நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Friday, June 17, 2011
காது!
வர வர வைதேஹிக்கு காது சரியாய் கேட்பதில்லை..
அதுவும் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து எதையும் இரண்டு மூன்று தடவை சொல்ல வேண்டியுள்ளது..
இன்றைக்கு ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விட வேண்டியது தான்!
’கன்ஃப்ர்ம்’ ஆனா, சாயங்காலம் இரண்டு பேரும் காய்கறி வாங்கப் போகும் போது, காது டாக்டர்கிட்ட கூட்டிக் கிட்டு போக வேண்டியது தான்..
கடகடவென்று மாடிக்குப் போனேன்..
“ வைது, இன்னிக்கு டின்னர் என்ன?”
பதில் இல்லை!
பெட்ரூம் வந்தேன்.
“ வைது இன்னிக்கு நைட் என்ன பண்ணப் போறே?”
அதற்கும் பதிலில்லை.
ஹாலுக்கு வந்து கத்தினேன்.
“வைதேஹி.. நைட் மீல்ஸா...இல்ல டிஃபனா?”
ம்ஹூம்..
கடைசி சான்ஸ் .சமையல் ரூமில் கேட்டுட வேண்டியது தான்..
சமையல் ரூம் சென்று,வாயையைத் திறக்குமுன்....
வைதேஹி மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..
“டேய் ராகவ்..உங்கப்பாக்கு நிஜம்மாவே காது ’டர்’ராயிடுத்து..மாடியிலிருந்து டின்னர் என்னன்னு கேட்டார்..இட்லின்னேன்..காதுல விழலப் போல இருக்கு..பெட்ரூம் வந்து கத்தினார்..அப்ப பொங்கல்னேன்..அதுவும் விழலை..இப்ப ஹாலுக்கு வந்து கத்தறார்..
உப்புமான்னேன்.இதுக்கும் ..உங்கப்பாட்டேர்ந்து ‘ நோ ரெஸ்பான்ஸ்’
நல்லாவே ’கன்ஃப்ர்ம்’ ஆயிடுச்சு.. சாயங்காலம் இரண்டு பேரும் காய்கறி வாங்கப் போகும் போது, காது டாக்டர்கிட்ட கூட்டிக் கிட்டு போக வேண்டியது தான்..”
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
arumaiyaa irukkungka.. turning point super... vaalththukkal
மற்றவர்களிடம் இல்லாத குறையை கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே நாம் நம் குறைகளை தெரியாதிருக்கிறோம் என்ற நுணுக்கமான விஷயத்தை நகைச்சுவையாய் சொன்ன விதம் அருமை சார்
கலக்கிட்டீங்க
//சமையல் ரூம் சென்று,வாயையைத் திறக்குமுன்....
வைதேஹி மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..//
இது மட்டும் அந்த மனிதருக்குக் கேட்டுள்ளது பாருங்கள்.
பாம்புச்செவி போலிருக்கு அவ்ருக்கு!
[என்பார்கள் சிலர்.]
பாம்புக்குச்செவியே கிடையாது என்பார்கள் பலர்.
மொத்தத்தில் காது டாக்டர் காட்டில் இன்று இரட்டை மழை பெய்ய உள்ளது.
காரியச்செவிடு என்று ஒரு வகையறா உண்டு. தனக்கு ஆதாயமான சமாச்சாரங்கள் மட்டுமே இவர்கள் காதில் விழும். மற்றவை சுத்தமாக விழாது.
நேற்று காலை சுமார் 11.30 க்கு ஒரு அதிசயம் நடந்தது. தங்கள் அருமை மகள் என்னை எப்படியோ [ப்ளாக் பதிவுகளில் என்னை போட்டோவைப் பார்த்திருப்பதால்] அடையாளம் கண்டுபிடித்து, தங்கள் மனைவியின் காதைப்பிடித்து அதுபற்றிச்சொல்ல, அதை தங்கள் மனைவி காதில் வாங்கியவுடன், என்னிடம் அது பற்றி உறுதி செய்ய, எனக்கு ஒரே சந்தோஷம். அது பற்றி உங்கள் காதில் போட்டார்களா?
கா தோ டு தான்..... நான் பேசுவேன் யாரோ பாடுவது காதில் விழுகிறது.
நல்ல நகைச்சுவைக் கதையை காதில் போட்டதற்கு. காதால் நன்றி சொல்லுகிறேன். அன்புடன் vgk
அட டாக்டர் கூட்டிக்கொண்டு போக நினைத்த ஐயா தான் செகிடா! சரியா போச்சுப் போங்க… நம்மிடம் இருக்கும் குறை நமக்குத் தெரியாமலேயே இருக்கிறோம் என்பதைச் சுவைபட சொல்லியிருக்கும் சிறிய கதை…
நல்லா இருந்தது கதை....
என்னமோ நகைச்சுவையா சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா காதில விழலே...
//கே. பி. ஜனா... said...
என்னமோ நகைச்சுவையா சொல்றீங்கன்னு தெரியுது.. ஆனா காதில விழலே...//
அன்புள்ள ஜனா, சார்,
’மணல்கயிறு’ படத்தில் வரும் தாத்தா சொல்லுவது போல இது நல்ல நகைச்சுவையாக உள்ளது.
படித்ததும் நான் குபீரென்று சிரித்து விட்டேன்.
மதுரை சரவணன்: romba thanks
ராஜகோபாலன் சார்..உங்கள் கமெண்ட் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது..மிக்க நன்றி!
வை.கோ. ஸார்..அவர்கள் தங்களைப் பற்றி சொன்னது என் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது!
ஆம்..வெங்கட்... நம் குறை நமக்கு தெரியாது..தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டோம்!!
அப்படியா எல்லென்..தங்கள் திண்ணையை விடவா?
ஜனா சார்..அங்கேர்ந்து பேசினா எப்படி காதில விழும்..கொஞ்சம் கிட்ட வந்து தான் சொல்லுங்களேன்!
கடைசீல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து என்னை மணல் கயிறு தாத்தா ஆக்கிட்டீங்க....
போச்சுடா! அந்த அய்யாவுக்கு தான் காது கேட்கலயா!
வை.கோ சார் சொன்னதும் மணல் கயிறு பட தாத்தாவும், ஆஹா பட தாத்தாவும் மனதில் வந்து சிரித்தேன்.
கடைசில மட்டும் எப்படி காதுல விழுந்துச்சு? என்ன? ஆராயக்கூடாது, அனுபவிக்கணுமா? ஆகட்டும், அனுபவிச்சேன். nice...very nice.
என்னப் பார்த்தவுடன் உங்களுக்கு எல்லா தாத்தாக்களும் ஞாபகம் வந்துடுமே கோவை 2 தில்லி?
சமையல் ரூமில் அவர்கள் அருகில் இருந்ததினால் காதில் விழுந்திருக்கிறது,ஸார்..
காது கேட்காது....கதை அருமை...
அழகாய் தமிழ்ப் படுத்தி இருக்கிறீர்கள்!
ஆம் பத்ம நாபன்..காது கேட்காது! அது சரி காது எதைத் தான் கேட்டது? வாய் தான் கேட்கும் அடை வேண்டும்..ஐஸ்க்ரீம் வேண்டும் என்று!
வாங்க ரிஷபன்..
டெஸ்ட்,
கன்ஃபர்ம்,
டின்னர்,
பெட்ரூம்,
நைட்,
ஹால்,
மீல்ஸ்,
டிஃபன்..
போன்றவற்றைத் தானே சொல்கிறீர்கள்!
சிரிப்பை வரவைத்தாலும் சிந்திக்க வைத்த கதை. குறை ஒன்றுமில்லை என்று சொல்கிறோம் நம்மிடம் வைத்துக் கொண்டே.
அட நம்ம சிவக்குமார்! வாங்க..வாங்க...
உங்களுக்காக நான் கீர்த்தனாஞ்சலியில் காத்துக் கிட்டு இருக்கேன்.. நீங்க இங்க வந்துட்டீங்க!!
வணக்கம் சார். இன்றுதான் உஙகள் பதிவை படிக்கிறேன்.மிகவும் அருமையாக இருக்கிறது. புதியதாக பதிவு எழுத ஆரம்பித்து இருக்கும் என்னையும் மதித்து என் பதிவை பார்த்து கருத்துரையிட்டதறக்கு மிகவும் நன்றி.
செல்போனில் பேசும் நேரத்தைக் குறைத்தால் மிச்சமீதி கேட்கும் திறனாவது காப்பாற்றப்படுமோ... எப்படியோ கதையில் ஒரு மாற்று சிந்தனைக்கு வழியிருந்தது!எங்களுக்கெல்லாம் கண்ணிருக்கும் வரை உங்க ஹாஸ்யங்களை படித்து சிரித்துக் கொள்ள முடியும் அப்பாடா!
வாங்க RAMVI ...தங்கள் முதல் வருகைக்கு நன்றி!
நிலாமகள் மேடம்...தங்கள் எழுத்து எனக்கு நிச்சயம் டானிக்..இன்னும் சிறப்பாய் செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது...மிக்க நன்றி மேடம்!
காது..........கேக்'காது' :-))))))
முதல் முதலா நம்ம தளத்திற்கு வர்ரீங்க...வந்தனம் துளசி கோபால்!
Post a Comment