Friday, June 24, 2016

சுண்டல்!

பள்ளி கொண்ட பெருமாள் சற்றே கண் விழித்தார்...
"என்ன ஸ்வாமி"
"பூலோகத்தில் யாருக்கும் சிரத்தை இல்லை...பக்தி செய்வோரும் யாரும் இல்லை...."
"எப்படி சொல்கிறீர்கள்? ஊரே அமர்க்களப் படுகிறதே..ஆங்காங்கே ஒவ்வொரு காலனியிலும் சின்ன சின்ன 
கோவில்கள்...யாகம்...சொற்பொழிவு...அமர்க்களம் படுகிறதே ஸ்வாமி!"
"எல்லாம் வேஷம் தேவி..மாலுக்கு போய் வந்ததை பெருமையாக சொல்வது போல் என்னை பக்தி செய்வதை பெருமையாய் சொல்கிறார்கள்..ஒரு..ஒரே ஒரு பக்தனை எப்போது காண்பேனோ?"
பெருமூச்சு விட்ட பெருமாள் கண்ணில் திடீரென ஒரு மின்னல்.
"தேவி...அதோ பார்...ஒலிப் பெருக்கியில் announce பண்ண, எல்லாரும் திமு திமு வென ஓட...அதோ..அங்கே ஒருவன் மெய் மறந்து பக்தி செய்து செய்து கொண்டிருக்கிறானே..வா..வா..போய் பார்ப்போம்"
"என்ன ஸ்வாமி இது...அவர்கள் என்ன announce செய்கிறார்கள்? இவர்கள் ஏன் கபாலி பட முதல் ஷோவுக்கு ஓடுவது போல் முண்டியடித்து இப்படி ஓடுகிறார்கள்..அந்த ஒருவன் மட்டும் ஏன் எந்த ஸ்மரணையும் இல்லாமல், இப்படி மெய் மறந்து பக்தி செய்கிறான்?"
"வா,வா தேவி...சீக்கிரம் போகலாம்,வா"
"சஸ்பென்ஸ் தாங்கவில்லையே ஸ்வாமி!"
"பெருமாள் கோவிலில் சுண்டல் தருவதாக announce பண்ணினதும் மக்கள் எப்படி ஓடினார்கள்...அவன் ஒருவன் மட்டும் எப்படி பக்தி செய்கிறான், பாரேன்..விசாரிக்கலாம் வா!"
இருவரும் அவனை நெருங்கி விட்டார்கள்..
பெருமாளுக்கு ஏக பெருமை!
"பக்தா..உன் பக்தியை கண்டு மெச்சினேன்..சுண்டல் என்று announce பண்ணியும் பதறாமல் நீ மட்டும்...."
பெருமாளின் குரல் தழுதழுத்தது.
"இன்னாது நான் சுந்தர லிங்கம் இல்லை சாரே!"
வலது கையால், வலது காதை பிடித்துக் கொண்டு இடது புறமாக அவன் திரும்ப,
மயங்கி விழுந்தார்,பெருமாள்..
முழிப்பு வந்ததும் நல்ல வேளை...பழசு எதுவும் ஞாபகம் வரவில்லை, அவருக்கு.
அனைத்தும் அறிந்த ஆதிசேஷன் மட்டும் அநிச்சையாய் பெருமூச்சு விட்டான்,அப்போது!

9 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா! அருமை!

G.M Balasubramaniam said...

நகைச் சுவையாக இருந்தாலும் பெருமாள் தெரிந்து கொண்டதை நான் எப்போதோ தெரிந்து கொண்டாயிற்று

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த பக்தருக்கு காது அவ்வளவாகக் கேட்காதோ?

[ விசுவின் மணல் கயிறு தாத்தா போல ]

ஆனால் அந்த ஆதிசேஷனுக்கு பாம்புச் செவி போலிருக்குது. :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி தளிர்கள் சுரேஷ்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

GMB சார்..மிக்க நன்றி!
அடிக்கடி நம்ம வூட்டுக்கு வாங்க!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி...வெங்கட்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா....
ஆதிசேஷனுக்கு பாம்பு செவி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தேன். நன்றி.