Sunday, January 11, 2015

WORLD HUMOUR DAY

"ஏய்...ஏதாவது ஜோக் சொல்லேன்?"
"எதுக்கு?"
"உன் டைம் லைன்ல பத்து,பன்னிரெண்டு பேர் நீ ஏதாவது ஜோக் சொல்வேன்னு காத்துகிட்டிருக்காங்க!"
"வாணாம்"
"ஏன்?"
"ஜோக் ங்கிறது அதுவா தானா வரணும்...நல்ல டைமிங்ல நச்னு சொன்னாத் தான் அது எடுபடும்"
"இப்ப என்ன ராகுகாலமா?"
"உனக்கு சொன்னா புரியாது"
"ஒரு ஜோக் சொல்லு ஓடிப் போயிடறேன்"
"எதுக்குடா என்னை இப்டி  இம்சை பண்றே?"
"ஆமா...நீ மட்டும் மத்தவங்கள irritate பண்ணலாம்...மத்யானம் கேண்டீன்ல ரசம் சாதம் சாப்பிடும் போது, எதிர்த்தாற் போல இருந்த விக்கி மூஞ்சி நசுங்கிப் போன ஈயச் சொம்பு மாதிரி போயிடுத்தே நீ சொன்ன ஜோக்கை கேட்டதும்!"
"சரி...அதுக்கு இப்ப என்னாங்கிறே?"
"ஒண்ணு தான் சொல்லேன்"
"இன்னிக்கு கிடையாது"
"என்னிக்கு?"
"மே மூணாம் தேதி!"
"அன்னிக்கு என்ன கணக்கு?"
"அன்னிக்குத் தான் World Humour Day!"
"இது தாண்டா, நீ சொன்னதுலேயே சூப்பர் ஜோக்!"
"எப்டி?"
"கொஞ்ச நேரம் முன்னால,டைமிங்குக்கு ஜோக்னே..இப்ப ஜோக்குக்கு டைமிங்கிறே பாரு! அது தான் பெரிய ஜோக்!"

5 comments:

நிலாமகள் said...

இனிதான தமிழர் திருநாள் வாழ்த்துகள் சார்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஜோக்! :)

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

நலந்தானா? அலைபேசியில் உங்களைப் பிடிக்க அலைந்தேன்...