Sunday, January 29, 2012

டேய் ஸ்ரீதர் மாமா.......!!!!!


அந்த ஏழு நாட்கள் வந்த புதிது!
அதில் பாக்யராஜை ஆசான் என்று கூப்பிடுவார்கள்.அதே போல் வினு என்னை ஆசான் என்று கூப்பிடுவான்..அந்த பட தாக்கத்தில்! அவனுக்கு நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன்..இந்த காலத்தில் ஒவ்வொரு ரெளடிக்கும் கைத்தடிகள் இருக்கிறார்போல், எனக்கு வினு! அவன் தங்கைகள் சபிதா, விஜி என்று இருவர். சபிதாவும் என்னோட ஒட்டுதல்! ஆனால், இந்த விஜி இருக்கிறாளே கெட்டிக்காரி..அவ எங்க அம்மாட்டே,”இந்த பாத்திரத்துல என்ன இருக்கு”ன்னு கேட்க,அது வெறும் பாத்திரம் எங்க அம்மா பதிலுக்கு “அந்த சம்படத்தில பட்சணம் வெச்சிருக்கே’ன்னு சொல்ல,அதற்கு அந்த விஜி சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.” மாமி, நீங்க பொய் சொல்றேள்..பட்சணம் வைச்சிருந்தா இது கனக்குமே இது வெறும் பாத்திரம் தானே” என்று சொல்லும் அந்த பொல்லாது..அப்ப அது எல்கேஜி! அந்த விஜியைத் தான் என்னால ’இம்ப்ரெஸ்’ பண்ண முடியவில்லை..எல்லாரும் என்னோட உட்கார்ந்து பேசும் போது, அவள் மட்டும் வர மாட்டாள்..கூப்பிட்டால், பழிப்பு காட்டுவாள்! “ஏண்டா வினு, உன் தங்கை விஜி இப்படி இருக்கா”ன்னு நான் கேட்டால், அதற்கு அவன்,”விட்டுத் தள்ளுங்கோண்ணா, நீங்க யாரு? அவ சின்ன குழந்தை தானே ...அவளோட போய் நீங்களும் சின்னக் குழந்தை மாதிரி சண்டை போட்டுண்டு?”
என்று பெரிய மனுஷன் மாதிரி பேசுவான்..
அது சரி, வினு யார்னு சொல்லலியே..முப்பத்தெட்டு பை மூணு...மூக்கப்பிள்ளை லேனு..மணிவாசக ஸ்டோரில் எங்கள் பக்கத்து வீட்டிற்கு குடி வந்தார், மிஸ்டர் ராமமூர்த்தி..அவருடைய பையன் தான் இந்த வினு!
ஆஃபீஸிலிருந்து வந்தவுடன், காஃபி சாப்பிட்டு, ஒரு ஏழு..ஏழரை வாக்கில், ஸ்கூல் ஹோம் ஒர்க்கெல்லாம் முடித்து விட்டு வினு வருவான்..கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருப்பேன்..அவனோட தாத்தாவும் எங்க ஃபெரெண்ட் தான்..ஜாலியா பொழுது போகும்..சனிக் கிழமை எங்க ’டாக்’ கொஞ்சம் நீட்டிக்கும்..அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமைங்கறதாலே!
எனக்கு ராமகுண்டம் ட்ரான்ஸ்ஃபர் ஆன பின்னும், எனக்கு அம்மா, அப்பா தம்பி,தங்கை ஞாபகம் வருவது போல்,வினுவின் ஞாபகமும் வரும், குறிப்பாய் அந்த சனிக்கிழமை மாலையும், இரவும் சந்திக்கும் பொழுதுகளில்!
எனக்கு ராஜ கோபாலன் என்றோரு நண்பன்..எங்கள் ஆஃபீஸ் தான்..எங்கள் வீட்டிற்கு வருவான்..ஊர் தில்லைஸ்தானம்..இங்கு மதுரா லாட்ஜில் ரூம் எடுத்துக் கொண்டிருந்தான்.வினுவை ஆன மட்டும் மசிய வைக்கப் பார்த்தானே..ஊஹூம்..
“வினு கண்ணா, கடலை மிட்டாய் வாங்கி தரேன்..உனக்கு கம்மர் கட்..பஞ்சு மிட்டாய் எல்லாம் தரேன்..’டேய் ஸ்ரீதர் மாமா’ன்னு...ஒரு தரம்..ஒரே தரம் தான்.. சொல்லிட்டு ஆத்துக்கு ஓடிடு..என்று ஆசை காட்ட,”வேணா, ஆசான்னு சொல்லட்டுமா” என்று வினு அவனை பதிலுக்கு வெறுப்பேற்றினான்!
இன்று வினுவை பார்த்தேன்..மிகவும் சந்தோஷமாய் இருந்தது.. நெடுநெடு வென வளர்ந்து விட்டான், அந்த காலத்தில் அவன் அப்பா மிஸ்டர் ராமமூர்த்தி இருந்தது போல்!ஒரு வாழைக் குருத்து ஆளுயர வளர்ச்சியில்..பக்கத்தில் தாய் வாழை கொஞ்சம தளர்ந்து! அது போல,பக்கத்தில் அவன் அப்பா.ராம மூர்த்தி சார்.பழைய மிடுக்கு போய்.. ..
ஆனால், முகம் மட்டும் எக்கச்சக்க மலர்ச்சியில்!
இருக்காதா....
வினுவிற்கு இன்று கல்யாணமாச்சே!

21 comments:

ஸ்ரீராம். said...

நீங்களே அறியாமல் பாதி தயார் செய்து கொண்டிருக்கும்போதே டிராஃப்ட் பப்ளிஷ் ஆகி விட்டது போலத் தோன்றுகிறதே....

வெங்கட் நாகராஜ் said...

என்ன ஒரு ஆசை உங்க நண்பருக்கு?

அட அந்த வினுவுக்கு இன்னிக்கு கல்யாணமா? எங்க சார்புலயும் அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லிடுங்க!

RAMA RAVI (RAMVI) said...

உங்க மலரும் நினைவுகள் எல்லாம் நல்ல சுவாரசியமாக, கலகலப்பாக இருக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸ்ரீராம்க்கு நான்:

”......ஆமாம் சார்,ஆமாம்!!”

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜுக்கு நான்:
“.....டெஃபனெட்டா..வாழ்த்துக்கள் சொல்லிடறேன், வெங்கட்...”

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

RAMVI க்கு நான்:
“..அது சரி...இப்ப எனக்கு ’பேசிக்’கா வே ஒரு சந்தேகம்..இது மலரும் நினைவுகளா? இல்லை மலர்ந்த நினைவுகளா,ராம்வி?”

அப்பாதுரை said...

touching!

ரிஷபன் said...

வினு க்கு எங்க வாழ்த்துகளும்.
சொல்லிடுங்க ஆசான்.

வினு கண்ணா, கடலை மிட்டாய் வாங்கி தரேன்..உனக்கு கம்மர் கட்..பஞ்சு மிட்டாய் எல்லாம் தரேன்..’டேய் ஸ்ரீதர் மாமா’ன்னு...ஒரு தரம்..ஒரே தரம் தான்.. சொல்லிட்டு ஆத்துக்கு ஓடிடு..

தில்லைஸ்தானம் எனக்கு வாங்கித்தருவாரா?

இராஜராஜேஸ்வரி said...

வினுவிற்கு இன்று கல்யாணமாச்சே!/

மனம் நிறைந்த வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

மலரும் மலர்ந்து மணம் வீசும் நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்..

ஸ்ரீராம். said...

வினுவுக்கு எங்கள் வாழ்த்துகளும்...(அன்று பாதிதான் படித்தேன்...ஆட்டோ பப்ளிஷ் ஆனவரை!!)

நிலாமகள் said...

வினுவுக்கு எங்க‌ள் வாழ்த்துக‌ள்! சுட்டிப் பெண் விஜியைப் பார்த்தீர்க‌ளா? ரிஷ‌ப‌ன் சாருக்கு நாங்க‌ள் வாங்கித் த‌ருகிறோம்... ந‌ட்புட‌ன் உங்க‌ளை செல்ல‌ம் கொஞ்ச‌.

ஹ ர ணி said...

ethaiyum rasanaiyaaga soluriinga sir. computer problem. sorry. arumai. arumai. arumai.

ADHI VENKAT said...

வினுவுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க சார்...

மலர்ந்த நினைவுகள் சூப்பராக போயிட்டிருக்கு..
கம்மர் கட் இப்போதெல்லாம் வருகிறதா...:)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாதுரைக்கு நான்: தொட்டுட்டீங்க, சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபனுக்கு நான்: என்னய்யா இது? டேய் ஸ்ரீதர் மாமான்னு கூப்பிட எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்கப்பா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இராஜராஜேஸ்வரி மேம்க்கு:
பழைய நினைவுகளில் அமிழ்வது ஒரு சுகம் தானே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸ்ரீராம்க்கு : மிக்க நன்றி..அது தான் முன்னாடியே படிச்சாச்சே என்றில்லாமல் பாதியில் விட்டது என்கிற தங்கள் ஆர்வம் என்னுள் சந்தோஷப் ப்ரவாகம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நிலாமகளுக்கு: இப்பவும் விஜி பேசலே! உங்களை தெரியுமே..என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டினாள்..அவ்ளவ் தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹரணி; மிக்க நன்றி, சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோவை 2 டில்லிக்கு : வினுவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிடறேன்,மேம்!
இப்ப அந்த கம்மர்கட் இருக்கான்னு தெரியலே... நாம் துய்த்தது இந்த தலைமுறைக்கு கிடைக்காதது கம்மர்கட்டும், மூட்டைப் பூச்சி கடியும் என்று நினைக்கிறேன்..