Monday, June 6, 2011

தேவை கொஞ்சம் கரப்பான் பூச்சி!

ஏதோ ஒரு காது குத்தல் விழாவிற்குப் போயிருந்தேன்..அந்த சமயம் ஒரு வயசான தம்பதியர் காலில் விழுந்து எழுந்தான் ஒரு இளைஞன். அத் தம்பதி ‘குழந்தை பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழணும்’ என்று வாழ்த்தி விட்டு அகல, நான் அந்த இளைஞனைப் பிடித்துக் கொண்டேன்.
”அவங்க என்ன ஆசிர்வாதம் பண்ணினாங்க?” - நான்.
”பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழணும்னு” - அவன்.
“அந்த பதினாறு என்னன்னு தெரியுமா?”
“தெரியுமே!”
“சொல்லு”
சொல்லத் தொடங்கினான்..பாதியிலேயே எனக்கு தலை சுற்றியது..பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டேன்..
இதோ அந்த பட்டியல்!
1. மஸ்ஸாசுஸெட்ஸில் எம்.பி.ஏ.
2. ஹார்வர்டில் பி.ஹெச்.டி.
3. முதல் வருடாந்திர சம்பளம் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்.
4. அதுவும் டாலரில்!
5. லாஸ் ஏஞ்சல்ஸில் டபுள் பெட் ரூம் ஃப்ளாட்.
6. சிலிக்கன் வாலி பக்கத்தில் பண்ணை வீடு
7. பென்ஸ் அல்லது ஆடி.லோக்கலுக்கு வோல்ஸ் வேகன்!
8. ஹோனாலுலுவில் ஒரு ஹாலி டே ரிஸார்ட்
9. பஸிபிக் கடல் நடுவில் பத்து பனை மரங்களுடன் ஒரு சின்ன தீவு
10.முதல் டாப் பத்து கம்பெனிகளுக்கு கன்ஸல்டெண்ட்.
11. உலகின் முதல் பணக்கார ஐந்து கம்பெனிகளின் ஷேர்கள்.
12. ஸான் ஹோஸேயில் ஒரு ஹாலிடே ஹோம்!
13. இங்கிலாந்தின் ‘லார்ட்’ பட்டம் நம்ம ஸ்வராஜ் பால் போல்!
14. ஸ்விஸ் பேங்க்கில் கணிசமாய் கரன்ஸி
15. மைசூர் அருகே காஃபி எஸ்டேட்
16. நெய்யாற்றங்கரையில் செட்டி நாட்டரசர் வீடு!
இது எப்படி இருக்கு?
’ஆஃபீஸ் கோயரி’லிருந்து அரசியல் வாதிகள் வரை அனைவருமே குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப் படுகிறார்கள். அவர்களுடைய இளமைப் பருவம் பணம் என்கிற மாபெரும் அசுரனால் அலைக்கழைக்கப் படுகிறது..என்ன சொல்ல?
’அப்பா, எப்ப கல்யாணம்?’
‘ முதல்ல லைஃப்ல செட்டில ஆயிட்டு தான்’
’...இவன் லைஃப்ல செட்டில் ஆகிறதுக்குள்ள, இவன் லைஃபே செட்டில் ஆயிடுமோ’ன்னு எனக்கு பயம்!
‘ உன் ஆசை நியாயம் தான்..அதுக்குள்ள வயசாயிடுமே அப்பா’
‘ஆனா, ஆகட்டும்’
’வயசானா, எந்த பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா’
‘ ..அப்ப வேண்டாம்..அது சரி..எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்?’
‘ என்ன இப்படி கேட்கிறே? வயசான காலத்துல உனக்கு உடம்பு முடியாமப் போனா, அந்த பொண்ணு ஒரு கால் வயத்து கஞ்சி வைச்சுத் தருமே..’
’... அட அஸத்தே..ஒரு கால் வயத்துக் கஞ்சிக்கா கல்யாணம் பண்ணிண்டாய்’ என்பது போல் அவன் என்னைப் பார்க்க....
அது சகிக்காமல் நகர்ந்தேன், நான்.
ஜப்பானில் இப்போதெல்லாம் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லையாம்..அது போல் இங்கும் ஆகி விட்டால்,ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஆயிரமாக இருந்த நாம், பத்து பதினைந்துக்குள் வந்து விடுவோம்..அப்பா,அம்மா தவிர எல்லா உறவுகளும் போய் விட,உறவுகள் என்ன..மனிதர்களுக்கு பெயரும் போய்..அவன் வலது கை கட்டை விரல் ரேகையை வைத்து ஆளுக்கு ஒரு ’ஆல்ஃபா நியூமரிக்’ யுஐடி நம்பர் ஒன்று கொடுத்து விடுவார்கள்..அப்புறம் ரோபோவிற்கும் நமக்கும் உள்ள இடைவெளி கம்மியாகப் போய்..
என்ன கஷ்டமடா சாமி?
பெண்கள் பாடு இன்னும் மோசம்! நன்றாகப் படித்து, நல்ல வேலை கிடைத்தவுடன் அப்பா VRS ஸில் வந்து விட,அண்ணன் ,தம்பிகள் சோம்பேறிகளாய் ஆகி..அத்தனை
குடும்ப பாரத்தையும் அவளே சுமக்க..சமயத்தில் தன்னை மெழுகுவர்த்தியாய் அவள் நினைத்துக் கொண்டு..தன்னைப் பற்றி ஒரு சுயபச்சாபத்தோடு...வாழ்நாள் முழுவதும் முதிர்கன்னியாய்...
ஆனால் ஒன்று..திருமண விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் பரவாயில்லை என்று நினைக்கிறேன்..சூழ்நிலை சாதகமாய் இருந்தால்,பெண்ணைப் பெற்றவன் ஜாதகக் கட்டை தூக்கலாம்!
அதில் ஒன்று தான் இது!
PEST CONTROL கம்பெனிகள் போல், PEST DEVELOPMENT கம்பெனிகள் நாட்டில்
உருவாகி, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமாய் கரப்பான்பூச்சிகளையும், பல்லிகளையும் சப்ளை செய்தால் இந்த பிரச்னை ஓரளவு தீரும்!
’ திடீர்னு என்ன ஸ்வாமி உளறுகிறீர்?’என்று வாசகன் கேட்க..
’உளறவில்லை ஐயா..லேட்டஸ்ட்டா ட்வீட் ஒன்று பார்த்தேன்..அதுல....’
‘ அதுல?’
‘ நீரும் தான் பாருமே!’
அந்த ட்வீட் இது தான் :
தன் வீட்டு சமையல் உள்ளில், நடமாடும் பல்லி,கரப்பான் பூச்சி,சுண்டெலிகளை வீழ்த்த,ஒரு ஆண் தேவைப்படுவதாலேயே,பெண் திருமணம் செய்து கொள்கிறாள்!

24 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரே சிரிப்புத்தான்.

//தன் வீட்டு சமையல் உள்ளில், நடமாடும் பல்லி,கரப்பான் பூச்சி,சுண்டெலிகளை வீழ்த்த,ஒரு ஆண் தேவைப்படுவதாலேயே,பெண் திருமணம் செய்து கொள்கிறாள்!//

ஆனால் நான் திருமணம் செய்து கொண்டது உல்டா. இந்த ஜந்துக்களைக்கண்டாலே எனக்கு மிகவும் அலர்ஜி. அவைகளை வீழ்த்துவதும் அவளே, சமயத்தில் குறுக்கே தப்பித்தவறி சென்றால் நானே கூட வீழ்த்தப்படலாம்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

Voted. 2 to 3 in Indli

நிலாமகள் said...

இந்த‌க்கால‌ ப‌தினாறு பேறுக‌ள் சுவார‌ஸ்ய‌ம். போதுமா?! முத்தாய்ப்பான‌ சிரிப்பூட்ட‌ல் த‌ங்க‌ளின் முத்திரை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொன்னதும் குறைந்தபக்ஷம் 16 முறைகள் இடுப்புவலிப்பட்டு, பிரஸவித்து அந்தக்குழந்தைகளுக்கு 1 to 16 என்று பெயரிட்டு, விற்கும் விலைவாசியில், கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் கஷ்டப்படனுமாக்கும் என்று பயந்து போனேன்.

ஆனால் தாங்கள் மிகச்சுலபமான 16 விஷயங்களைப் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்.

அந்த இடுப்புவலியே தேவலாம் என்று தோன்றுகிறது.

கரப்பான்பூச்சி போலவே சரியான படுத்தல் உம்முடன்.

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான பதினாறு பேறுகள். இப்படித்தான் ஆசைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

கரப்பான்பூச்சி கல்யாணம் நல்ல நகைச்சுவை.... :)))

middleclassmadhavi said...

இப்போ pest control போன்ற வசதிகள் நிறைய இருக்கே!!
ஆனாலும் 16 சூப்பர் 16!!

ADHI VENKAT said...

பதினாறு பேறுகளும் நல்லாயிருக்கு. கரப்பான் பல்லியை வீழ்த்த கல்யாணமா!!!! :)

A.R.ராஜகோபாலன் said...

இன்றைய இளைஞர்களின் மனதை அப்படியே பதிந்திருக்குறீர்கள்
அதுவும் நகைச்சுவை உணர்வுடன்
நல்ல பதிவு சார்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

புதுசா இருக்கே இந்த பதினாறு...சூப்பர்... ரெம்பவும் தான் மாறி போச்சுங்க ஊரு... பயமாத்தான் இருக்கு...:)

ஸ்வர்ணரேக்கா said...

//எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்?’
‘ என்ன இப்படி கேட்கிறே? வயசான காலத்துல உனக்கு உடம்பு முடியாமப் போனா, அந்த பொண்ணு ஒரு கால் வயத்து கஞ்சி வைச்சுத் தருமே..’//

அதானே.. அந்த பொண்ணு தான் கஞ்சி வைக்கணும்.. தப்பித்தவறி அந்த பொண்ணுக்கு உடம்பு முடியலன்னா.. அப்பவும் அந்த பெண்ணே தான் தனக்கு கஞ்சி வெச்சிக்கணும்... இல்லையா..?

நமக்கே நமக்குன்னு ஒரு துணை வேணும்ங்கற conceptல்லாம் இல்ல.. கஞ்சி concept தான் கல்யாணத்துக்கு காரணமா..?

ரிஷபன் said...

16ம் ஆஹா.. என்ன ரசனை..
கரப்பான் பூச்சிக்கு பயப்படற காலம் போயாச்சு.. கையில் உருட்டுக்கட்டை எடுத்தால் கரப்பான் பூச்சியை விட பாஸ்ட்டாய் வுடு ஜூட்..

அப்பாதுரை said...

நெய்யாற்றங்கரை பார்க்க ஆசை வந்துடுச்சு..

வசந்தமுல்லை said...

1. மஸ்ஸாசுஸெட்ஸில் எம்.பி.ஏ.
2. ஹார்வர்டில் பி.ஹெச்.டி.
3. முதல் வருடாந்திர சம்பளம் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்.
4. அதுவும் டாலரில்!
5. லாஸ் ஏஞ்சல்ஸில் டபுள் பெட் ரூம் ஃப்ளாட்.
6. சிலிக்கன் வாலி பக்கத்தில் பண்ணை வீடு
7. பென்ஸ் அல்லது ஆடி.லோக்கலுக்கு வோல்ஸ் வேகன்!
8. ஹோனாலுலுவில் ஒரு ஹாலி டே ரிஸார்ட்
9. பஸிபிக் கடல் நடுவில் பத்து பனை மரங்களுடன் ஒரு சின்ன தீவு
10.முதல் டாப் பத்து கம்பெனிகளுக்கு கன்ஸல்டெண்ட்.
11. உலகின் முதல் பணக்கார ஐந்து கம்பெனிகளின் ஷேர்கள்.
12. ஸான் ஹோஸேயில் ஒரு ஹாலிடே ஹோம்!
13. இங்கிலாந்தின் ‘லார்ட்’ பட்டம் நம்ம ஸ்வராஜ் பால் போல்!
14. ஸ்விஸ் பேங்க்கில் கணிசமாய் கரன்ஸி
15. மைசூர் அருகே காஃபி எஸ்டேட்
16. நெய்யாற்றங்கரையில் செட்டி நாட்டரசர் வீடு!

சூப்பர் பதினாறு!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அசத்தலான நகைச்சுவைப் பதிவு....

அப்பாதுரை said...

ஷோபனா இமெயில் முகவரியும் சேர்க்கலாமே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவர்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை..இங்கே பூம்புகாரில் அதே சைஸ் Rs.10,000/- சொல்கிறார்கள்..அவர்கள் எட்டாயிரம் ரூபாய்க்குத் தருகிறார்கள்..ஆனால்,கையில் படம் கிடைக்க இரண்டு வாரம் ஆகும்..எனக்கு ஒரு படம் கேட்டேன்..தஞ்சாவூர் பெயிண்டிங் இல்லை..கேரள அகடமியில் கேட்டுச் சொல்கிறேன் என்றார்கள்..என்ன படம் என்றால்,தமயந்தி விரக தாபத்தில்,தாமரை இலையில் தன் நகக் கீற்றினால், துஷ்யந்தனுக்கு மடல் வரையும் காட்சி!ரவி வர்மா வரைந்த் படம் அது!!

வெங்கட் நாகராஜ் said...

MANY MANY HAPPY RETURNS OF THE DAY. இந்த நாளும், வரப் போகும் நாட்களும் இனிமையானதாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

நட்புடன்

வெங்கட், ஆதி வெங்கட் மற்றும் ரோஷ்ணி.
புது தில்லி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அனைவருக்கும் நன்றி! எப்போதோ போட்ட பதிவை ஞாபகம் வைத்துக் கொண்டு,இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வெங்கட் குடும்பத்தாருக்கு மனமார்ந்த நன்றி!

பத்மநாபன் said...

இப்பொழுது தான் ரவி சார் பதிவில் பார்த்தேன்.... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்...

வாழ்க வளமுடன்...

ஊட்டி பைக்காராவில் எப்பொழுது இருந்தீர்கள் என்று சொல்ல வில்லையே...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க, பத்மநாபன்..மிக்க நன்றி.. நாங்கள் பைகாராவில் இருந்தது 1958 வாக்கில் என்று நினைக்கிறேன்...

பத்மநாபன் said...

அஹா .. .நல்ல ஞாபகசக்தி . நீங்கள் சொல்லிய காலம் அணைகளும் மின் நிலையங்களும் சுறு சுறுப்பாக கட்டுமான பணிகள் நடை பெற்று பைகாரா ஒரு நகரமாக விளங்கியதென்று அங்கிருந்தவர்கள் சொல்வார்கள் ...நான் 90 - 94 ல் மின்நிலைய பொறியாளனாக இருந்தேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்மநாபன் ரவி சார் பதிவில் பார்த்தேன் என்றீர்களே? அதன் web address சொல்ல முடியுமா? நான் அந்த பதிவு ஏப்ரல் 12ம் தேதி ஹாஸ்ய ஜோதி என்ற தலைப்பில் எழுதியதாய் ஞாபகம்!..

மோகன்ஜி said...

என் அன்பிற்கினிய மூவார்! ஊர்சுற்றிவிட்டு வந்து ஜுரத்தில் படுத்து விட்டேன். தாமதமாய் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை ஏற்றுக் கொண்டு, நீங்கள் சொன்ன பதினாறும் பெற்று நான் பெருவாழ்வு வாழ ஆசீர்வதிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சர்வ ஜானா(ஜானா எங்க வீட்டு பக்கத்து வீட்டுப் பெண்)
சுகினோ பவந்து!
இது மோகன் ஜிக்கு!!

பத்மநாபன் said...

மூவார் சார் ரவிபிரகாஷ் சாரின் உங்கள் ரசிகன் வலைப்பூவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து அறிந்ததை குறிப்பிட்டேன் .

நன்றி.. இந்த சாக்கில் ஹாஸ்ய ஜோதி படிச்சு சிரிக்க வைத்தற்கு