Tuesday, April 20, 2010

கல்யாணமாம்...கல்யாணம்...


சமீபத்தில் உறவுக்காரர் கல்யாணத்திற்கு வெளியூர் சென்றிருந்தேன். எல்லாரையும் போல் முகூர்த்த நேரத்திற்கு தலையைக் காட்டி விட்டு,
ஊரை சுற்றிக் கொண்டிருந்தோம். எப்போது கல்யாண சத்திரத்தில் இருப்போம்..எப்போது ஊர் சுற்றுவோம் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்!.

பொதுவாக கல்யாணம் என்பது குழந்தைகளுக்கும்..கிழவர்களுக்கும் பிடித்தமான நிகழ்வு. முன்னவர்களுக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. பின்னால் சொல்லப் பட்டவர்களுக்கு அந்த கஷ்டமானது இத்தனை வருடங்களில் சுத்தமாய் மறந்து போயிருக்கும்!

ஆனால் இந்த கல்யாணத்திலோ வித்யாசமாய் ஒரு சின்னப் பையன் எப்போது பார்த்தாலும் 'நை..நை..' என்று அழுது கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு பெரிய பலூன் வாங்கிக் கொடுத்தேன். அப்பவாவது அழுகையை நிறுத்தினானா என்றால் அது தான் இல்லை. என்னுடைய செய்கை அவனை மேலும் அழ வைத்து விட்டது. எனக்கோ ப்ராண சங்கடம். அவன் அழுகையை அதிகமாக்கினதில் என் பங்கு கணிசமாய் இருந்ததினால் அவனை ஆற..அமர்த்தி விசாரித்ததில்....
ஏண்டா கேட்டோம் என்றாகி விட்டது எனக்கு!
அவனுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்!
பயல் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்திருக்கிறான். ஜான வாசத்தில் மாப்பிள்ளை போட்ட கோட், சூட்..கார் சவாரி...(எல்லா பசங்களும் போட்டிப் போட்டு உட்கார்ந்து கொண்டதால், அவனுக்கு காரில் இடமில்லாமல் போய் விட்டது. அது வேறு வருத்தம்) நிறைய ஃபோட்டாக்கள்...
விதம் விதமாய் பக்ஷணங்கள்....பழங்கள்...
அலங்கார சேரில் உட்கார வைத்தது....ஊஞ்சல்..
புதுசா குடை ...புது செருப்பு...
எல்லாவற்றையும் பார்த்து அவனுக்கும் கல்யாண ஆசை வந்து விட்டது.
இப்பவே தன்னை மாப்பிள்ளை ஆக்கினால் தான் ஆயிற்று என்று முரண்டு பண்ணினான். அவனை சமாதானம் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது, எல்லாருக்கும்.
எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த ஒரு நாள் மட்டும் மாப்பிள்ளை என்பவன் ஒரு ஹீரோ. அவனை எல்லாரும் தாங்கு, தாங்கு எனறு தாங்குவார்கள். எப்படி பழம் விற்பவன் பழங்களை அடிக்கடி துடைத்துக் கொண்டிருப்பானோ...எப்படி சோஃபா..கட்டில் விற்பவன் அதுகளை துடைத்துக் கொண்டிருப்பானா அது போல...
இந்த சமயத்தில் ஒரு அறிஞர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது!
அவர் சொல்கிறார்..' marriage is an agreement between the father of a bride groom and the father of a bride to sell the bride groom for some considerations like car, jewels etc..etc..'
இவர்கள் பண்ணும் ஆரவாரங்களும்...சடங்குகளும்...சாங்கியங்களையும் பார்த்தால் எப்படியாவது பெண் வீட்டாரிடம் பையனைத் தள்ளி விடுவதிலேயே குறியாக இருப்பவர்கள் போலத் தோன்றும்! அதற்கு சாட்சிகளையும்..சாட்சியங்களையும் வேறு ஜோடித்து வைப்பதுப் போல் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் இருக்கும்!
அந்த நாட்களில் கல்யாணம் என்பது நான்கு நாட்கள் ஜே..ஜே என்று நடக்கும். நிறைய சடங்குகளும்...சம்பிராதயங்களுமாய் ..
நிறைய உறவுக்காரர்கள் கல்யாணத்துக்கு வருவார்கள். இரண்டு,மூன்று நாட்கள் பேசும் பேச்சுக்களில் யார் வீட்டில் கல்யாண வயதில் பையன் இருக்கிறான்..யார் வீட்டில் பெண் இருக்கிறாள் என்று தெரிந்து விடும். அந்த நான்கு நாள் கல்யாணத்தில் அட்லீஸ்ட் இரண்டு,மூன்று கல்யாணங்களுக்காவது அந்த மேடையில் அச்சாரம் போடப் படும். வயதானவர்களுக்கு வேறு என்ன வேலை. இப்போது போல் matrimonail.com எல்லாம் கிடையாது. வீட்டுப் பெரியவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்கள்.இப்போது நடக்கும்
இந்த ஒரு நாள் ரிசப்ஷனில் (இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு யார் கூப்பிடுகிறார்கள். எல்லாம் ரிஷப்ஷன் தான்!) எதையும் எதிர்பார்க்க முடியாது!
இருந்தாலும், அன்றைய நான்கு நாள் கல்யாணமாகட்டும்...இன்றைய half day fast marriage (fast food போல் fast marriage) ஆகட்டும். எல்லாமே காலத்தை வென்று நம் பெரியவர்கள் பார்த்து வைத்த உறவுகள் எல்லாம் துளிர்த்து நிற்கின்றன!
அதனால் தான் என்னவோ நம்ம ஊர் கல்யாணங்களில் divorce என்பது ரொம்பவும் சொல்பமாக இருக்கும். அப்படியே ஒன்றிரண்டு
divorce கேஸ் வந்தாலும் அதை ஒரு சாதாரண தேங்காய் மூடி வக்கீல் கூட RCR ( Restitution of conjugal right) போட்டு உடைத்து விடுவான்.
அது சரி, விஷயத்திற்கு வருவோம்!
எப்படி காலத்தைக் கடந்து நம் திருமணங்கள் ஆல வர விழுதுகளாய் நிற்கின்றன?
ரொம்ப சுலபம். கல்யாணம் என்பது என்ன?
It is a sale.
Sale என்றால் அதன் முக்ய தாத்பர்யம் என்ன?
" GOODS ONCE SOLD CAN NOT BE TAKEN BACK"
விற்ற பொருள் வாபஸ் இல்லை என்று இருக்கும் போது எப்படி ஐயா நம் கல்யாணங்களில் DIVORCE என்பது வரும்????

7 comments:

வசந்தமுல்லை said...

kalyanaththai neril paarthathu pol irunthathu nadai. good!!

Chitra said...

good one. You may be interested to read:
http://www.indidivorce.com/divorce-rate-in-india.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

விற்ற பொருள் வாபஸ் இல்லை. மிகச்சரியே! வாங்கிய பொருள் நமக்குப்பயனில்லை என்றால் குப்பைத்தொட்டியிலாவது போடலாம் அல்லது யார் தலையிலாவது கட்டலாம் அல்லது காயலாங்கடைக்கு அனுப்பலாம் அல்லது இலவசமாக தானம் செய்யலாம் அல்லது மேற்கொண்டு பணம் கொடுத்தாவது அப்புறப்படுத்தலாம். ஆனால் இந்த திருமண பந்தம் அப்படியா! ஆயிரங்காலத்துப் பயிர் ஐயா. ஆயுள் தண்டனை ஐயா! வாயை மூடிக்கொண்டு, காது கேளாதவர் போல மிகவும் பக்குவமாக (உம்மைப்போலவே) நடந்து கொள்ளணும் ஐயா!

Unknown said...

வந்தோம் வாசித்தோம் மகிழ்ச்சி

ரிஷபன் said...

" GOODS ONCE SOLD CAN NOT BE TAKEN BACK"
விற்ற பொருள் வாபஸ் இல்லை என்று இருக்கும் போது எப்படி ஐயா நம் கல்யாணங்களில் DIVORCE என்பது வரும்?
அது அந்த காலம்.. இப்ப பிடிக்கலன்னா கடாசிட்டு போறாங்க.. நோ ரிடர்ன்.. ஒன்லி த்ரோ அவே..

கே. பி. ஜனா... said...

2010 க்கு கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் போலிருக்கே, ரிஷபன் சார் சொன்ன மாதிரி!

Vijiskitchencreations said...

nice nice.