"ராம மூர்த்தி"
"ராம மூர்த்தின்னா?"
"ஆரண்ய நிவாஸ்!"
"ஆர்.ஆர்ஆரா...ஹ்ஹ்ஹா..சௌக்யமா?"
"சௌகர்யம் சார்...இப்பத் தான்,நம்ம கோபாலகிருஷ்ணன் சார் சொன்னார்...நீங்க வந்திருக்கீங்கன்னு..இது அவர் போன்லேர்ந்து தான் பேசறேன்..அதான்.."
"ரயில் ஏறியாச்சு...அடுத்த தடவை நாம் சந்திக்கலாம்.."
கந்தசாமி சார் எனக்கு பிலாக்கில் அறிமுகம்...'சாமியின் மன அலைகள்' என்ற பிலாக்கில் ஹ்யூமராக எழுதுபவர்...அதிலும் அவருடைய டைமிங் காமெடி மாஸ்..'நமக்கு நாமே திட்டம் மாதிரி,சுயமாக ஹேர் கட் செய்து கொள்வது எப்படி?' என்று படு அசத்தலாக எழுதியிருக்கிறார்..
பொதுவாக, Face Bookல் எழுதுவது ஒரு மாதிரி...Blog ல் எழுதுவது வேறு மாதிரி...Face Book ல் wide readability கிடைக்கும்..ஆனால், ஒவ்வொருவருக்கும் நெருக்கம் இருக்காது..ஹலோ..ஹலோ...தான்..
ஆனால், Face Book அளவிற்கு Blog கிற்கு Mass attraction கிடையாது..இருந்தாலும், அதில் இருக்கும் நட்பு ஆழமாக இருக்கும்...என் அனுபவம் இது!
சார், அக்ரிகல்ச்சர் காலேஜ்ல ரிடையர்ட் ப்ரபஸர்..மண் வள பரிசோதனையில் டாக்டரேட்...இஸ்ரேல்,நெதர்லாண்ட்ஸ்,யுஎஸ், பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுக்கு சென்றவர்...
எளிமையானவர்....அதற்கும் மேல் அன்பானவர்!
அடுத்த முறை கோயம்புத்தூர் சென்ற போது, கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர், கந்த சாமி சார் இவர்கள் இருவரையும் சந்திப்பதற்காக ப்ளான்.கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர் "வாங்கோ!" என்றார்...
நண்பர் கோபால கிருஷ்ணனிடமிருந்து கந்தசாமி சார் நம்பர் வாங்கி பேசினேன்..'ட்ரைவிங் ல இருக்கேன்,அப்புறம் பேசறேன்' என்றார்..அப்புறம் பேசினார்..
"எத்தனை நாள் இருப்பீர்கள்?"
"நாளைக்கு கிளம்பறேன்.."
"நோ சான்ஸ்!"
இது தான் எங்கள் உரையாடல்!
நண்பர் கிருஷ்ண மூர்த்தி கிருஷ்ணையரைப் பார்த்தேன்...முன் பின் தெரியாத எங்கள் மேல் அவருக்குத் தான் என்ன ஒரு வாத்ஸல்யம்...சுவையான அனுபவம் அவரை சந்தித்தது..அவர் அஹத்தில் மாமி கொடுத்த டீ அதை விட சுவையானது! இன்னமும் நாவில் இனிக்கிறது...மறுபடியும் அவரை பொன்னி டெல்ட்டாவில் மல்லாடி கச்சேரியில் பார்த்தது, மறக்க முடியாத அனுபவம்...நொச்சியத்தில் நடந்த சண்டி ஹோமத்திற்கு கோவையிலிருந்து வந்திருக்கிறார், மனிதர்! மஹாப் பெரியவாள் மீது, அளவு கடந்த பக்தி, அவருக்கு. நொச்சியம் எனக்கு வெகு சமீபம்..'க்ஷத்ராடன பாவியாகி விட்டோமே'என்று என் மீது எனக்கே வெறுப்பு...இவரை, நம்ம கோபால கிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்..அவரும் தம் பிலாக்கில் மஹா பெரியவர் பற்றி படிப்பவர் மனம் கசிய எழுதியிருக்கிறார்..இருவரையும் பேச விட்டு மஹாபெரியவாளின் காருண்யத்தை காது குளிர கேட்க வேண்டுமென ஒரு ஆசை ...ம்..பார்ப்போம்!
இந்த முறை கோவை வந்த போது கந்த சாமி சாரைப் பார்ப்பதாகப் ப்ளான்..பயந்து கொண்டே தான், போன் பண்ணினேன்..'நான், எதிர்பார்த்தது போல, ட்ரைவிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுவோம்' என்றார்.
செல் போன் அடித்தது, மாலையில்..
"ஹலோ...கந்த சாமி பேசறேன்..கோவையில் எத்தனை நாள் இருப்பீர்கள்?"
"வெள்ளிக்கிழமை வரை!"
"அப்ப நாளைக்கு நாம மீட் பண்ணுவோம்...அன்னபூர்ணாவில் ப்ரேக் பாஸ்ட்..எங்கே தங்கி இருக்கீங்க?"
"தாமஸ் பார்க் பஸ் ஸ்டாண்ட் பக்கம்!..நாம் வேணா வழி சொல்லட்டுமா?"
"வேண்டாம்...எனக்கு தெரியும்..கூகுள் மேப் சர்ச் பண்ணி ஷார்ப்பா எட்டரைக்கு வந்து விடுவேன்"
வாக்கிங் போய் விட்டு, நாங்கள் எட்டு மணிக்கு வரும் போது, கெஸ்ட் ஹவுஸில் அவர் எங்களை வரவேற்றார்.
Punctuality maintain பண்ணுவது பெரிய விஷயம்! அதற்கு அரை மணி நேரம் முன்பு. வருவது ..மேன்மக்களால் மட்டுமே சாத்யம்!
அவருடனான சந்திப்பு இனிமையானது..
அவருக்கு கர்னாடிக் ம்யூஸிக் பிடிக்கும்....மதுரை மணி,ஆலத்தூர் ப்ரதர்ஸ். பிடிக்கும்..நிறைய தேவன் கதைகள் படித்தது தான் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு அடித்தளம் என்றார்..அவருடைய பெண் சிங்கப்பூர் போயிருக்கும் போது, தனக்கு வாங்கி வந்த pen drive பற்றிக்கூறினார்...அவருடைய Technology updation எனக்கு உண்மையிலேயே ப்ரமிப்பை தந்தது...எல்லாவற்றையும் விட அவருடைய படு ஸ்டைலான ட்ரைவிங்...வெகு confident...வெகு நேர்த்தி!
விடைபெறும் போது அவர் சொன்னார்...
".....ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் 'துபாய்க்கு வா'ங்கறாங்க...போணும்னு ஆசையாகத் தான் இருக்கு...ஆனா , 'உனக்கு இந்த கோவையை சுற்றி இருபது கிலோ மீட்டர் போக வரை தான் விஸா..'ன்னு என் பொண்ணு ஆர்டர் போட்டிருக்கா"
சொன்ன கந்தசாமி என்ற அந்த இளைஞர் வயது எண்பத்திஇரண்டு!
.............,
10 comments:
முனைவர் கந்தசாமி ஐயா பற்றி தாங்கள் எழுதியுள்ளது யாவும் உண்மை.
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.
எளிமையான மற்றும் நேர்மையான நல்ல மனிதர்.
துடிப்புடன் செயல்படும் இளைஞர்.
மிகவும் சிஸ்டமேடிக் ஆசாமி.
தூக்கம் உள்பட அனைத்தும் அவருக்கு நேரப்படி பங்க்சுவலாக நடக்கணும். :)
அவருடனான என் சந்திப்புகளுக்கு இதோ படங்களுடனான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/5-of-6.html
http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html
பகிர்வுக்கு நன்றிகள்.
நண்பர் கிருஷ்ண மூர்த்தி கிருஷ்ணையரைப் பார்த்தேன்...
மஹாப் பெரியவாள் மீது, அளவு கடந்த பக்தி, அவருக்கு. இவரை, நம்ம கோபால கிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்..அவரும் தம் பிலாக்கில் மஹா பெரியவர் பற்றி படிப்பவர் மனம் கசிய எழுதியிருக்கிறார்..இருவரையும் பேச விட்டு மஹாபெரியவாளின் காருண்யத்தை காது குளிர கேட்க வேண்டுமென ஒரு ஆசை ...ம்..பார்ப்போம்!//
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பற்றி நான் எழுதியுள்ள என் பதிவுகளுக்கான இணைப்புகள்:
பகுதி-001
http://gopu1949.blogspot.in/2013/05/1.html
வெயிட்லெஸ் விநாயகர்
பகுதி-108
http://gopu1949.blogspot.in/2014/01/108.html
ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை?
Thank you Gopalakrishnan Sir!
நான்,நீங்கள்,ரிஷபன் மூவரும் காரில் ஜங்ஷனுக்கு போகும் போது, இவருடன் போனில் பேசியது ஞாபகம் இருக்கிறதா?
டாக்டர் கந்தசாமியைநான் முதன் முதல் சந்தித்தது நீலகிரி போய் வரும்வழியில் என் தம்பி அவன் மனைவி மற்றும் என் மனைவியுடன் அது ஆயிற்று ஏறத்தாழ நான்கு வருடங்கள். ஒரு முறை அவர் திருச்சி சென்றதை அறிந்து பெங்களூருக்கு வழிதெரியவில்லையா என்று எழுதினேன் அது நடந்த சில நாட்களில் என்னைப் பார்க்க வந்துவிட்டார் . ஒரு நாள் பொழுதை என்னுடன் கழித்தார். இன்னொரு முறை மனைவி சகிதம் என் வீட்டுக்கு விஜயம் செய்தார் ஆரம்ப காலத்தில் என்னை பிரபல பதிவராக்க வேண்டுமா என்று கேட்டு எழுதி இருந்தார் இனிய மனிதர் வலையில் கிடைத்த ஒரு நட்பு என்றுகூறலாம்
ஆம் GMB சார்...தாங்கள் புதுகை மாநாட்டிற்கு போக, திருச்சியில் தங்கிய போது, நான்,ரிஷபன், கோபு சார் மூவரும் தங்களை பார்க்க வரும் போது, கந்த சாமி சாருடன் போனில் பேசினேன் முதன்முதலாக!
//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
Thank you Gopalakrishnan Sir! நான், நீங்கள், ரிஷபன் மூவரும் காரில் ஜங்ஷனுக்கு போகும் போது, இவருடன் போனில் பேசியது ஞாபகம் இருக்கிறதா?//
மறக்க மனம் கூடுதில்லையே ! http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
மறக்கக்கூடிய நாளா அது? இரவு நேரத்தில், மழை கொட்டியதொரு நாளில், ஆங்காங்கே தெருவெங்கும் நீர் தேங்கியிருக்க, லேஸாக தூரலும் போட்டுக்கொண்டிருந்த வேளையில் Call Taxi யில் உங்கள் இருவர் தயவிலும் அல்லவா நான் அன்று ஜங்ஷனுக்கு வந்தேன்.
நாம் திரும்ப Head Post Office அருகில் வரும்போது, நான் தான் என் மொபைல் ஃபோனில், புதுக்கோட்டை போய்ச்சேர்ந்திருந்த முனைவர் கந்தசாமி அவர்களை அழைத்துப்பேசிவிட்டு, பிறகு உங்களிடம் அவரைக் கோர்த்து விட்டேன். :))))) நீங்களும் பேசி மகிழ்ந்தீர்கள். நன்றாகவே நினைவில் உள்ளது, ஸ்வாமீ.
Positive person to be 'follow'ed!! Link pl
கந்த்சாமி ஐயா பதிவினைப் படித்துவிட்டு உங்கள் தளம் வந்தேன். உங்கள் இருவரையும் கண்டதில் மகிழ்ச்சி ஐயா.
இனிமையான சந்திப்புகள் தொடரட்டும் ஐயா
//ஆம் GMB சார்...தாங்கள் புதுகை மாநாட்டிற்கு போக, திருச்சியில் தங்கிய போது, நான்,ரிஷபன், கோபு சார் மூவரும் தங்களை பார்க்க வரும் போது, கந்த சாமி சாருடன் போனில் பேசினேன் முதன்முதலாக! //
//மறக்க மனம் கூடுதில்லையே ! http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
மறக்கக்கூடிய நாளா அது? இரவு நேரத்தில், மழை கொட்டியதொரு நாளில், ஆங்காங்கே தெருவெங்கும் நீர் தேங்கியிருக்க, லேஸாக தூரலும் போட்டுக்கொண்டிருந்த வேளையில்..//
ஆஹா... ஜிஎம்பீ சார்! ஆதாரம் கிடைத்து விட்டது! ஆர்.ஆர்.ஆரின் 'மறக்க மனம் கூடுதில்லையே!' -- இந்தப் பதிவை சில நாட்களுக்கு முன் எங்கெல்லாம் தேடினேன்!
உங்களின் 'அந்த'ப் பதிவை ஆற்.ஆர்.ஆர் படிக்கவில்லை போலும்! வாசித்திருந்தால்
உங்களை அவர்கள் சந்தித்த நாளின் மழையை நினைவு கூர்ந்திருப்பார்!
Post a Comment