்ணீரை அடக்க முடியாம அடக்கிக்கிட்டு, மூக்கை சிந்திக் கிட்டு.. ...போயிட்டு வரேன்..போறேன்னு சொல்லக்கூடாதுன்னு சலம்பிக்கிட்டே போவாங்க..இவரு என்னடான்னா..எங்கியோ ஃபாரின் போறாப்பல எல்லார்ட்டேயும் பெருமையா வேற சொல்லிட்டு போறாரு..”
” அப்படீயா?”
” என்னங்க, அப்படியான்னு கேட்கறீங்க..இத்தனை நா முனுசாமி தாத்தா தயவும்,முத்து லச்சுமி பாட்டி தயவும் தேவையா இருந்தது, அவுகளுக்கு..இப்ப பேரப் புள்ளங்க படிச்சு வேலைக்கும் போயாச்சு..அவரு மகனும் இப்ப ரிடயர்ட் ஆகப் போறாரு..காமாட்சி அளகா காயை நகர்த்தி, கிளவங்களை வெளியே துரத்தறா..இந்த புள்ள...உங்க ஃப்ரெண்டுக்காவது அறிவு வேணாம்..இப்படியா அவரும் மனசை கல்லாக்கிக்கணும்?”
“எப்படி சொல்றே?”
“ உங்க ஃப்ரெண்ட் மூஞ்சிலே துளிக்கூட வருத்தம் காணோமே,இப்படி ஆஞ்ஞான் முதியோர் இல்லம் போறாரேன்னு?”
“எதுக்கு வருத்தப் படணும்?”
“என்னங்க இப்படி சொல்றீங்க?”
“கலகலப்பா இருந்த வூடு புள்ள அது! பேரப் புள்ளைங்க றக்கை முளைச்சு பறந்ததுனால,அந்த குஷால் போயிடுச்சு, இப்ப..கிளவனும், கிளவியும் ஒர்த்தர் மூஞ்சை ஒர்த்த்ர் எத்தனை நாள் தான் பாத்துப்பாங்க..அங்க போனா, வயசாளிங்க நாலு பேர பார்த்தாவது பொளுது போவும்..இங்க காமாச்சிக்கும் இன்னும் மூணு வருடம் சர்வீஸ் இருக்கு...தனியா பொளுது போகணுமில்ல..”
” அதுக்காக...உங்க ஃப்ரெண்ட் இந்த மாசம் ரிடய்ர்ட் ஆகறாரில்ல..அப்பனும்,ஆத்தாளும், புள்ளையுமா இருக்கலாமில்ல..”
“அதுக்கு தானே போறாங்க..”
“என்ன உளர்றீங்க?”
“மூதி..அந்த முதியோர் இல்ல மேனேஜரே நம்ம கிட்டு தாண்டி..பயலுக்கு ரிடய்ர்டானதும் அங்க வேலை கிடைச்சிருக்கு!”

17 comments:

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//அந்த முதியோர் இல்ல மேனேஜரே நம்ம கிட்டு தாண்டி..பயலுக்கு ரிடய்ர்டானதும் அங்க வேலை கிடைச்சிருக்கு!”//
செம ட்விஸ்ட் சார்....அசத்துறீங்க...

நிலாமகள் said...

உரையாட‌லில் ஒரு க‌தையே சொல்லியாச்சு! வாசிப்ப‌வ‌ர்க‌ள் அனுமானிக்க‌ முடியாத‌ கோண‌த்தில்!ரைமிங்காக‌ ஒரு த‌லைப்பு! மூவார்க்கு கைவ‌ந்த‌ க‌லையான‌ விய‌க்க‌ வைக்கும் எழுத்தாற்ற‌ல்!!!

ரிஷபன் said...

haa haa.. super !

ஸ்ரீராம். said...

அட, வித்தியாசமான ட்விஸ்ட்!

குறையொன்றுமில்லை. said...

நல்ல கருத்துள்ள கதை . வாழ்த்துகள்.

RAMA RAVI (RAMVI) said...

நான் என்னமோ சோகக் கதையாக்கும் நினைச்சேன். கடைசியில் திருப்பம். நன்றாக இருக்கு.

Yaathoramani.blogspot.com said...

முடிவு அருமை
அதுதானே பார்த்தேன் என்னடா
முனுசாமித் தாத்தா ரொம்ப வித்தியாசமாகத்
தெரியறேரே என யோசித்தேன்
அருமையான படைப்பு
பகிர்வுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

முடிவு அருமை
அதுதானே பார்த்தேன் என்னடா
முனுசாமித் தாத்தா ரொம்ப வித்தியாசமாகத்
தெரியறேரே என யோசித்தேன்
அருமையான படைப்பு
பகிர்வுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.... வித்தியாசமான யோசிப்பு....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இது என்ன ட்விஸ்ட்,எல்லன்..உங்க கதையை விடவா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க நிலாமகள்..பத்மப்ரபோதாயனுக்கே உங்களை எதிர்பார்த்தேன்...ம்ம்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன்: haa haa ..super !
நான் : தாங்க்யூ!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹி..ஹி..ஓ..ஒ..ஹி..ஹி..ஓ ஹென்றி கொஞ்சம் படிப்பேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நாளாச்சு லெக்‌ஷ்மி மேம் நீங்க வந்து!
மிக்க நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராம்வி மேம்.. நான் சோகக் கதையெல்லாம் எழுத மாட்டேனாக்கும்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி, ரமணி சார் அவர்களே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சிறு வயசு ஆளுங்க, இளையோர் இல்லம் போறதைப் பற்றி எழுதினாத் தானே வித்யாசமான யோசிப்பு! என்ன வெங்கட் சரியா?