நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Friday, April 16, 2010
செல் சிரித்தது!!!
செல் ஒன்று
சிரித்தது..
எக்காளத்துடன்..
சிட்டுக் குருவியைக்
கண்டுபிடித்துக்
கொடுத்தால்,
பரிசு...
ஒரு அறிவிப்பு!
செல் ஃபோன் டவர்,
கதிர்வீச்சால்..
சிட்டுக் குருவி
என்கிற இனமே..
அருகி,
கருகிப்
போய்க் கொண்டிருக்கும்,
அவலம்....
டெக்னாலஜி வளர..வளர..
மனிதன் சிரிக்கிறான்,
இயற்கை அழுகிறது...
இன்னும் கொஞ்ச
நாட்களில்,
மனிதன் அழ..
இயற்கை
சிரிக்க
ஆரம்பிக்க....
நேற்று குருவி..
இன்று நீ...
செல் ஒன்று,
இப்போதும்
சிரித்தது.....
அதே,
எக்காளத்துடன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
சரியாகச் சொன்னீர்கள்...
இயற்கை சிரிக்க ஆரம்பித்தால், நாம் அழத்தான் வேண்டும்...
என்று உணர்வோம் இதை...
:(
// நேற்று குருவி..
இன்று நீ...//
சரியாகச் சொன்னீர்கள்.
super soll .
குருவி என்ற இனமே இல்லை !
என்ற சொல் இதயத்தில் எப்படி வலியை உண்டாக்குகிறது.
நான் குருவிகளுடன், இளைய பால்யத்தில் விளையாடிய சந்தோசம், என் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என நினைக்கையில்,
என் உள்ளம் அழுகிறது!
நேற்று குருவி..
இன்று நீ...
செல் ஒன்று,
இப்போதும்
சிரித்தது.....
அதே,
எக்காளத்துடன்!!!
ஆனால் அதே செல்லுடன்
நாமெல்லாம் எப்படிஎல்லாம் உறவாடுகிறோம்!
நம் பிள்ளைகளிடம் கூட
நாம் அப்படி உறவாடுவோமா,
தெரியவில்லை?
இந்த கருத்தை
டெக்னாலஜி வளர..வளர..
மனிதன் சிரிக்கிறான்,
இயற்கை அழுகிறது...
இன்னும் கொஞ்ச
நாட்களில்,
மனிதன் அழ..
இயற்கை
சிரிக்க
ஆரம்பிக்க....
என விளக்கிய ராமூர்த்தி நீவிர் வாழ்க!!!!!!
கவிதை நல்லா இருக்குங்க. ஆனால், சிட்டு குருவியின் அழிவுக்கு செல் போன் towers முற்றிலும் காரணம் அல்ல.
http://natureforever.org/content/house-sparrow-decline
//இயற்கை சிரிக்க ஆரம்பித்தால், நாம் அழத்தான் வேண்டும்...//
athan oru murai sirithala iyarkai annai.. appavum nama tirunthala innum
நாம் தொலைக்கிற விஷயங்கள் ஒன்றா இரண்டா..
நல்ல கவிதை!
:(
Cha! kodumai aiya!
ungalathu intha kavithai ennai mikavum varuththivittathu!
naan valarthathu, padiththathellaam kalkaththaavil thaan. angey engal veettil balconyil niraiya chittukkuruvikal varum. naan thinamum, arisi pondra daaniyangalai angey avaikalukkaaka thoovi vaippathundu
! pinnar "bird bath" kooda katti vaiththom! antha ninaivukal ellam vanthuvittathu!
ennai, mikavum baathiththa kavithaikalil ondrannathu, thangalin intha kavithai!
மனிதன் அழ..
இயற்கை
சிரிக்க
ஆரம்பிக்க
this lines are the best very nice poem
காக்கைக் குருவி எங்கள் ஜாதியென்று சொன்ன பாரதியையும், அந்தக் காக்கைக்குருவிகளையும் இனி படங்களிலும் பாடங்களிலும் மட்டுமே காண முடியும் என்பதை நினைக்க ”நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று நான் தங்களுக்கு பதில் அடிப்பதற்குள் குருவி கத்துவது போல என் செல் ஒலிக்கிறது, என்ன செய்வது!
இப்பதான் இயற்கை சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. கொஞ்சம் பலமாக சிரிச்சா தெரியும்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
Post a Comment