Friday, September 23, 2011

INNINGS DEFEAT !!!!!


’குல்லா போட்ட நவாபு..செல்லாதுந்தன் ஜவாபு’
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் பட்டோடி ஞாபகம் வந்து விடும்..
சிம்மம் என்றால் சிவாஜி!
டைகர் என்றால் பட்டோடி!!
அந்த பட்டோடி நவாப் ....
இனி இல்லை!!!
சித்தப்பாவுடன் கிரிக்கெட் பற்றி பேசும்பொதெல்லாம், அவர் பேச்சில் பட்டோடி வராமல் இருக்க மாட்டார்...
முதலில் பட்டோடி...
பிறகு நாரி காண்ட்ராக்டர்...
பட்டோடியின் ஃபோர்..சிக்ஸர்..அந்த பேட்டிங் ஸ்டைல்..சூப்பர் ஃபீல்டிங்!
எல்லார்க்கும் பிடிக்கும்...எமனுக்கும் பிடித்ததோ..
அவரின் அபாரமான நகைச்சுவை உணர்வு....
”PRIVY PURSE BILL" PASS ஆன சமயம், அவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்.
அவரின் நண்பர் ஒருவர் இதைப் பற்றி சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“ நவாப் ஆப் பட்டோடி என்று இல்லாவிட்டால் என்ன? ஜான் ஸ்மித் என்று கூப்பிடுங்களேன்....”
அந்த மெச்சூரிட்டி எத்தனை பேருக்கு வரும்?
ஒன்று தெரிகிறது..
இறைவனிடம் யாரோ நம்ம ஊர் கிரிக்கெட்டைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்..
அதனால் அவருக்கு உடனே நம்ம பட்டோடி ஞாபகம் வந்திருக்க வேண்டும்..
ஏதோ நாம் சந்தையில் நல்ல கத்திரிக்காயை எடுக்கிறார் போல், அவரும் எழுபது வயது என்று கூட பாராமல் எடுத்துக் கொண்டு விட்டார்..
அவரை எடுத்துக் கொண்டு விடலாம்..
அவர் பற்றிய சுகமான நினைவுகளை எடுக்க முடியுமா, என்ன?
பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்...
எங்கோ..தொலை தூரத்தில் ‘ குல்லா போட்ட நவாபு..செல்லாது உந்தன் ஜவாபு’ என்ற பாடல் கேட்கிறது....
சன்னமாக....
ஆனால்,
சோகமாக.......

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பட்டோடி நவாப் பற்றிய நினைவு அஞ்சலி அருமை.
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த அந்தக்கால சிறந்த வீரர். அவர் புகழ் என்றும் நினைவில் நிற்கும். voted 2 to 3 vgk

வெங்கட் நாகராஜ் said...

நவாப் பட்டோடிக்கான அஞ்சலி பகிர்வு அருமை. ஒரு கண்ணில் அடி பட்டும் கிரிக்கெட்டில் அவர் சாதித்தது அதிகம். பெரிய இழப்பு இது....

மனோ சாமிநாதன் said...

//பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்...//

அருமையான வ‌ரிக‌ள். ப‌ட்டோடியின் நினைவ‌ஞ்ச‌லிக்கு ந‌ன்றி!

ரிஷபன் said...

ஏதோ நாம் சந்தையில் நல்ல கத்திரிக்காயை எடுக்கிறார் போல், அவரும் எழுபது வயது என்று கூட பாராமல் எடுத்துக் கொண்டு விட்டார்..
அவரை எடுத்துக் கொண்டு விடலாம்..
அவர் பற்றிய சுகமான நினைவுகளை எடுக்க முடியுமா, என்ன?
பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்

நினைவு அஞ்சலி அருமை

அப்பாதுரை said...

அவருடைய on and off field grace பற்றி நிறைய படித்திருக்கிறேன்.. ஆட்டத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ADHI VENKAT said...

நினைவு அஞ்சலி அருமை சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

குறைவான வார்த்தைகளில் நிறைவான அஞ்சலி.பட்டௌடியை என் அப்பாவும் ரொம்பவும் சிலாகிப்பார்.தொழில் நுட்பம் சிறக்காத நாட்களில் தன் திறனால் ப்ரகாசிக்கச் செய்த மேதை.மைதானத்தின் உள்ளும் புறமும் அவரின் மேதைமை என்றும் நம் நினைவிலிருக்கும்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பொருத்தமான தலைப்பும் கூட.