நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Friday, December 3, 2010
சிவன்!
” சிவன் என்ன பண்றீங்க?”
” சிவன் ஒரு நிமிஷம் வந்துட்டுப் போங்களேன்”
” மிஸ்டர் சிவன்..இதை எப்படிங்க போஸ்ட் பண்றது?”
அது ஒரு மத்திய அரசு அலுவலகம்...
சென்னை..
எதிர்த்தாற் போல் ஜிலுஜிலுவென கடல் காற்று வீசும் சூழல்.
நார்த் பீச் ரோடு!
அத்தனை பேரும் சிவன் சிவன் என்று அழைக்க, அந்த மனிதரோ ’சிவனே’ என்று இராமல்..கொஞ்சம் கூட கோபப் படாமல், பம்பரமாய் சுழன்று கொண்டு...அவர்கள் அனைவருக்கும்.. ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார்.
கட்டையாய்..மா நிறத்துக்கும் சற்று மாற்று கம்மியாய்..எல்லாரிடமும் வாஞ்சையாய்..
பரிவுடன்... பாசத்தை பொழிந்து...
அது தான், சிவன்!
நான் என் சகோதரருடன், ஒரு பத்து,பதினைந்து வருடத்திற்கு முன்னால் அங்கு சென்ற போது நடந்தது .....
“ சார் யாரு?”
“ என் ப்ரதர், சிவன்”
“ சாருக்கு திருநெல்வேலி பக்கமா?”
“ எப்படி சார் கண்டுபுடிச்சீங்க?”
வெள்ளந்தியாய் சிரித்தார், சிவன். கறுத்த அவர் உதடுகள் ஊடே, பளிச்சென்ற வெண்பற்கள்!
“ அந்த ஊர் பக்கத்தில தான், இப்படி சிவன்னு பெயர் வைப்பாங்க. லால்குடில ஸ்ரீமதி
கன்யாகுமரில தாணுன்னு..”
என்னோட மேதா விலாஸத்தை நான் காண்பிக்க..
”சார்..உங்க பிரதர் ரொம்ப இண்ட்ரஸ்டிங்”
”சிவன் வாங்க நேரமாச்சு!”
“ ஒரு நிமிஷம் இருங்க, சார். சாருக்கு ’ஹானரோரியம்’ கொடுத்துட்டு
வந்துடறேன்..”
” நாங்க குடுக்க மாட்டோமா?”
”இனிமே.. நீங்க தானே கொடுக்கப் போறீங்க”
சிரித்தார்,சிவன்.
“ சிவன்..சார் கூப்பிடறாருங்க..எல்லாரும் வந்தாச்சு!”
“ தோ..வரேன்..”
“ என்ன சார்..பார்ட்டி.. ட்ரான்ஸ்வரா?”
“ ஈஸ்வரா..இன்னிக்கு நான் ரிடையர்ட்ஆறேன், சார்”
அடுத்த நாளும் அந்த ஆஃபீஸ் சென்றேன்.
ஆனால், அந்த ஆஃபீஸில் “ஜீவன்” இல்லை!!!!!
Labels:
நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
"ஜீவன்" உள்ள பதிவு.
கவர்ன்மென்ட் ஆபீஸ்ல எல்லாம் சென்டிமென்ட்ஸ் கிடையாது. அதே சிவன் அடுத்த நாள் அவருடைய பென்சன் வாங்க அந்த ஆபீசுக்குப் போனா, அவரைக் கவனிப்பவர்கள் ரொம்பக் கொஞ்சம் பேராகத்தான் இருக்கும்.
Individuals are not important in Government machinary. So it is only a machine.
பிறகாவது சிவனே என்றிருந்திருப்பாரோ ... நல்ல பதிவு.
சிவனின்றி ஜீவன் இல்லை ....இப்ப சிவன் மாதிரி ஒன்றிரண்டு பேரை வைத்து அரசு அலுவலகங்களே ஓடுது...
சிவன் மாதிரி ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நல்ல பதிவு
இந்த ஜீவன் பாராட்டுது...
சிவன் என்றொரு ஜீவன் போல பல அரசு அலுவலகங்களில் ஒன்றிரண்டு பேர் தென்படுவார்கள். நன்றாக இருந்தது உங்களது இப்பகிர்வு.
சிவன் போல ஒரு சில ஜீவன் இருப்பதால் தான் அரசு அலுவலகங்களில் வேலைகள் நடக்கின்றன.
nalairuku.. ana inum length ah eluthi irukalam...
சக்தியிருந்தா வேலை பார்ப்பார்கள்.
இல்லாவிட்டால் சிவனேயென்று ஓ.பி. அடிப்பார்கள் என் நினைத்த நான், இங்கு சிவனே சக்தியுடன் வேலை பார்த்து ஓய்வு பெற்றதை எண்ணி வியந்து போனேன்.
கந்தசாமி ஸார் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.. ரிடயர்ட் ஆன மனுஷன் அடுத்த நாள் ஆபீஸ் வந்தா அவர் கதி என்னன்னு நல்லாவே தெரியும்.. சீந்த நாதி இருக்காது.. அப்பதான் ஏதோ வெட்டி முறிக்கிற மாதிரி வேக வேகமா வெத்து பேப்பரக் கையில் புடிச்சிண்டு ஓடுவாங்க.. ஆனால் சிவன் மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதரால்தான் இந்த உலகம் இன்னும் ஜீவனுடன்
அரசு அலுவலகங்களில் எல்லோரும் சிவன் மாதிரி இருந்தால் தேவலை .....'சிவனே..' என்றுதான் இருக்கிறார்கள்!
சித்ரா:"ஜீவன்" உள்ள பதிவு
நான் : இது நிஜம்மா நடந்தது!
கந்தசாமி சார்:கவர்ன்மென்ட் ஆபீஸ்ல எல்லாம் சென்டிமென்ட்ஸ் கிடையாது. அதே சிவன் அடுத்த நாள் அவருடைய பென்சன் வாங்க அந்த ஆபீசுக்குப் போனா, அவரைக் கவனிப்பவர்கள் ரொம்பக் கொஞ்சம் பேராகத்தான் இருக்கும்.
Individuals are not important in Government machinary. So it is only a machine.
நான் : வாஸ்தவம் தான்!
நிலா மகள்: பிறகாவது சிவனே என்றிருந்திருப்பாரோ ... நல்ல பதிவு
நான் :இருக்கலாம்!!
பத்மனாபன்: சிவனின்றி ஜீவன் இல்லை ....இப்ப சிவன் மாதிரி ஒன்றிரண்டு பேரை வைத்து அரசு அலுவலகங்களே ஓடுது!
நான் : ஆமாம், மிஸ்டர் பத்மனாபன்!
வித்யா மேடம்: சிவன் மாதிரி ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
நான்: விரல் விட்டு எண்ணும் அளவிற்கு கூட இருக்கிறார்களா, என்ன?
RVS: இந்த ஜீவன் பாராட்டுது..
நான்: வாங்க RVS. பார்த்து ரொம்ப நாளாச்சு போல!
வெங்கட்: சிவன் என்றொரு ஜீவன் போல பல அரசு அலுவலகங்களில் ஒன்றிரண்டு பேர் தென்படுவார்கள். நன்றாக இருந்தது உங்களது இப்பகிர்வு.
நான் : நன்றி, வெங்கட்!
கோவை 2 டில்லி:சிவன் போல ஒரு சில ஜீவன் இருப்பதால் தான் அரசு அலுவலகங்களில் வேலைகள் நடக்கின்றன.
நான் : மிக்க நன்றி!
ஸ்வர்ணரேக்கா:nalairuku.. ana inum length ah eluthi irukalam...
நான் : தேங்க்யூ!
வை.கோ:சக்தியிருந்தா வேலை பார்ப்பார்கள்.
இல்லாவிட்டால் சிவனேயென்று ஓ.பி. அடிப்பார்கள் என் நினைத்த நான், இங்கு சிவனே சக்தியுடன் வேலை பார்த்து ஓய்வு பெற்றதை எண்ணி வியந்து போனேன்.
நான்:உண்மை,வெறும் புகழ்ச்சியில்லை, கோபு சார்!
ரிஷபன்:கந்தசாமி ஸார் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.. ரிடயர்ட் ஆன மனுஷன் அடுத்த நாள் ஆபீஸ் வந்தா அவர் கதி என்னன்னு நல்லாவே தெரியும்.. சீந்த நாதி இருக்காது.. அப்பதான் ஏதோ வெட்டி முறிக்கிற மாதிரி வேக வேகமா வெத்து பேப்பரக் கையில் புடிச்சிண்டு ஓடுவாங்க.. ஆனால் சிவன் மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதரால்தான் இந்த உலகம் இன்னும் ஜீவனுடன்
நான்: நன்றி,ரிஷபன்!
LN: அரசு அலுவலகங்களில் எல்லோரும் சிவன் மாதிரி இருந்தால் தேவலை .....'சிவனே..' என்றுதான்
இருக்கிறார்கள்!
நான் : அட..இது கூட நல்லாயிருக்கே!!!
Post a Comment