Tuesday, April 19, 2011

வாஷிங்டனுக்கு வா..!!!!!!



செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன்.
ஒபாமா....!!!!
" என்னப்பா, அங்கே எப்படி இருக்கு?"
அவருக்கு என் மீது ரொம்பவும் ப்ரியம். திருச்சி வந்தால் என்னைப் பார்க்காமல் போக மாட்டார். என்னை விட தமிழ் மீது ரொம்பவும் ப்ரியம்.இந்தோனிஷியாவில் படிக்கும் போது, தமிழ் கத்துக் கொண்டாராம்.
" எலக்சன் எப்படி போச்சு! "

இரண்டு மூன்று நாளா, அவர் அதை பற்றித் தான் கேட்கிறார்..மனுஷன் இவ்வளவு ஆர்வமாய் கேட்கிறதைப் பார்த்தால், யாரோ உள்ளூர் அரசியல் வாதியின் பினாமியா இருப்பாரோன்னு எனக்கு லைட்டா டவுட் வர ஆரம்பித்தது..
" வாஷிங்டன் எப்ப வரே?"
இங்க வாஷிங் சோடா வாங்கக் கூட,கையில காசு இல்லாம தவிக்கிற நேரத்தில இப்படி ஒரு ஆஃபர்...
" நீ இங்க வந்தா, நான் ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு, உன்னோட மொக்கைகளை நாள் பூரா ரசிச்சுட்டு இருப்பேன்..இங்க பொடாமக் நதிக் கரையாண்டே, பொட்டுக்கடலை தின்னுட்டு ஜாலியா பொழுது போக்கலாம்..உனக்கு இந்த ஊர் பூரா சுத்திக் காண்பிப்பேன்"
" வரும் போது, வரேன்"
பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.
ஒபாமாக்கு அமுல் பிடிக்கும்..இங்கேர்ந்து ஒரு டின்னை எடுத்துண்டு போய் கொடுத்தா, நம்மூர் கிருஷ்ணர் அவல் திங்கறாமாதிரி அவர் அமுல் திங்க ஆரம்பிச்சா, என்னொட வொய்ட் ஹவுஸ் கூட வெள்ளை மாளிகை மாதிரி ஆகி விடும்.
அதுக்கு அங்க போகணுமே..
பஞ்சு,லல்லிக்கு (வாஷிங்டனில் திருமணம் பார்க்கவும்) அறுபதாம் கல்யாணத்துக்குப் போலாமென்றால், எனக்கு அம்மாஞ்சி மாதிரி வேதம் தெரியாது. எப்படி போறது?
'தோழனோடும் ஏழமை பேசேல்' என்ற பழமொழி என்னைத் தடுத்தது.
இல்லாவிட்டால், ஒரு வார்த்தை சொன்னால், அவர் ஃப்ளைட் டிக்கெட் அனுப்ப மாட்டாரா, என்ன?
அட...இன்னொரு ஃபோன்.
" ஹலோ"
" யாரு?"
" கடாஃபிப்பா.."
" அட, எப்படி இருக்கே"
" ஒண்ணும் சொல்றா மாதிரி இல்ல..ரொம்ப கஷ்டம்..நீ ஒபாமாவோட பேசினியா?"
" அட, இப்ப தான் அவர் பேசினார்!"
" வழக்கம் போல மறந்துட்டியா? சரி..அடுத்த தடவை வரும் போது சொல்லு.. நா உன் ஆளுன்னு"
கடாஃபியும், நானும் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்துப் பக்கத்து டீக் கடையில சிங்கிள் டீஐ சிப் பண்ணிக் குடிச்சவங்க..இன்னும் என்னை மறக்காம இருக்கான்.
அது சரி ஒரு மொக்கை உனக்கு இமெயில் பண்ணியிருக்கேன். படிச்சுப் பாரு"
உடனே லாப்டாப்பைத் திறந்தேன்.
அதில் வந்த மெயில்:
ஹெலிகாப்டர் : எப்படி அண்ணே, இவ்வளவு ஸ்பீடா உங்களால, பறக்க முடியுது?
ராக்கெட் : உனக்குப் பின்னால பத்திக் கிட்டு எரிஞ்சா, நீயும் அது மாதிரி பறப்பே, தம்பி!
லிபியா பத்திக்கிட்டு எரியும் போது கடாஃபி சொன்ன ஜோக் இது!
(பின் குறிப்பு: திரு ஆர்.ஆர்.ஆர். அவர்களின் ஆட்டோபயாக்ரஃபி " MY EXPERIMENTS WITH FALSE" என்ற நூலிலிருந்து திருடப் பட்டது)

20 comments:

வசந்தமுல்லை said...

இப்படி கூட மொக்கை போடா முடியுமா ? அண்ணாரே!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரொம்ப நல்லா ஜாலியா சிரிப்பா இருக்குது, இந்த கற்பனை. பின் குறிப்பும் அருமை. அவலுக்கு பதிலா அமுல், அமுல் படுத்தியது நல்லாவே இருக்கு.

//உனக்குப் பின்னால பத்திக் கிட்டு எரிஞ்சா, நீயும் அது மாதிரி பறப்பே, தம்பி!//

ராக்கெட் அண்ணா, நல்லா அனுபவித்து சொல்லியிருக்கிறார்.

பாராட்டுக்கள்.

Chitra said...

(பின் குறிப்பு: திரு ஆர்.ஆர்.ஆர். அவர்களின் ஆட்டோபயாக்ரஃபி " MY EXPERIMENTS WITH FALSE" என்ற நூலிலிருந்து திருடப் பட்டது)


..... அப்படியா? சூப்பர் செய்தி. வாழ்த்துக்கள்!

சிவகுமாரன் said...

அப்படியே நம்மளை பத்தியும் கொஞ்சம் ஒபாமா அண்ணன்கிட்ட சொல்லி வையுங்க .. நல்லவரு வல்லவரு நல்லா .... பெண்டு எடுப்பாரு அப்படின்னு .
(ஹ்ம்ம் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனசோட இளமைதான் காரணம்னு சொல்றேன்.இல்லேன்னு சொல்லுவீங்களா இப்பிடியெல்லாம் யோசிக்கறதுக்கு?

ஆனா எனக்குப் பேசினப்பறம்தான் ஒபாமாவும் கடாஃபியும் உங்களுக்குப் பேசினாங்கங்கறதையும் நீங்க எழுதியிருக்கலாம் சார்.

இராஜராஜேஸ்வரி said...

உள்ளூர் அரசியல் வாதியின் பினாமியா இருப்பாரோன்னு எனக்கு லைட்டா டவுட் வர ஆரம்பித்தது//
பினாமியா? சுனாமியா???

vasan said...

அருமையான நிக‌ழ் உல‌க அரசிய‌ல் பிண்ண‌னியில் ஒரு பின்ன‌ல்.
பின்னி எடுத்து விட்டீர்க‌ள்.
யாரோடு இருக்கும் போது இந்த‌ ம‌னநிலை வ‌ருகிற‌து உங்க‌ளுக்கு?
அல்ல‌து எழுதத் தொட‌ங்கிய பின்பு தனியே, த‌ன்ன‌ந்த‌னியேவா?

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

என்னதான் சுகமான கற்பனை என்றாலும் இப்படியா சார் ஒரு மரணமொக்கையை வாரி வழங்குவது?(ரூம் போட்டு யோசிச்சீயளோ?)

ரிஷபன் said...

Super Imagination..
Congrats

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மொக்கைன்னா என்ன? எனக்கு ஒண்ணும் தெரியாதே, வாத்யாரே! இதுல மரண மொக்கையாம்..
அப்படீன்னா என்ன..சாகும் போது ஜோக் சொல்லணுமா? இல்ல ஜோக் சொல்லி சாக அடிக்கணுமா?
எல்லன் சார், உங்களைத் தான் கேட்கிறேன்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை, கோ..சார் இதையும் கேட்டுக்குங்க..மெழுகுவர்த்திக்கும் ராக்கெட்டுக்கும் என்னா வித்யாசம்?
முன்னாடி பத்திக்கும் போது பொறூமையா நின்னா, அது மெழுகுவர்த்தி! பின்னாடி பத்திக்கும் போது பொறுமையில்லாம பறந்தா அது ராக்கெட்!!
வசந்த முல்லை: சார்..சார்..இது தான் மொக்கை!
எல்லன் : மரண மொக்கையும் இது தான்!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா..அந்த புக்கை பத்தி நானே சொல்லக் கூடாது..
MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY யில், அந்த புக்கை டெஸ்ட் புக்கா வைச்சிருக்காங்க....

எல்லன் : சார்..சார்..இதுவும் மரண மொக்கை தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அன்பு சிவக் குமாரா, வாஷிங்டன் மெமொரியல் ஹாலில் தங்கள் சிவஸ் துதியை ப்ரேம் போட்டு மாட்டுவதாக சொல்லியிருக்கிறார்,ஒபாமா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஓபாமா, கடாஃபி மட்டுமில்ல..ஐ நா தலைவர், ப்ரான்ஸ் அதிபர் (உங்களைப் பார்க்க பாண்டிச்சேரி வந்தாராமே, அதையும் சொன்னார்..(இப்ப திருப்தி தானே சார்..)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராஜராஜேஸ்வரி, ஜப்பானுக்கு சுனாமி.. நமக்கு பினாமி..ஜப்பான் எழுந்துடும்.. நாம நல்லா குறட்டை விட்டல்ல தூங்கறோம்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன் சார்..யாரோட இருக்கும்போதும்..தனியா இருக்கும் போதும் இது எழுதப் படவில்லை..JUST ஒரு இரண்டு நிமிடம் யோசித்தது..எழுத்தில் வர ஐந்து நிமிடம் அவ்வளவு தான்..
ரொம்ப ஸ்ரத்தை எடுத்து எழுதுவது ஃப்ளாப் ஆவதும்,மிக,மிக லைட்டாக எழுதுவது பாப்புலர் ஆவதும் ஒரு அவஸ்தை தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லன் ரூம் போட்டு யோசிக்க ஆசை தான்..ஆனா யாரு நமக்காக ரூம் போடப் போறாங்க?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹலோ ரிஷபன், மிக்க நன்றி..இப்படித் தான் சமயத்தில, அடக்கத்தை அடக்கம் பண்ணிடுவேன், நான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

THANK YOU FOR YOUR FIRST VISIT..
MINE IS MERE FOOD; YOURS FOOD FOR THOUGHT!!!!

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல நகைச்சுவை இழையோட ஒரு கற்பனை! சிரிப்பு தாங்கவில்லை!