Thursday, April 13, 2017

டிக்...டிக்.....டிக்.....
 எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி கடிகாரம் செவ்வனே தன் கடமையை செய்து
கொண்டிருந்தது.
 குழுமியிருந்த யாரும் பேசவில்லை.
 ஒரு மெல்லிய சோகம் எல்லார் முகங்களிலும்!
 ஆழ்மௌனத்தை கலைத்தான் ஒருவன்.
  "இன்னும் இரண்டு மணி நேரம் தாங்கினாலே ஜாஸ்தி"
 கட்டிலைப் பார்த்தோம். அவன் சொன்னது சரி. மூப்பு கொஞ்சம் கொஞ்சமாக
ஆக்கிரமித்து கொண்டிருக்க, அதனால், கொஞ்சம்,கொஞ்சமாக குறுகிக் கொண்டிருக்க....
  "எப்டி dispose பண்றது?"
   ச்சே ....என்ன மனுஷன் இவன்...
    " It will take it's own course"
    இன்னும் விடியவில்லை...
    நேரம் நம்மை விட்டு நழுவிக் கொண்டிருந்ததை எல்லாராலும் உணர முடிந்தது.
     கவிந்திருந்த சோகத்தை சட்டென்று புறம் தள்ளுவதைப் போல...      "க்வா....க்வா...."            அனிச்சையாய் ஒரு வித உற்சாகம்
     கவ்விக் கொள்ள......
     குரல் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓட...
      அதே சமயம்,
       "It will take it's own course" என்று
      சொன்னதிற்கு ஏற்றார் போல்.....
      கற்பூர கட்டி காற்றில் கரைவது மாதிரி....
       கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது துர்முகி!
       
          
       
        

     
      
    

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாவ்....

முடித்த விதம் அருமை.

ரசித்தேன்.

G.M Balasubramaniam said...

வலைத் தளத்தில் உங்கள் படைப்புகளை மீண்டும் எதிர்பார்க்கலாமா

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடைசி ஒரே வார்த்தையில் அருமையான ட்விஸ்ட் :)

மறுக்க முடியாததும்கூட. பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஐயா
தங்களின் பதிவு கண்டு
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா