அன்பானவர்களே!
முதலில் ஒரு family tree construct செய்ய ஆசை.
பார்ப்போம்....
அதற்குள் இன்னொன்றும் தோன்றியது...
ஆனந்தரங்கம் பிள்ளை தமிழ் போல இப்படி ஒரு டாக்குமெண்ட் நாமே பண்ணினால் என்ன என்று?
அதாவது,
பத்தொன்பது,இருபதாம் நூற்றாண்டுகளில், நம் நினைவில் நிற்கும்/நீத்தார் உறவு பற்றிய சில சுவையான நிகழ்வுகளை ஒரு சிறுகதை வடிவில் செய்யலாமே...மொத்தம் எட்டு கேரக்டர்ஸ் .அப்பா வழியில் எட்டு, அம்மா வழியில் எட்டு என்று இரண்டு சிறுகதை தொகுப்புகள்.
அதுவும் அந்தந்த கேரக்டரே narrate செய்வது போல...(உதாரணத்திற்கு ஆங்கரை தாத்தாவே நம்மோடு பேசுவது போல)
அதில், ப்ரைவசி வேண்டாம். குடும்ப ரகசியம் வேண்டாம்...அந்தரங்கம் புனிதமானது. அது வழிவழியாய் மனத்தளவில் ஒவ்வொருவராய் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று! அதை தவிர அந்த உறவினர் பற்றி பெருமையாய் பேசப்படும் சந்தர்ப்பங்கள் எத்தனை? எத்தனை?
அந்தந்த காலத்து சம்பவங்கள்...ஊடே அந்தந்த காலத்து அரசியல் நிலை...(கல்கியின் தியாகபூமி போல!) சுவை கூட்ட கொஞ்சம் கற்பனை கலந்து..exaggeration என்பது இல்லாமல்...
இதில் photo இருக்காது...ஆனால், அந்த கேரக்டர் அச்சு அசலான சாயலில் சித்திரமாக இருக்கும்.
இதில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இருக்கிறது. உங்களுக்கு அந்தந்த முன்னோர்களுடன் நீங்கள் feel செய்த சம்பவங்களை என்னுடைய/Lakshminarayanan Rajagopalan இன்பாக்சில் அனுப்பினால் document செய்து கொள்கிறோம்.
'எந்த ஊரில், எந்த நாளில், எங்கு காண்போமோ?' என்கிற ஏக்கத்தை உடைத்து தூள் தூள் ஆக்கி விட்டதே இன்டர்நெட்! ஆகவே நம் முந்தைய தலைமுறை பற்றிய நம் அனுபவங்களை நாம் அடிக்கடி share செய்து கொள்ளலாமே!
அத்தனை சிறுகதைகளையும், Father related/Mother related family gathering ஒன்று நடத்தி, எல்லாருடைய wishes உடன்(நமக்கு தெரியாமல் ஏதாவது விட்டுப் போனது இருந்தால்)சேர்க்கலாம். Private Circulation ஒவ்வொரு குடும்பத்திற்கும், சிறுகதை வெளியிட்ட பிறகு பத்து,பத்து பிரதிகள்!
இப்போது, எனக்கு ஐம்பத்தொன்பது வயது ஆகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் நமது சென்ற தலைமுறையினர் இருக்கிறார்கள்..இந்த யக்ஞத்தில் அவர்களுடைய participation நிச்சயம் நமக்கு வலு கூட்டும் என்று நம்புகிறேன்.
இந்த ப்ராஜெக்ட் குறைந்தது மூன்று வருடங்களாவது இழுக்கும்.
இப்போதிருந்து Data collect செய்து கொள்ளலாம்...
இந்த ப்ராஜெக்ட்க்கு இன்ஸ்ப்பிரேஷனே நண்பர் Narayanan Bala அவர்கள் அவயாம்பா என்ற என்னுடைய முற்றிலும் கற்பனையான சிறுகதைக்கு கொடுத்த உணர்வு பூர்வமான விமர்சனம் தான். மிக்க நன்றி Narayanan Bala sir.
அப்புறம் யோசித்துப் பார்த்ததில், private circulation எதற்கு? Public circulation சிறுகதைகளே வெளியிடலாம் என்று தோன்றியது. ஒவ்வொருவர் வீட்டிலும் அவயம்,அம்புஜம்,கிட்டு,சீனு,ராமையா,ஶ்ரீமதி,ப்ரணதார்த்தி,குஞ்சம்மா என்று நிறையவே இருப்பார்கள்.அவரவர் பெயருக்கேற்றார் போல அவரவர் குணங்கள்!
உதாரணமாக எனக்கு பட்டுப் பெரியம்மா...உங்கள் குடும்பத்தில் அது பட்டு அத்தை, பட்டு மாமி,பட்டு அக்கா என்று இருக்கலாம்...மேலும் பட்டு என்ற பெயரே ஒரு குடும்ப சுமைதாங்கியாக...ஒரு தியாக சீலராக...அன்பே ஓர் உருக் கொண்டாற் போல ...நம் பெரும்பாலான குடும்பங்களில் generalise ஆகவில்லையா Gurumurthy
எதற்கு இவ்வளவு ப்ப்ளிக்காக இதை நான் சொல்கிறேன் என்றால், நம்மில் நிறைய பேருக்கு எழுத வருகிறது. ' நம் தாத்தா, பாட்டிகளை பற்றி நாம் எழுதியதை நம்முடைய கொள்ளுப்பேரன், கொள்ளு பேத்தி என்று நாளைக்கு யாராவது ஒருவர் படிக்க மாட்டார்களா?
தளிர்கள் என்றாவது ஒரு நாள் தம்தம் வேர்களை பார்க்காதா?
நாம் விட்டுப் போகும் இத்தகைய 'பொக்கிஷங்கள்' இன்றைய எலக்ட்ரானிக்ஸ் சூழலில் நமக்குப் பிறகு ஒரு இருநூறு,முன்னூறு வருடங்களாவது பயணிக்காதா?'
என்கிற பேராசை தான்!
7 comments:
இதை பேராசை என்று சொல்ல முடியாது.
சின்ன சின்ன ஆசை. என்று சொல்லலாம்.
வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் மனதிலே தங்கி விடுவது உண்மை தான்.
உதாரணமாக, என் அம்மாவோட மாமா தாத்தா ஒரு தீக்ஷிதர் குடும்பம். திருச்சி ஆண்டார் தெருவிலே 1950 லே சின்ன முதலியார் தெருவிலே இருந்த
அவர்கள் ஆத்துலே எப்ப ஸ்ரார்த்தம் என்றாலும் எங்களுக்கு சாப்பாடு உண்டு. அது என்னவோ தாயாதி பங்காளி என்றெல்லாம் சொல்லுவார்கள்.
ஒரு நாள், நான் மத்தியானம் ஸ்கூல் லெந்து வந்த உடனே என் அம்மா சாப்பிட அங்கே போடா என்று சொல்லி விட்டார்கள்.
நானும் போனேன். பிரம்மச்சாரி புள்ளை வந்து இருக்கு. அதற்கு இலை நுனி இல்லை போட்டு சாதம் போடு என்று யாரோ சொல்ல எனக்கும் பெரிய நுனி இலை.
முதலிலே பாயசம் வைத்த உடனே அதை சாப்பிட்டு விட்டேன். பர்சேஷணம் பண்ண வேண்டாமோ என்ன இந்தப்புள்ள இப்படி பண்ணிடுத்தே. தீக்ஷிதர் வந்தா என்ன சொல்வாரோ என்று மாமா தாத்தா வோட சொந்தக்கார அம்மா , அவ பெயர் ஆனந்தம். , எள்ளும் கொள்ளுமா வெடிச்சா.
அடுத்து ஒவொண்ணா கொண்டு வந்தப்போ, மாமி, இதெல்லாம் வேண்டாம். பாயசம் மட்டும் ஒரு அஞ்சு கப் கொடுங்கோ போதும் என்றேன்.
உனக்கு மட்டும் கொடுத்துட்டேன் அப்படின்னா மத்தவாளுக்கு எல்லாம் என்ன செய்யறது என்று அவள் கேட்க,
அதெல்லாம் கிடையாது, பிரம்மச்சாரி புள்ள, இலை உட்கார்ந்து கெட்டப்பறம் இருக்கு இல்லை அப்படின்னு எல்லாம் சொல்ல கூடாது. அதர்மம். என்ன இருக்கோ இல்லையோ முதல் லே அவனுக்கு அஞ்சு கப் கொடுங்கோ என்று தீக்ஷிதர் உத்தரவு போட்டார்.
நன்றாக நினைவு இருக்கிறது.
ஆத்துக்கு வந்தப்பறம், என்னோட பாட்டி, (கௌரி பாட்டி, படவா ராஸ்கல், போனோமா, போட்டதை சாப்பிட்டோமா வந்தோமா அப்படின்னு இல்லாம, ரகளை பண்ணிட்டயாமே .....என்றாள்
உனக்கு வேணும்னா எங்கிட்டேன்னா கேட்கணும். அம்மாவோட புறந்தாத்து சம்பந்தத்திலே நம்ம கை நனைச்சதே தப்பு. என்றாள் .
நல்ல வேலை. கேஸ். அடுத்த அப்பேலேட் கோர்ட் அதான் என் அப்பா நோடீஸுக்கு போகவில்லை.
ததாஸ்து.
சுப்பு தாத்தா.
நேற்றைய நிகழ்வுகளை எண்ணங்களை, நாளைய சந்ததியினருக்குக் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சி போற்றுதலுக்கு உரியது அய்யா
நல்ல யோசனை கூறியுள்ளீர்கள். வரலாறு நமக்கு முக்கியம் அல்லவா? முயற்சிக்கலாம்.
நல்ல ஒரு ஐடியா கொடுத்திருக்கிறீர்கள். முயற்சிக்கலாம்.
கொஞ்சம் பத்தி (பாரா) பிரித்துப் போட்டால் படிக்க எளிதாக இருக்குமே..
ஆசை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது நான் என் அனுபவங்களை நினைவுகளை அவ்வப்போது பதிவுகளில் பகிர்ந்து வருகிறேன் இந்தப் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தால் அதில் வரும் காரக்டர்கள் உலவியது தெரிய வரும் ஃபாமிலி ட்ரீ என்று தெரிய ந்யூக்ளியஸ் குடும்பங்கள் சரிவராது பார்ப்போம் என்ன ரெஸ்பான்ஸ் என்று .
நல்ல யோசனை. பார்க்கலாம் என்ன விதமான ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது என!
சுப்புத் தாத்தாவின் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்.
உங்களுடைய குறிக்கோள் நல்லதுதான். எல்லோரும் கதை எழுத முடியாது. ஆனால் பெயரும், அவர் அல்லது அவருடைய குடும்பத்தைப் பற்றி தன் எக்ஸ்பீரியன்ஸ், சுப்புத் தாத்தா எழுதியுள்ளதுபோல் எழுதலாம். அப்படி இல்லைனா, உறவினர்களைப்பற்றி வரும் சந்ததிகள் அறிய முடியாமல் போய்விடும்.
என்னுடைய அப்பாவின் உறவினர் (ஒண்ணுவிட்ட சித்தப்பா பையனாக இருக்கலாம். ஆனால் வயது 50+) இந்த தேசத்தில் சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அப்பா சாயல் கொஞ்சம் தெரிந்தது. ஆனால் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை, அவரைப் பார்க்கும்வரை. அதன்பின் தொடர்பு விட்டுப்போயிற்று. நீங்கள் 8 தலைமுறை என்றா எழுதியிருக்கிறீர்கள்? 3 தலைமுறையைக் கண்டுபிடிப்பதே கடினம்.
Post a Comment