Wednesday, December 22, 2010

இனி ஒரு விதி செய்வோம்!!!!

நாடு அவல நிலையை நோக்கிப்
போய்க் கொண்டிருக்கிறது...
காரணம் யார்?
ஆளும் கட்சியா...
காவல் துறையா...
அராஜகக் கும்பலா...
சமூக விரோத சக்திகளா...
பிஸினஸ் முதலைகளா...
கட்டைப் பஞ்சாயத்தா..
எதிர் கட்சிகளா.....
யோசித்துப் பார்த்தேன்...
யாரும் இல்லை..
பின்,
யார் காரணம்?
நான் !!!!!!!
நானா????????
ஆம், நான் தான் !!!
நான் என்ன ஒழுங்கா,
பிறரை விமர்சனம் செய்ய?
பட்டியலிட்டேன்.
காலையில்,
இரண்டு ஊழியர்களைப்
புறம் தள்ளி,
கால் மிதித்து,
பஸ்ஸில் ‘சீட்’டைக்
கைப்பற்றினேன்..
ஆஃபீஸ் டைம் அரை மணி
எடுத்துக் கொண்டேன்,
டிஃபன் சாப்பிட!
முக்கால் மணி நேரம்,
ஆஃபீஸ் ஃபோனில்,
வீட்டிற்குப் பேசினேன்..
ஆஃபீஸ் பேப்பரில்,
பசங்கள் ஸ்கூல் புஸ்தகங்களுக்கு,
ஆஃபீஸ் நேரத்தில்,
அட்டை போட்டேன்..
எனக்கு என்ன தகுதி
இருக்கிறது,
பிறரை குறை சொல்ல?
இனி,
நாம்...
இல்லையில்லை...
நான்
நேர்மையாய் இருக்க...
முயற்சி செய்வேன்..
இப்படி,
நம்மில் ஒத்த
கருத்துடைய ஒவ்வொருவரும்,
இருப்போம்..
யார் எப்படிப் போனால் என்ன..
நாம் இருப்போம்,
நேர்மையாய்...
ஆத்திரக்காரன் தான்,
சுடு சோற்றில்,
நடுவில் கை வைப்பான்...
நாம்,
மெதுவாய்,
பக்கவாட்டில் சாதம்,
ஆறிய பிறகு,
எடுப்பது போல்,
ஜீவாதாரமான,
கிராமங்களுக்குச்
செல்வோம்....
ஒவ்வொருவரும்
தம்தம் நடத்தையை
வைத்து,
மற்றொருவரை,
பின் தொடர வைப்போம்..
ஒரு பொது நலத்திற்கு,
மிலியனாய்க் குவிவோம்!
கதவுகள் இல்லா,
வீடுகள் சமைப்போம்!!!
ராணுவம் இல்லா,
நாட்டினை அமைப்போம்...
அகில உலகுக்கும்,
நம் இனிய பாரதமே,
தலைமையாய்.........

33 comments:

sury said...

is this April First ?
subbu rathinam
http://vazhvuneri.blogspot.com

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மிக மிக அருமை ராமமூர்த்தி சார். சுய மதிப்பீடு செய்து கொள்வதன் அவசியத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல சமுதாயம் என்பது தனி மனிதனிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.

சுந்தர்ஜி said...

சபாஷ் ராமமூர்த்தி சார்.

இப்படி சுயவிமர்சனம் புரிந்துகொள்ள தைரியம் உள்ளவர்களால் தான் நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது.

நீங்கள் எழுதியுள்ள அநேக விஷயங்கள் எனக்கும் உடன்பாடானவைதான்.

குறிப்பாக ராணுவத்துக்கு பதிலாய் அன்பு.கதவுகளில்லா வீடு.கிராமப் பொருளாதாரம்.

இது குறித்து நாம் தொடர்ந்து எழுதுவோம். பேசுவோம்.

எல் கே said...

arumai

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம் கவிதை மூலம் சொல்லி இருக்கீங்க. தொடர்வோம்.

raji said...

அனைவருக்கும் தேவையான சுய மதிப்பீடு.கருத்துள்ள கவிதை

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புதிய சிந்தனை வார்த்தைகளில் முயற்சித்தால் முடியாமல போய்விடும் !

VAI. GOPALAKRISHNAN said...

ஆஹா, பேஷ் பேஷ், கேட்கவே ரொம்ப நல்லாயிருக்கு

RVS said...

இப்படி ஒரு விதி செய்து அதை எந்த நாளும் காப்போம். ;-)

கோவை2தில்லி said...

அருமை.

ரிஷபன் said...

முனைந்தால் எதுவும் சாத்தியமே..

அப்பாவி தங்கமணி said...

very nice

Lakshminarayanan said...

தனி மனித ஒழுக்கம்தான் ஒட்டுமொத்த நாட்டின் உயர்நெறி என்ற கருத்தை நெற்றியில் அடித்தாற்போல் கவிதையாக செதுக்கியுள்ளீர்கள். சுய தவறுகளை ஒத்துக் கொள்ளவும், திருத்திக்கொள்ள முன் வரவும் பெரிய மனது வேண்டும்...வாழ்க உங்கள் தேசாபிமானம்!!

vasan said...

க‌த‌வில்லா வீடு...க‌னவு
ஊரோடு ஒட்ட‌ ஒழுக‌ள் நன‌வு.
ம‌டியில் க‌ண‌மில்லையெனில் வ‌ழியில் ப‌ய‌மில்லை.
ம‌டிக‌ண‌னியாய் இருந்தாலும் விக்கியோ என்ற ப‌ய‌ம்தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூரி சாருக்கு....

ஜனவரி FIRST !!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்பவும் கரெக்ட்..CHARITY BEGINS AT HOME என்பார்கள். CHARITY மட்டுமல்ல...”எல்லாமும்” தான்,
இல்லையா, வித்யா மேடம்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எழுதுவோம், சுந்தர்ஜி !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்தாருங்கள் பிடியுங்கள், என் தேங்க்ஸை..எல்.கே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி..வெங்கட்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இது இப்போது அனைவருக்கும் தேவை தானே ராஜி மேடம்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நிச்சயம் முடியும்..பனித்துளி சங்கர்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ. ஸாருக்கு...
ஆமாம்..அறுபதாகிய நாம் இருபதுடன் இணைவோம்.அறுபதின் அனுபவமும்,இருபதின் ஆற்றலும், வலிமைமிகு பாரதத்தினை நிச்சயம் உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன்.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அரிவாளை அப்படிப் போடுங்க...ஆர்.வி.எஸ்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி..கோவை 2 டில்லி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முனைந்தால் என்ன? முனைவோம்..சாதிப்போம்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி அப்பாவி தங்கமணி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லாரும் இப்படியே இருப்போம்..எல்லன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன் உங்கள் கமெண்ட்டால் என்னுள் எழுந்த கவிதை
இதோ...

“.....மடியில் கணனியின்றி,
மனத்தில் பயமுமின்றி..
மகிழ்ச்சியில் இருப்பாரடி..ஸகியே,
அவர்,
மந்தஹாஸம் புரிவாரடி..ஸகியே....யே..யே...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன் சார்..இதையும் புடிங்க...
“....விக்கி விக்கி
அழுதான் அந்த
VIP,
விக்கி லீக்ஸ்,
அவனை,
நனைத்து,
அடித்து,
துவைத்து,
கசக்கி,
காயப்
போட்ட போது!!!”

Harani said...

அருமை சார். தீதும் நன்றும் பிறர்தர வாரா. அருமையான பதிவு.

VAI. GOPALAKRISHNAN said...

60 ஐ 20 துடன்,

(கங்கையைக் காவேரியுடன் அரசியல்வாதிகள் இணைப்பது போல)

இணைத்து நமக்கு ஒரு வித எழுச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மீண்டு(ம்) வந்ததிற்கு நன்றி வை.கோ. சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹரிணிக்கு... நன்றி!