Tuesday, September 13, 2011

(5) குறளும், குறுங்கதையும்!!


பெரிய பாராட்டு விழாவாக்கும் அது!
மிகப் பிரபலமான விஐபிக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கும் வந்தனாவிற்குத் தான்
அந்த பாராட்டு!
அதுவும் மிகச் சிறிய வயதில்!
ஒரு சாதாரண காண்ட்ராக்டரின் பெண் உலகின் மிகப் பிரபலமான பத்து பெண்களில் ஒருவராய்,அதிலும் ஐரோப்பா கண்டத்தில் பவர்ஃபுல் ஆன தேசத்தின் பெண் முதல்வருக்கு அடுத்தபடியாய்... நம் வந்தனா அதில் ஆறாவது ரேங்க்!
ஒரு மேல் நாட்டுப் பத்திரிகை பட்டியலிட்டது!
அதற்குத் தான் இந்த பாராட்டு விழா!
வந்தனாவைப் பெற்றவரை பேசச் சொன்னார்கள்!
காண்ட்ராக்டர் ஏகாம்பரம் பேச ஆரம்பித்தார்.
ரத்னசுருக்கமான பேச்சு!
“ எனக்கு மேடையில் எல்லாம் பேச வராதுங்க ..இதுக்கல்லாம் காரணம் யார்னு நினைக்கிறீங்க..சாதாரண மரங்கள் தான் ..”
ஒரு நொடி அவர் மெளனிக்க....
மரமா....கூட்டத்தில் சலசலப்பு!
“ ஆமாம் பெரியவர்களே..வந்தனா ப்ளஸ் டூ முடிச்ச சமயம், எம்.பி.பி.எஸ் படிக்க ரொம்ப ஆசைப் பட்டாள்...அப்ப ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தாத் தான் சீட் கிடைக்குங்கிற நிலை..அதிர்ஷ்ட வசமாய் எனக்கு நம்ம புலிவார்டு ரோடில் மரம் வெட்டும் காண்ட்ராக்ட் கிடைத்தது..இது ஆண்டவனாப் பார்த்துக் கொடுத்ததம்மா.. நீ எம்.பி.பி. எஸ் தாராளமாய் படி என்று நான் சொல்ல, அந்த காண்ட்ராக்ட் நான் எடுக்கக் கூடாது என்று தீர்மானமாய் இருந்த பெண் தான் வந்தனா!அப்பா மழை வரணும்... நம்ம நாடு சுபிட்சமாய் இருக்கணும்னா, மரத்தை வெட்டக் கூடாது என்று பிடிவாதமாய் மறுத்து விட்டாள்..இந்த லாபத்தினால் தான் நான் டாக்டருக்குப் படிக்கணும்னா,எனக்கு அது வேண்டாம் என்றாள்..அதனாலேயே, என்னால் அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க முடியாமல் போயிற்று..ஆனால்..இன்று புகழின் உச்சாணி கிளைக்கு அவளைக் கொண்டு வந்தது அன்று வெட்டப் படாத மர்ங்கள் சிந்திய ஆனந்த கண்ணீர் தான்..”
ஒரு ஒற்றைக் கொட்டு அப்ளாஸ் முழங்க, தொடர்ந்து ஐந்து நிமிட கர ஒலிகள் அந்த இடத்தை..ஆக்கிரமித்தன அப்போது!

என் குறள் : விசும்பின் துளியும் இனி வீழாது, அடுக்கடுக்காய்
பசுமரங்கள் வெட்டப் படுங்கால்.

14 comments:

கே. பி. ஜனா... said...

கதை நல்லாருக்கு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இன்று புகழின் உச்சாணி கிளைக்கு அவளைக் கொண்டு வந்தது அன்று வெட்டப் படாத மர்ங்கள் சிந்திய ஆனந்த கண்ணீர் தான்..” //

ஆஹா!

நல்லாவே வெட்டி சாய்த்து விட்டீர்கள் எங்களை உங்கள் எழுத்துக்களால்! நல்ல கருத்துக்களால்!!

சபாஷ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெட்டப்படாத மரங்கள் போலவே நாங்களும் ஆனந்தக்கண்ணீர் சிந்துகிறோம், ஐயா!

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

//வெட்டபடாத மரங்களின் ஆனந்த கண்ணீர்//

மிகவும் அருமையான விழிப்புணர்வு கதை. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

//வெட்டப்படாத மரங்களின் ஆனந்த கண்ணீர்//.... நல்லதோர் கதை.....

வாழ்த்துகள் சார்... உங்களின் நல்ல முயற்சிக்கு.....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

படிப்போர் கண்ணிலும் நீர் துளிர்க்க செய்யும் செய்தி... பகிர்வுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நல்லா இருக்கு

ஸ்வர்ணரேக்கா said...

உங்க குறள் நன்றாக இருக்கிறது..

ADHI VENKAT said...

கதையும் ,புதுக்குறளும் அருமை சார்.

ரிஷபன் said...

ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கும் வந்தனாவிற்குத் தான்
அந்த பாராட்டு!
அதுவும் மிகச் சிறிய வயதில்!

வெட்டப்படாத மரங்கள்.. தந்த பரிசு சூப்பர்.

sury siva said...

கதைதான் என்றாலும் நிகழ்வுகள் நம்ப இயலவில்லை.
வாழும் கலை ஒன்று.
நடை முறையோ வேறு.
கால வெள்ளத்தில் இக்கதைகள் காத தூரம் கூட செல்வதில்லை.

இருந்தாலும் ...
அவை நடுவே சொல்வதற்கு
சுவையாக இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.

முனைவர் இரா.குணசீலன் said...

விசும்பின் துளியும் இனி வீழாது, அடுக்கடுக்காய்
பசுமரங்கள் வெட்டப் படுங்கால்.

உண்மை.

பித்தனின் வாக்கு said...

kathai nalla irukku. padam yaru noori thane