Saturday, June 18, 2016

குரு. உபதேசம்!

"குருவே, இந்த கட்டைக்கு ஒரு சந்தேகம்!"
"ம் ..சொல், சிஷ்யா?"
"எல்லாமே, கர்ம வினைப் படி தானே நடக்கிறது?"
"ஆம், சிஷ்யா..இதிலென்ன திடீரென சந்தேகம்,உனக்கு?"
"பின் தெய்வ பலம் ததேவா என்று ஏன் சொல்கிறார்கள்,குருவே?"
இவனுக்கு புரிகிறார்போல எப்படி சொல்வது என குரு யோசித்தார். உத்தரத்தில் கருந்தேள் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.
"சிஷ்யா, அங்கே பார்..என்ன தெரிகிறது?"
"கருந்தேள் குருவே!"
"தேள் உன்னை கொட்டுகிறது என்பது உன் கர்மா.தெய்வத்தினாலும் உன்னை காப்பாற்ற இயலாது?"
"சரி..அப்ப தெய்வ பலம் என்பது?"
"தேள் கொட்டிய அதே சமயம் உன் வீட்டில் தேள் கடிக்கு மருந்து இருப்பது தான் தெய்வ பலம்!ஸ்வாமி அங்கு கொட்டிய இடம் வலிக்காமல் இருக்க, உன் வீட்டு அலமாரியில் மருந்து வைத்து விடுவார்.."
"அப்ப, தெய்வ பலம் இல்லை என்றால்?"
எரிச்சலுற்ற குரு சொன்னார்:
"தேள் கொட்டுவதற்கு முன்னாலேயே, தேள் கடி மருந்து கொட்டிப் போறது!" 

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தேள்கடி மருந்தின் நிலை நினைத்தேன், ரசித்தேன்.

G.M Balasubramaniam said...


சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளாது . அப்போது இப்படி குண்டக்கா மண்டக்கா பதில்கள் கை கொடுக்கும் ரசித்தேன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

இங்கேயும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி ஜம்புலிங்கம், சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

GMB சார் சூப்பர்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நன்றி..
புதிது புதிதாய் பதிவு போட ஆசையாக இருக்கு...முயற்சிக்கிறேன் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தேள் கொட்டும் முன் தேள்கடி மருந்து கொட்டிப்போவது .....

ஆஹா ! விதியின் விளையாட்டு .....

தங்கள் மூலம் வெகுநாட்களுக்குப்பின் எங்களுக்கு இன்று கொட்டக்கிடைத்துள்ளதே ! :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வைகோ சார்...இனி அடிக்கடி blog பக்கம் வரலாமென்றிருக்கிறேன்...
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி!