நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, December 4, 2010
பெண்ணே.......!!!
பெண்ணே!
என் அன்பை,
நீ நிராகரித்து விட்டாய்...
பரவாயில்லை..
ஒரு வேளை..
என்னை,
ஏற்றுக் கொண்டிருந்தால்,
நம்,
காதல் நிறைவேறி,
கடிமணம் புரிந்து,
இல்லறம் நடத்தி,
பிள்ளைகள் பெற்று,
வளர்த்து ஆளாக்கி,
அவையும் ஆளாகி,
ஒவ்வொன்றும்,
ஒரு திசைக்குப்
பறந்து..
எனக்கு அப்பா..
உனக்கு அம்மா..
என்று,
முதுமையில்,
நம்மைப்
பிரித்து விடுமே!
அதற்கு இது,
எவ்வளவோ..
பரவாயில்லை...
புத்திக் கொள் முதல்,
தாடியோடு போகட்டும்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
தாடிக்குக் காரணம் இத்தனைப் புலம்பல்களா ? புலம்பல் தாங்க முடியாமல் தான் அந்தப் பெண் அவனின் அன்பை நிராகரித்து, முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாளோ?
நீங்க வரைந்த படமா?
சமாளிபிகேஷன்ஸ்
நடைமுறைக்கு ஏற்ற கவிதை... உங்களுடைய கவிதையின் உண்மையான அர்த்தம் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்...
பிள்ளைகள் பிரித்து விடுவார்கள் என்பதற்காக காதல் நிராகரிப்பை ஏற்றுக்கொள்வதா? நான் உங்களை கண்டிக்கிறேன்
இது பழமா ..சீ.ச்ச்சீ இது புளிக்கும் என்று விலக...
பிரிந்தாலும் விலகாமல் இருப்பதல்லவோ காதல்....
அவ லவ்வு வேணாம்னு சொன்னத என்னமா பில்ட் அப் பண்ணியாச்சு.. !
கவிதை நன்றாகத்தான் இருக்கிறது... ஆனால் ,காதல் விலக்கப்பட்டதற்கான காரணம்தான் , ஹிஹி !
நகைச்சுவையான கவிதை!
நிராகரிக்கப்பட்ட காதலுக்கு மனது சமாதானம் சொல்லிக் கொள்ளுவது ரசிக்கும்படியாக இருக்கிறது!!
அப்படியொரு கோணமா? இது முன்பே தெரியாமல் போய்விட்டதே! அனாவசியமாகக் கெட்ட பெயர் சம்பாதிக்கறதுக்கு பதிலா 'தொலைநோக்குத் தியாகி'னு பட்டம் வாங்கியிருக்கலாமே, அடடா!
வை.கோ.: தாடிக்குக் காரணம் இத்தனைப் புலம்பல்களா ? புலம்பல் தாங்க முடியாமல் தான் அந்தப் பெண் அவனின் அன்பை நிராகரித்து, முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாளோ?
நான் : அப்படியும் இருக்கலாம்!
சித்ரா:நீங்க வரைந்த படமா?
நான் : அப்பாடா... நீங்களாவது கேட்டீங்களே!
நான் வரைந்தது தான். கீழே மனிதத் தலை
கார்ட்டூன் என் SIGNATURE தான்!
வார்த்தை : ஒரு வார்த்தை சொன்னாலும் நல்லா தான்
சொல்லியிருக்கீங்க... நம்ம க்வாலிபிகேஷனே..சமாளிபிகேஷன் தாங்க!!!
பிலாஸபி ப்ரபாகரன்:நடைமுறைக்கு ஏற்ற கவிதை... உங்களுடைய கவிதையின் உண்மையான அர்த்தம் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்...
நான் : காதலில் வென்றவன் பெண்டாட்டி,பிள்ளைகள் துணி தோய்த்து, சமையல் செய்ய..தோற்றவனோ,
தாடி வளர்த்து, ஹோட்டலில் விதம், விதமாய் சாப்பிடுகிறான். இவனுக்கு ஒரு துக்கம்..
அவனுக்கோ.. நாளெல்லாம் துக்கம்..!!!!
வித்யா மேடம்: பிள்ளைகள் பிரித்து விடுவார்கள் என்பதற்காக காதல் நிராகரிப்பை ஏற்றுக்கொள்வதா? நான் உங்களை கண்டிக்கிறேன்..
நான் : அது போகட்டும்.. நீங்க என்ன டீச்சரா?
பத்ம நாபன் : இது பழமா ..சீ.ச்ச்சீ இது புளிக்கும் என்று விலக...
பிரிந்தாலும் விலகாமல் இருப்பதல்லவோ காதல்....
நான் : கரெக்ட் பத்து சார்!
ரிஷபன்:அவ லவ்வு வேணாம்னு சொன்னத என்னமா பில்ட் அப் பண்ணியாச்சு!
நான் : ஜவ்வு மாதிரி இழுத்துண்டு இருந்தா தான் அது பேரு காதல்...
LN: கவிதை நன்றாகத்தான் இருக்கிறது... ஆனால் ,காதல் விலக்கப்பட்டதற்கான காரணம்தான் , ஹிஹி !
நான்: :)
மனோ மேடம்: நகைச்சுவையான கவிதை!
நிராகரிக்கப்பட்ட காதலுக்கு மனது சமாதானம் சொல்லிக் கொள்ளுவது ரசிக்கும்படியாக இருக்கிறது!!
நான் : படத்தை(படமா அது!) ஏதாவது சொல்வீர்கள்
என்று எதிர்பார்த்தேன்...ஹூம்....
அப்பாதுரை:அப்படியொரு கோணமா? இது முன்பே தெரியாமல் போய்விட்டதே! அனாவசியமாகக் கெட்ட பெயர் சம்பாதிக்கறதுக்கு பதிலா 'தொலைநோக்குத் தியாகி'னு பட்டம் வாங்கியிருக்கலாமே, அடடா!
நான் : இப்படித் தான் வித்யாசமான கோணத்தில் திங்க்
பண்றேன் பேர்வழின்னு, உச்சன் தலையில, முக்காலணாவுக்கு வழுக்கை விழுந்தது தான் மிச்சம்!
’பெண்ணே’ கதையை விட அதற்கு தாங்கள் வரைந்துள்ள ஓவியம் மிகவும் அருமையாக உள்ளது. புத்தம் புதிதாக சீவப்பட்ட இளம் நொங்கு போல அந்த படத்தில் இளமை குன்றாத அழகானப் பெண். ஆயிரம் சோகங்களை உள்ளடக்கிய அந்த தாடியுடன் கூடிய மனிதனைப் படத்தினில் பார்த்தாலே என் கன்னத்தை அரிப்பது போல ஒரு நிஜம். அனைத்தையும் விட எனக்கு சிரிப்பை வரவழைத்தது உங்கள் கையெழுத்து எனப்படும், கைக்கட்டைவிரல் அளவுக்கு வரையப்பட்டுள்ள விகடன் தாத்தா போன்றவர்.
அருமை ந்ண்பர் இராமமூர்த்திக்கு ஏற்கனவே பல திறமைகள் இருப்பினும், ஒரு ஓவியர் என்பதை இன்று அறியும் நான் மிக மிக மகிழ்ச்சியடைகிறேன்.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கு தாங்களே ஒரு உதாரண புருஷராக த்திகழ்கின்றீர்.
புத்தி கொள்முதல் தாடியோடு போகட்டும்...
ஹஹ்ஹஹ்ஹ்ஹா .....
கோட்டோவியத்தின் பெண் கண்களில் பிரகாசிக்கும் ஒளியும், தாடிக்காரரின் மூடிய விழிகளில் தெறிக்கும் ஞானமும் அடடா... கையெழுத்து கூட சித்திரம்போல் ... வெகு திறமைகளை உள்ளடக்கிய உங்கள் தன்னடக்க தோற்றம் மனக்கண்ணில்! வணங்குகிறேன்!!
ஓவியத்தை நானும் ரசித்தேன். ஆனால் கையெழுத்து புரியவில்லை. யாரோ வரைந்ததை நீங்கள் என்று அனுமானிப்பது தவறோ என்றெண்ணித்தான் அதைப்பற்றி எழுதவில்லை.திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பதிவு மூலம்தான் இது உங்களின் ஓவியம் என்பதை உறுதி செய்து கொண்டேன்.
கோடுகளினாலான ஓவியம் மிக அழகு! அதுவும் அந்தப் பெண்ணை விட ஆணின் முகம் சிறப்பாக இருக்கிறது. அலட்சியமான கிறுக்கல்களே இத்தனை அழகாய் இருக்கும்போது இன்னும் நிதானமாக நிறுத்தி வரைந்தால் எத்தனை அழகாக இருக்கும்!!
வைகோவின் "புத்தம் புதிதாக சீவப்பட்ட இளம் நொங்கு போல..(கண்களும்,இதழும் ஃ) இளமை குன்றாத அழகானப் பெண்" வருணனை ஆர்ஆர்ஆரின் படைப்பை விஞ்சி நிற்கிறது.சில சமயம் நாவலைவிட, அதன் மதிப்புரை சிறப்பாகி விடுதல் போல். ம்.. தொடரட்டும்.
வாசன் அய்யாவின் பின்னூட்டத்தில் தான் எத்தனை வாசனை ? மயக்கமே வந்து விட்டது எனக்கு.
ஆர்.ஆர்.ஆர் எங்கே; அடியேன் எங்கே ... மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்.
இதில் அவரை நான் விஞ்சுவதாவது?
Anyhow, my sincere thanks to Mr. Vasan, Sir.
நான்: வை.கோ. சார்.. நீங்கள் சொன்ன அந்த
உவமையை அதாங்காணும் ‘புத்தம் புதிதாக சீவப்பட்ட இளம் நொங்கு போல அந்த படத்தில் இளமை குன்றாத அழகானப் பெண்.’ வீட்டில் சொல்லப் போக..
மத்யான சாப்பாடு கட்!
கேண்டீனில் சாப்பிட்டு வயிறு வீங்கியது தான் மிச்சம்!
நிலா மகள்:புத்தி கொள்முதல் தாடியோடு போகட்டும்...
ஹஹ்ஹஹ்ஹ்ஹா .....
கோட்டோவியத்தின் பெண் கண்களில் பிரகாசிக்கும் ஒளியும், தாடிக்காரரின் மூடிய விழிகளில் தெறிக்கும் ஞானமும் அடடா... கையெழுத்து கூட சித்திரம்போல் ... வெகு திறமைகளை உள்ளடக்கிய உங்கள் தன்னடக்க தோற்றம் மனக்கண்ணில்! வணங்குகிறேன்!!
நான் : நீங்கள் நினைப்பது போல் நான் திறமைசாலி அல்ல. எல்லா வித்தைகளும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்த சர்க்கஸ் பஃபூன் போல ஒருவன் தான் நான்!
நான்: மனோ மேடம்...ரொம்ப தேங்க்ஸ்!
வாசன்:வைகோவின் "புத்தம் புதிதாக சீவப்பட்ட இளம் நொங்கு போல..(கண்களும்,இதழும் ஃ) இளமை குன்றாத அழகானப் பெண்" வருணனை ஆர்ஆர்ஆரின் படைப்பை விஞ்சி நிற்கிறது.சில சமயம் நாவலைவிட, அதன் மதிப்புரை சிறப்பாகி விடுதல் போல். ம்.. தொடரட்டும்.
நான் : குடும்பத்தில குழப்பம் வந்தாச்சு, வாசன் சார்!
அந்த பொண்ணு யாருன்னு வீட்டில கேட்க.. நீ சின்ன வயசில இருந்தது என்று சொல்லி சமாளித்து விட்டேன்!
வை.கோ:வாசன் அய்யாவின் பின்னூட்டத்தில் தான் எத்தனை வாசனை ? மயக்கமே வந்து விட்டது எனக்கு.
ஆர்.ஆர்.ஆர் எங்கே; அடியேன் எங்கே ... மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம்.
இதில் அவரை நான் விஞ்சுவதாவது?
Anyhow, my sincere thanks to Mr. Vasan, Sir.
நான் : வை.கோ. சார் இதானே வேண்டாங்கிறது!
உங்கள் திறமையின் முன்னால் நான் ஜுஜுபி!
//வை.கோ. சார் இதானே வேண்டாங்கிறது!
உங்கள் திறமையின் முன்னால் நான் ஜுஜுபி!
December 9, 2010 6:29 AM //
நிறை குடம் தளும்பாது என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
//வை.கோ. சார்.. நீங்கள் சொன்ன அந்த
உவமையை அதாங்காணும் ‘புத்தம் புதிதாக சீவப்பட்ட இளம் நொங்கு போல அந்த படத்தில் இளமை குன்றாத அழகானப் பெண்.’ வீட்டில் சொல்லப் போக..
மத்யான சாப்பாடு கட்!
கேண்டீனில் சாப்பிட்டு வயிறு வீங்கியது தான் மிச்சம்!
December 9, 2010 6:18 AM //
எனக்கும் உங்களுக்கும் இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக மத்யான வீட்டு சாப்பாடு ஏது?
சூடான, சுவையான, மலிவான, சுகாதாரமான கேண்டீன் சாப்பாட்டில் கொழுத்து வளர்ந்தவர்கள் அல்லவா நாம்! ஞாயிற்றுக்கிழமை வந்தால் மட்டும் தானே வீட்டில் நமக்கு சற்று கஷ்டமாக இருக்கும்!
நகைச்சுவைக்காக, நம் கேண்டீனைப்பற்றி நீங்கள் இப்படி எழுதியிருப்பினும், நம்மைத் தாய் போல அரவணைத்து வேளாவேளைக்கு விதவிதமான காலையில் 7am to 8am டிபன்கள் (தோசை 15 பைசா, வெண்பொங்கல் 10 பைசா, வடை 5 பைசா - சூடான இலவச சாம்பார் சட்னியுடன்); மதியம் 11.50am to 12.50pm உணவு அதுவும் வெறும் 50 பைசாவுக்கு சூடான பொன்னி பச்சரிசி சாதம், கறி அல்லது கூட்டு, சாம்பார், ரஸம், தயிர், புத்தம் புதிய ஊறுகாய், அப்பளம், வடை அல்லது பஜ்ஜி என அனைத்தும் அதுவும் unlimited வேறு, சம்பள தினத்தில் மட்டும் ஸ்வீட் வேறு இலவச இணைப்பாக!
ஒரே டேபிளில் நாம் அரட்டை அடித்தபடி உண்டு மகிழ்ந்த நாட்கள் ஒன்றா அல்லது இரண்டா? பூர்வ ஜன்மத்தில் நாம் செய்த புண்ணியம் அல்லவா!
நாம் வாழ்த்தாவிட்டாலும், நல்ல பசி வேளையில் நம்மைப்போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வயிறு வாழ்த்தியதால் அல்லவா இன்றளவும் நமது தொழிற்சாலை, தினமும் செய்த அன்னதானத்தால், ஆண்டுக்காண்டு பலகோடி ரூபாய்கள் கூடுதல் இலாபம் பெற்று உலக அளவில் கொடி கட்டிப் பறக்கிறது நமது BHEL நிறுவனம்.
நிழலின் அருமை வெய்யிலில் போனால் தான் தெரியும் என்பார்கள்! அது உண்மை தான். ரிடய்ர்ட் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகும் எனக்கு தெரியும் அளவு, சர்வீஸில் உள்ள உங்களுக்குத் தெரிய நியாயமில்லை.
6 பைசாவுக்கு டீ யும், 12 பைசாவுக்கு காஃபி யும் என்று அடிக்கடி குடித்துப் பழகிய எனக்கு, இந்த பின்னூட்டம் எழுதி முடிப்பதற்குள், நல்ல ஒரு டிகிரி காஃபி (திக் குப் பாலில், முதல் தர டிகாக்ஷனுடன், சூடாக, சுவையாக நுரை ததும்ப) வர வேண்டுமே என்ற விசாரத்தில், எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் [ந்ம்பிக்கை தானே வாழ்க்கை] உள்ளேன்.
இல்லாவிட்டால் ‘ராமா கஃபே’ அருகிலேயே உள்ளது. ஒரு 10 அல்லது 20 ரூபாயுடன் கிளம்பி விடுவேன். ஆனால் அவ்வாறு கிளம்ப ஒரு தெம்பும் எழுச்சியும் ஏற்பட ஒரு காஃபி வேண்டியதாக உள்ளது.
“அந்த நாள் இன்று போல் இன்பமாய் இல்லையே .. நண்பனே...நண்பனே” என்று மனம் விட்டுப் பாட வேண்டும் போல உள்ளது.

“இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே .. நண்பனே...நண்பனே” என்று மனம் விட்டுப் பாட வேண்டும் போல உள்ளது.
பின்னூட்டத்தை சற்று விரிவாக அதிக வரிகளில் எழுதி விட்டு அனுப்ப நினைத்தபோது, முழுப்பூசணிக்காயாக உள்ளதால் அனுப்ப இயலாது என்று மறுத்து விட்டது system. அதனால் அவற்றை நாலு அல்லது ஐந்து பூசணித்துண்டமாக மாற்றி கஷ்டப்பட்டு அனுப்பி வைத்தேன். அவைகள் ஒழுங்காகப் போய் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளதா என்று பார்க்க உள்ளே சென்ற போது தான் தெரிந்தது முழுப்பூசணிக்காயும் வெளியிடப்பட்டு, துண்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன என்ற விஷயம். எப்படி அவற்றை திரும்ப நீக்குவது என்றும் புரியவில்லை. எல்லாம் அந்த ஆர் ஆர் ஆர் என்ற மலை பார்த்துக்கொள்ளும். மடுவாகிய எனக்கென்ன கவலை.
எனக்கு பூசணியும் பிடிக்கும்..பூசணி துண்டுகளும் பிடிக்கும்..அதும் பாட்டுக்கு இருக்கட்டுமே...பூசணியில் குல்கந்து செஞ்சு அனுப்பறேன்..
Post a Comment