Saturday, December 25, 2010

சாதகம் செய்பவரைக் கண்டால்......????

இது சங்கீத சீசன். நம் பங்கிற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற தார்மீகப் பொறுப்பு நம் தலை மேல் விழுந்ததால் எழுதுகிறோம்!
பொதுவாக, ஸபாக் கச்சேரிகள் என்றால் எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு! சங்கீதப் பிரியர்கள் புதிது, புதிதாய் துக்கடாக்கள் கேட்கலாமே என்கிற ஆர்வம்..சாப்பாட்டுப் பிரியர்களுக்கு சபாக் கேண்டீன் பக்கோடாக்கள் மீது ப்ரேமை.. நாகரீக யுவதிகளுக்கு பாடகிகள் போட்டுக் கொண்டு வரும் லேட்ட்ஸ்ட் ஸாரி..புதுப் புது மோஸ்தரில்
நகைகள் என்று ஆர்வம்..பாடகிகளுக்கோ ஆரபிக்கு ஆரஞ்சு கலர்...சிந்து பைரவிக்கு சிகப்பு..ஸாவேரிக்கு சாக்லேட் கலர் என்று விதம்,விதமாய் பட்டுப் புடவை கட்டி அசத்த வேண்டும் என்கிற கட்டுக்கு அடங்காத ஆசை..
அந்த காலத்தில், தலை நிறைய மல்லிகைப் பூச் சூடி,மலைக்கோட்டை தாம் செல்ல, அகத்துக் காரர்கள், இங்கே ஆண்டார்வீதி மொட்டை மாடியில் நின்று கொண்டு,தம்தம் மூக்கை வான் நோக்கி காட்டி அந்த மல்லிகைப் பூ ஸ்வாசத்தை ஊக்கத்துடன் வாங்க வேண்டுமே என்கிற கவலையில், ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் பத்தினிப் பெண்டிர் போல,பணத்தை கொள்ளை..கொள்ளையாய் கொட்டிக் கொடுக்கும் NRI களுக்கு தாம் சபாக் கச்சேரிகளில் பண்ணும் தர்பார்களை...அங்க சேஷ்டைகளை..கொனஷ்டைகளை.. நம் அமெரிக்க நண்பர்கள் அங்கே,SKEPE ல் காண வேண்டுமே என்கிற கவலை..
சபா செக்ரட்டரிகளுக்கோ, கல்லா கட்டியாக வேண்டுமே என்கிற படபடப்பு...
இப்படியாகத் தானே இங்கு சங்கீதங்கள் தழைத்துக் கொண்டிருக்கின்றன!
நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..புதிது..புதிதாக ஆட்கள் தான் வருகிறார்கள்..
பாடுவதற்கும் சரி..கேட்பதற்கும் சரி..ஆனால், சங்கதிகள் என்னவோ அரதப் பழசு தான்..அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்! . ஒரு மோஹனம்..பைரவி..தோடி..சஹானா..ஷண்முகப்ரியா மட்டும் இல்லையென்றால் இங்கே பாதிப் பேர்களுக்கு பைத்தியமே பிடித்து விடும்..
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்..வித்வான்களுக்கும்,சங்கீத கலா ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக ஸபாக்கள் இருந்த காலம் போய்..இப்போதெல்லாம் யார்யாரோ வருகிறார்கள்..யார்யாரோ பாடுகிறார்கள்..மொத்தத்தில் ஒரு சினிமா தியெட்டர் போல ஆகி விட்டது சங்கீத சபாக்கள்!
ஒரு பிரபல சபாவில் மாலி கச்சேரி..சொதப்பிக் கொண்டிருந்தார்..அவர் கச்சேரி என்றால் அந்த காலத்திலேயே நூறு ரூபாய் எண்ட்ரன்ஸ் ஃபீஸ்! சொதப்பிய சொதப்பலில்
ஒரு கிழவர் எழுந்தார். எழுந்தவர் எரிச்சலுடன் கத்தினார்..”கட்டேலப் போறவனே வள்ளிசா,
நூறு ரூபாய் கொடுத்து உன் கச்சேரி கேட்க வந்தேன் பாரு..என்னை ஜோட்டால அடிக்கணும்..”
எல்லாருக்கும் பயம்! மாலிக்கு கோபம் ஜாஸ்தி..விருட்டென்று ஃப்ளூட்டை கடாசி விட்டு போய் விடப் போகிறாரோ என்று, ஆத்திரத்தில் அந்த கிழவரைப் பார்க்க..ஒரு நிமிடம் மெளனம்.. ஒரு நிமிடம் தான்..
பிறகு அங்கு கோலோச்சியதோ கர்ணாமிர்த ஸாகரம்!
” என்ன சொல்றேள்?” என்று மாலி அந்த கிழவரைப் பார்க்க “ அப்பா நீ ஸ்ரேயஸா இருக்கணும்”னு ஆசிர்வதித்தாராம் அந்த கிழவர்..
அந்த மாதிரி ரசிகாளுக்கும்..பாடகனுக்கும் உள்ள ஒரு அன்யோன்யம் இப்பல்லாம்
கிடையாது..
மாலி மாதிரியெல்லாம் சோபிக்கணும்னா அதுக்கு அசுர சாதகம் பண்ணனும்..வித்தை கை கூடி வர்ரது என்பது பகவத் ஸங்கல்பம்..எல்லாருக்கும் அவ்வளவு இலகுவில் வந்து விடாது..அது!
இப்படியாகத் தானே என் பக்கத்து வீட்டுக் காரருக்கு சங்கீதப் பைத்தியம் பிடிக்கப் போய்..
அர்த்த ராத்திரியில் அவர் அபாரமாய் சாதகம் பண்ண..அடியேனுக்கு அது பாரமாய் போய்..
நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே..அப்பப்பா....
அதற்காக ‘சாதகம் செய்பவரைக் கண்டால்..பயம் கொள்ளலாகாது பாப்பா..மோதி மிதித்து விடு பாப்பா..’ என்று அந்த முண்டாசு கவிஞனைப் போல் பாடவா முடியும்?
இராத்தூக்கம் போய் கண்கள் வீக்கியது தான் மிச்சம்!

25 comments:

வல்லிசிம்ஹன் said...

மலைக்கோட்டைக்கு மேல ஏறுவதே சிரமம். இதில் தலையில் மல்லி பாரமா;0)

காலத்துக்கேற்ற பதிவு. முக்கியமா அந்த ஸ்கைப் சமாசாரம்!

வெங்கட் நாகராஜ் said...

:)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

சபா கச்சேரிகள் பற்றிய பதிவு நன்றாக இருந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடடா....அந்தக்கால ஸபா கச்சேரிகள் முதல் இந்தக் காலம் வரை....சம்பந்தப்பட்ட அனைவரின் ஞானங்கள், எதிர்பார்ப்புகள்...அனைத்தையும் வெகு அருமையாக தங்களுக்கே உரித்தான நகைச்சுவையைக் கலந்து ஊட்டி மகிழ்வித்த தங்களுக்கு என் நன்றியும், பாரட்டுக்களும், வாழ்த்துக்களும்.

சங்கீத ஸபாக்கள் பக்கமே இதுவரை தலைகாட்டாத, மழைக்குக்கூட ஒதுங்காத எனக்கு, அதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வை ஊட்டி விட்டீர்கள்.

முதல் பத்தியில் தங்கள் தலை மீது விழுந்த தார்மீகப் பொறுப்பையும், கடைசி வரியில் தங்களுக்கு இராத்தூக்கம் போய் தங்கள் கண்கள் வீங்கியதையும், படித்ததும் சிரிப்பு ஒரு பக்கமும் தங்கள் மேல் இரக்கம் ஒரு பக்கமும் ஏற்பட்டது.

தொடரட்டும் இது போன்ற வித்யாசமான, அனுபவம் மிக்க பதிவுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் பதிவுகளைப் படிக்கும் போது, பூமழை பொழிவது போல இடைஇடையே வருவது மிகவும் நன்றாகவே இருக்கிறது.

அதுவே ஸ்வாரஸ்யமாக படிக்கும் எனக்கு சமயத்தில் இடையூறு அளிப்பது போலவும் உள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை அல்லது மூன்று முறை படித்துப் பார்க்க வெண்டியதாக உள்ளது.

முடிந்தால் தங்கள் பதிவின் மீது நேரிடையாக விழாமல், இடது புறம் மட்டும் பூமழையை பொழிய வைக்க முடியுமா என்று முயற்ச்சித்தால், என் கண்களுக்கு சற்று குளுமையாக இருக்குமே !

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சங்கீதம் டிசம்பர் சீசனில் விற்கும் வியாபாரப் பொருளாகிவிட்டது. ஒரு வித்தியாசம் இங்கு பாடுகிறவர்கள் பணம் கொடுக்கிறார்கள். இன்று இரவு ஏழு மணிக்கு NDTV HINDU வில் சஞ்சய் பின்டோவின் சங்கீத டிபேட் காணவும்.

Matangi Mawley said...

nalla pakirvu.. aanaa neenga sonnatha ennaala muzhusaa eduththukka mudiyaathu.. chinna vayasilernthu nerayaa concerts kettirukken... appaavoda pazhaya cassettes- MLV Mali DKJ MDR avaalalaamum kettirukken .. athu oru trend.. ithu oru trend nu thaan en view!

sanjay is always great... annikku naan mallaadi brothers ketten.. antha concert-um romba nannaa irunthathu! orey raagam thiruppi thiruppi paadaraa-ngara argument- enakku ennamo illa nnu thaan thonarathu!

சிவகுமாரன் said...

மிக அருமையான பதிவு.
எனக்கெல்லாம் சங்கீத ஞானம் ஜீரோ.எங்காவது சங்கீதக் கச்ச்ரி நடந்தால் உள்ளே நுழைய ஆசையாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கும். இது என்ன ராகம் என்று யாராவது கேட்டு விட்டால்? இந்த மாதிரி பதிவுகள் படித்து திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான்.சங்கீதக் காரர்களெல்லாம் ஏதோ தேவலோகத்திலிருந்து குதித்து வந்ததைப் போலொரு நினைப்பு எனக்கு. என்னைப் பொறுத்தவரையில்,
"சாதகம் செய்பவரைக் கண்டால்
சட்டென்று விழுந்து விடு பாப்பா " - தான்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. அந்த காலத்துடன் ஒப்பிட்டது நன்றாக இருந்தது.

vasan said...

ப‌திவு போட்ட‌பின் க‌ண் ச‌ரியாயிருச்சா? உறுத்த‌ல் கொஞ்ச‌மாவ‌து கொறைஞ்சுருக்கா? ஆர்ஆர்ஆர்.

ரிஷபன் said...

மாலியை தைரியமாய்க் கேட்ட கிழவர் போல நல்ல ரசிகர்கள் வாய்த்தால்.. பாடகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

Thenammai Lakshmanan said...

ஆரபிக்கு ஆரஞ்சு கலர்...சிந்து பைரவிக்கு சிகப்பு..ஸாவேரிக்கு சாக்லேட் கலர் என்று விதம்,விதமாய் பட்டுப் புடவை கட்டி அசத்த வேண்டும் என்கிற கட்டுக்கு அடங்காத ஆசை..
///

ஆஹா.. எங்கே திருமதி ஆர் ஆர் ஆர்.. கச்சேரி கேக்கப் போனாரா மனுஷர்.. கலர் பார்க்க போனாரா கேளுங்க மாமி..:)))

Thoduvanam said...

Super..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வல்லி சிம்ஹனுக்கு: இப்போது மலைக்கோட்டையை நினத்தாலே தலை சுற்றுகிறது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜுக்கு: :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லெனுக்கு: மிக்க நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ.விற்கு: எனக்கும் ஒன்றூம் தெரியாது.கேள்வி ஞானம் தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வித்யா மேடத்திற்கு: சங்கீதம் வியாபாரமாகத் தான் போய் விட்டது! ஒரு ஆத்மார்த்தமான லயிப்பு போய் விட்டது.எங்குமே ஆர்பாட்டமும்....ஆரவாரமுமாய்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மாதங்கி மேடத்திற்கு: romba..romba nanri!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சிவகுமாரனுக்கு: யாருக்குத் தான் தெரியும் அதன் அருமை? சும்மா பேத்தினேன்..அவ்வளவு தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோவை 2 தில்லி : மிக்க நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன் சாருக்கு: உறுத்தல் கொஞ்சூண்டு இருக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன்: ஆம் நண்பரே! பாடகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏன் நமக்கும் தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தேனம்மை மேடம்: ஏமி? மாமிட்ட என்னை மாட்டி விட்டுடிவீங்க போல இருக்கே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காளிதாஸ் சாருக்கு : நன்றி, ஐயா!