Thursday, December 30, 2010

தினந்தோறும் ஒரு ஓடல்!

வைத்ததை எடுக்கப்
போவது போல்,
தினம்..தினம்..
ஓடல்..
பின்,
களைத்துப் போய்..
வீடு திரும்பல்...
மறுபடியும்,
ஓடல்..
இப்படியாகத்
தான்
போய்க் கொண்டிருக்கிறது,
வாழ்க்கை!
இளைப்பாறுதலுக்குப்
பிறகு,
ப்ரிய ஸகியைக் கூட்டிக்
கொண்டு,
காசி,ராமேஸ்வரம் செல்லும்
எண்ணம்
எனக்கு
இல்லை!!
ஒவ்வொரு வருடமும்,
ஒவ்வொரு மாதம்,,
ஒவ்வொரு கண்டம்..
முதல் வருடம் ஐரோப்பா,
பின் அமெரிக்கா,
அதன் பின்,
ஆஸ்திரேலியா...
என்று உலகம் சுற்றப் போகிறேன், ஸகியோடு!
அந்த பரவச
நினைப்பே என்னுள்,
ஆக்ஸிஜனைத் தூவ,
துள்ளலுடன் என்
ஓடல் தொடர்கிறது,
ஆஃபீசுக்கு!

8 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சார் பிச்சுப்பிட்டீங்க பிச்சு. உங்களுக்கு எதுக்கு இளைப்பாறுதல் கிளைப்பாறுதல் எல்லாம்? அதெல்லாம் வயசானவங்களுக்குன்னுதான் கேழ்வி!!!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வாழ்வின் எல்லா கட்டத்திலும் கனவுகள் காண்பவன்தான் மனிதன். நல்லதுதானே

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, உங்களுக்கும் ஓட்டம் தானா? கவிதையாய் கலக்குங்க! பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உலகம் சுற்றும் வாலிபனாக ..ஸாரி.. தம்பதியாக மாற இருக்கும் தங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

உடம்பில் வலுவும், கையில் காசும், காலில் தெம்பும் உள்ள இப்போதே, ஒரு சோதனை ரவுண்டு போல ஒரு மாத லீவில் போய் வருவது நல்லது என்பது என் [அனுபவபூர்வ] அபிப்ராயம் & ஆலோசனை.

ஆனால் ஒன்று, எங்கு சுற்றினாலும் ஆரண்யநிவாஸ் திரும்பினால் தான் பாந்தப்படும்.

பத்மநாபன் said...

மனது இளமை இருக்கும் வரை வாழ்வு இனிமையாக இருக்கும் ...உங்கள் பயணம் திட்டமிட்டபடி இனிமையாக வாழ்த்துக்கள்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

RVS said...

எப்போதும் ஏதோ ஒரு தேடலுடன் ஓடல்.....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மூவர் முத்தே.. ;-)

G.M Balasubramaniam said...

எங்கு சுற்றினாலும் எங்கு தேடினாலும் கிடைக்காதது நம் கூட்டின் வாசம். அதன் அருமை அறிய நன்கு சுற்றுங்கள்.அநுபவமும் கூடும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அப்பாதுரை said...

அதாஆஆஆஆனே...
புத்தாண்டு வாழ்த்துக்கள்