Tuesday, February 24, 2015

ஶ்ரீரங்கம் பதிவர் மாநாடு!

22.02.15 ஶ்ரீரங்க பதிவுலக நட்புகள் சந்திப்பு
-------------------------------------------------
விவரம் தெரிந்த புதிதில் வெவ்வேறு எம்பஸிகளுக்கு கடிதம் அனுப்பி அங்கிருந்து வரும் வழவழப்பான புத்தகங்களை தபால் காரரிடமிருந்து வாங்குவது பரம ஆனந்தமாக இருந்தது...
"டேய்..எனக்கு ஜெர்மன்லேர்ந்து புஸ்தகம்....உனக்கு ப்ரான்ஸா.." என்று ஒவ்வொரு பையனாக கேட்போம்....அதற்கு பிறகு வந்தது pen friends. முன் பின் தெரியாதவர்களிடமிருந்து நம்மை அங்கீகரித்து வரும் கடிதங்களுக்கு ஒரு மௌஸ்...
       இப்போதும் கூட, சற்றேறக்குறைய  ஆறு மணி நேரத்திற்கு முன்,முக நூல் சகோதரி ஒருவர் கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத என்னிடம், சகஜமாக....கொஞ்சம் கூட விகல்பமில்லாமல் 
சொந்த சகோதரனிடம் பேசுவது போல் பேசினார்....நான் யார்...என்ன ஒரு நம்பிக்கை என் மேல்...இதை ஏன் என்னிடம் சொல்கிறார்....இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் என்னுள்....இருந்தாலும் அவருடைய அன்பு என்னை நெகிழ்த்தி விட்டது...
அவருடைய நம்பிக்கைக்கு உரியவனாக ஆக வேண்டும் என்கிற ஆசை என்னுள் துளிர்க்க ஆரம்பித்து விட்டது....
             அது போல் ஒரு பதிவுலக நண்பர் ஹைதை காரர்..சென்னையில் பையனுக்கு கல்யாணம் அவசியம் வரவும் என்றார்...ஏதோ ஒரு தைர்யம் .....போனேன்...எக்மோரில் இறங்கியதுமே வயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது...என்ன ஒரு அசட்டு தைர்யம்..."யாரையா நீ?"என்று கேட்டால், என்ன சொல்வது? சரி....வந்தது வந்தோம் முதலில் ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து போன்.."சார்...எங்கே இருக்கீங்க....ஒங்களுக்காக நான் வெயிட்டிங்" என்றார் அவர்..என்ன ஒரு பாசம்.....ரொம்பவே சங்கோஜியான நான் தைரியமாக கல்யாண மண்டபம் சென்றேன்..
என்னை பார்த்தவர்..."வாங்க மூவார்,," என்று அன்போடு வரவேற்று, "திருச்சீலேர்ந்து நம்ம கல்யாணத்துக்கோசரம் வந்திருக்காராக்கும்" என்று பெருமையுடன் அறிமுகப் படுத்தியதுடனல்லாமல், தாம் மண மேடையில் இருப்போம் என்று தன்னுடைய சொந்தக்கார
மாமாவை....அவர் கொஞ்ச நாள் திருவானைக்காவலில் இருந்தவர்...எனக்கு கம்பெனி கொடுக்கச் சொல்ல, அவரும் ஏதோ ரொம்ப நாள் பழகியவர் போல வாஞ்சையாய் பழகினார்...
            இந்த ஆரண்ய நிவாஸ் புஸ்தகம் போட்டவரும் ஒரு பதிவுலக நண்பர் தான்...ஒப்பற்ற சிரத்தையையும்...உழைப்பையும் நாம் கொடுத்த பணத்தால் ஈடு செய்ய முடியாது என்பதை அவரிடமிருந்து உணர்ந்தேன்...அது போல, சென்னையில் என் வீட்டு பங்க்‌ஷனுக்கு போகும் போது பார்க்க வந்த நண்பர்...மற்றொரு முறை என் பெண்ணை கூட்டிக் கொண்டு வர சென்னை சென்ற போது..குடும்பத்துடன் சென்னை GH வந்த என் அன்பு பதிவுலக நண்பர்...
திருச்சி வந்த ஒரு பதிவுலக குடும்பம்....
           இப்போது சிகரம் வைத்தார் போல, இந்த ஶ்ரீரங்கத்தில் நடந்த இந்த மினியேச்சர் சந்திப்பு...
          ஒருவர் தன் காரில் இரண்டு பதிவர்களை அழைத்து வருகிறார்...இரண்டு பேர் ஸ்வீட் தருகிறார்கள்....தாம் அச்சிட்ட புத்தகங்களை பரிசாகத் தருகிறார்கள்....வீட்டிற்கு வந்த நண்பர்களுக்கு சுவையாக சிற்றுண்டி அளிக்கிறார், அழைத்த பதிவுலக நண்பர்...பளிச் பளிச் என்று போட்டோ எடுக்கிறார்கள்...இந்த அன்பு மழையில் ஒரு குட்டி தேவதை...பெண் பதிவர்களுக்கு ரவிக்கை...குங்குமச் சிமிழ் வேறு!
         ஓரிருவர் தவிர ஒருவருக்கும் மற்றவர் பழக்கமில்லை....மேன்மையானதொரு நட்பு....
ஆனாலும் என்ன ஒரு பாச மழை....அந்த இரண்டு மணி நேரம் உண்மையிலேயே உன்னதாமாகத் தான் இருந்தது, ஒவ்வொருவருக்கும்.....
         ஓ.....எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது!
                          
      

21 comments:

msuzhi said...

அழகாகச் சொல்லியிருக்கீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான + ஆச்சர்யமான நம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமி.

அன்புடன் கோபு

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஓரிருவர் தவிர ஒருவருக்கும் மற்றவர் பழக்கமில்லை .... மேன்மையானதொரு நட்பு .... ஆனாலும் என்ன ஒரு பாச மழை .... அந்த இரண்டு மணி நேரம் உண்மையிலேயே உன்னதாமாகத் தான் இருந்தது, ஒவ்வொருவருக்கும் ..... ஓ ..... எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது! //

சுண்டியிழுக்கும் எழுச்சிமிக்க எழுத்துக்கள் என்றும் வாழ்க !

வெங்கட் நாகராஜ் said...

சந்திப்பு பற்றிய சிறப்பான பதிவு. விரைவில் சந்திப்போம்.....

தி.தமிழ் இளங்கோ said...

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வலைப் பதிவர்கள் சந்திப்பினை ஒரு புதியகோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. மாணவப் பருவத்தில் தூதரகங்களுக்கு எழுதிய கடிதம் தொடங்கி, பேனா நண்பர்கள் தொட்டு, இன்றைய ப்ளாக் மற்றும் பேஸ்புக் வரை நல்ல அலசல். நான் மாணவனாக இருந்தபோது சென்னை - அமெரிக்க தூதரகத்திற்கு எழுதி அவர்கள் அனுப்பி வைத்த புத்தகம் “இதுதான் அமெரிக்கா”. மலரும் நினைவுகளை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

நானும் இந்த சந்திப்பு குறித்த ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதில் உங்களது இந்த பதிவினையும் மேற்கோள் காட்டி இணைப்பு கொடுத்து இருக்கிறேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

எழுத்துலகம் வழங்கும் நட்பு மேன்மையானதுதான் ஐயா
சந்திப்புகள் தொடரட்டும்
உறவுகள் பெருகட்டும்
நன்றி

G.M Balasubramaniam said...


சிவப்புப் பின்னணியில் கருப்பு எழுத்து. சிரமமாய் இருப்பதென்று யாரும் சொல்லவில்லையே. எனக் மிகவும் சிரமாய் இருப்பதால் படிக்க முடியவில்லை.

RAMA RAVI (RAMVI) said...

// ஓ.....எழுத்து தான் மனிதர்களை என்னமாய் இணைக்கிறது!//

உண்மைதான் சார்.
மிக அழகாக சொல்லியிருக்கீங்க..

ADHI VENKAT said...

உங்கள் நடையில் சந்திப்பு பற்றிய பகிர்வு அருமையாக உள்ளது சார்.

எல்லோருக்குமே இந்த சந்திப்பில் மிகுந்த சந்தோஷம் என்பது ஒவ்வொருவராக எழுதும் பதிவுகளில் தெரிகிறது. ருக்மணியம்மா, ரஞ்சனிம்மா, மாலி சார் மூவரைத் தவிர ஏழு பேர் பகிர்ந்து விட்டோம்....:)

அன்றைய மாலைப்பொழுது போல் தொடரட்டும் நம் சந்திப்புகள்..

தங்கள் பதிவின் இணைப்பையும் என்னுடைய பதிவில் சேர்த்து விடுகிறேன்.

ஸ்ரீராம். said...

மனதின் உணர்வைக் கவிதையாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

V Mawley said...

பிரபல பதிவர் மாதங்கியின் அப்பா மௌலி.. (இவரே பிரபலமாக்கும்.. அஷ்டாவதானி..)"

இந்த அறிமுகம் தான், பதிவர்கள் சந்திப்பில் என்னுடைய முகமைக்கு ஒரு அங்கீகாரம் ...மேலும் இந்தசந்திப்பிற்கு வருகை தரும் சில பதிவர்களை நான் அறிவேன் என்றதால் -( மாதங்கி -சென்னை சென்றிருந்ததால்-வர இயலாததால் ) நான் மட்டும் கூட 'ஆர்வத்துடன் ' (?ஆஜராகிவிட்டேன் !

மற்றும் பொதுவாகவே ' பதிவர்கள் ' யாவரும் முதற்கஏழுத்தாளர்கள் என்றகாரணத்தினால்அவர்களுடைய உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் ஆர்வத்திற்கு ஒரு முக்கிய காரணம் ; நான் சிறிதும் ஏமாறவில்லை !

புகைப்பட session -க்கு பிறகு சில பதிவர்களின் சுய அறிமுகம் அதன் பிறகு திருமிகு.ருக்மணி சேஷசயீ அவர்களின் அன்பான உபசரிப்போடு , மிகவும் ருசியாான இட்லி-சட்னி,சாம்பார் ...ஆஹா நல்ல புஷ்டியான ஞாயிறு மாலை பொழுது ..இந்தாவாய்ப்புக்காக எல்லா பதிவர்களுக்கும் நன்றி..நன்றி ..

மாலி.

கோமதி அரசு said...

அருமையான பதிவர் சந்திப்பு பகிர்வு.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

1970ல் என் அண்ணாவிற்கு பேனா நண்பி இருந்தார்கள்.(ஜெர்மனி)
அப்போது எல்லாம் அது பெரிய விஷயம்தான்.

Geetha Sambasivam said...

ரொம்பவே தாமதமாய் வந்திருக்கேன். ஆனாலும் சுவை குன்றவில்லை. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சந்திக்க நேர்ந்ததுக்கு மிக்க சந்தோஷம்.

அது சரி, உங்க மாமனார்+மைத்துனர்கள் நடத்தும் ஆதிகுடி ஹோட்டல் இருப்பது திருச்சியா? ஶ்ரீரங்கமா? எங்கே இருக்கிறது?

Radha Balu said...

அழகான, ஆத்மார்த்தமான பதிவுக்கு நன்றி. நான் பதிவுலகுக்கே புதிது என்றாலும், எல்லாரும் அறிமுகம் இல்லாதவர்களாகத் தோன்றவில்லை. நல்லதொரு சந்திப்பு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆதிகுடி காபி கிளப் திருச்சி இப்ராஹிம் பார்க் எதிரில்,கல்யாணி கவரிங் கடை அருகில் உள்ளது!
Geetha sambasivam மேடம்!

Ranjani Narayanan said...

வணக்கம் ராமமூர்த்தி ஸார்.
உங்களையெல்லாம் சந்தித்தது ரொம்பவும் இனிமையான மறக்க முடியாத நிகழ்வு. ஒவ்வொருவரின் பெயராகக் குறிப்பிட்டு இவரைப் பார்த்தேன், அவரைப் பார்த்தேன் என்று எழுதாமல், உங்கள் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை மட்டும் எழுதியிருப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த எழுத்துலக நட்பு தொடரட்டும்.

மோகன்ஜி said...

இந்தப் பதிவிற்கு முன்னமேயே பின்னூட்டமிட்ட நினைவு..

இந்த நெகிழ்விற்கு முதன்மைக் காரணம், உங்களின் இயல்பான நேயமும் சிநேக மனோபாவமுமே.. தொடருங்கள்...

Thenammai Lakshmanan said...

பதிவர் சந்திப்பு அருமை. இனிமை சார் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ளம் கொண்ட ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/5.html

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form
ஆரண்ய நிவாஸ்
திரு. R. ராமமூர்த்தி அவர்கள்
வலைத்தளம்: ”ஆரண்யநிவாஸ்” ஆர். ராமமூர்த்தி
http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/08/blog-post.html
ஆண்டார் வீதியும் நானும்

http://aaranyanivasrramamurthy.blogspot.in/2011/07/blog-post_30.html
மூட்டு வலியும் மும்தாஜ் பேஹமும்

http://aaranyanivasrramamurthy.blogspot.in/2011/06/blog-post.html
சும்மாக் கிடந்த சங்கை.....

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
France.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
http://www.drbjambulingam.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/