நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, April 21, 2010
அஞ்சலி..அஞ்சலி..அஞ்சலி....
'காலா.. காலருகில்
நீ வாடா உன்னை,
நான் காலால்
மிதிக்கிறேன்' என்று
கர்ச்சித்த...
பாரதி இன்று
இல்லை என்கிற
தைர்யமா உனக்கு?
எத்தனை பேர்களை
தூக்கி சென்று விட்டாய்..
பாவி..படு பாவி !
இன்னுமா உன்
பசி அடங்கவில்லை?
தாகம் தீரவில்லை?
கடல் கடந்த
மௌரிய பேரரசுகளுக்கு,
CORE COMPETENCE
என்கிற 'அர்த்த சாஸ்த்திரம்'
தந்த அந்த
அறுபத்திமூன்று
வயதே ஆன
நம் சாணக்கியனை,
எடுத்துக் கொள்ள
எப்படியடா
உனக்கு மனம்
துணிந்தது?
அறிவு கெட்ட மூடனே..
என் பெண்
US போகும் போது,
சந்தோஷப்பட்டேனே
அட்லீஸ்ட்
அவள் கண்களினால்
ஆவது அவரைப்
பார்ப்பேன் என்று!
எப்படியடா அது
உனக்குத் தெரிந்தது?
பீட்டர் ஃப். ட்ரக்கருக்குப்
பிறகு,
ஒரு பெரிய ஆள்
நம்ம ப்ரஹ்லாத்
என்று தலை
நிமிர்ந்திருந்தேனே..
உனக்கு அது
பொறுக்கவில்லையா?
என் வாழ் நாள் சாதனையாய்,
சர்வதேச அளவில்,
BUSINESS உலகில்
நம் எல்லாரையும்...
தலை நிமிர வைத்த..
C.K.PRAHALAD உடன்..
ஒரு நிமிடம்..
ஒரு நிமிடமாவது..
பேச வேண்டும் என
நினைத்தேனே...
அதை நிராசை
ஆக்கி விட்டாயே,
பாவி!
பாரதி போனால்
என்ன...
இதோ
வாழையடி வாழையாய்
வந்த நான்
இருக்கிறேன்...
காலா
என் கண்ணெதிரில்
நீ வாடா..
உன்னை,
நான்
காலால்
மிதிக்கிறேன்!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Don't be emotion.Get Relax!! Every body having the time to go at once.Get Cool. Let us pray for the Soul to rest in piece.
May his soul rest in peace.
sorry...
பித்தனின் வாக்கு பதிவு வழியே தங்கள் பதிவுக்கு முதன் முறையே வந்தேன். பிரஹலாத் வாழ்வாங்கு வாழ்ந்த மா மனிதர் அவர் . ஐயமில்லை. அவரது மறைவு அவரை நன்கு அறிந்தவர் உறும் துயருக்கு ஆறுதல் சொல்வதைத்
தவிர வேறு வழியுமுண்டோ ?
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன . கால வகையினாலே என்பது நன்னூல்.
பிரஹலாத அவர்கள் தனது புறத்தை அகன்றிருப்பினும் நமது மனதை விட்டு அகலாது என்றும் இருப்பர்.
அது சரி. உங்களது ப்ரொஃபைலில், எழுதியிருக்கிறீர்கள்.
"இனி, 'ஆரண்ய நிவாஸ்' ஆர். ராமமூர்த்தி ! இன்னும் ஐந்து ,ஆறு வருடங்கள் கழித்து ஆரண்ய நிவாஸுக்கு வருகை தாருங்கள். கூடை நிறைய மாம்பழங்களை அள்ளிச் செல்லுங்கள் ...!!!!"
இந்தியாவில் எந்த ஊர் என்று எழுதினால் தானே வந்து மாம்பழங்களை அள்ளிச்செல்ல முடியும்.!!
சுப்பு தாத்தா.
திருச்சி..திருவானைக்காவல்..
வாங்க சுப்பு ரத்தினம் ஸார், வாங்க...
ஆறு வருடங்கள் கழித்து என்ன?
இப்போதே வாங்க...
கொய்யாப் பழங்கள்
உங்களுக்காய் காத்திருக்கிறது
தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
--- ஆர்.ஆர்.
Post a Comment