Tuesday, October 14, 2014

ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ......
  ‍‍‍‍‍‍‍‍============================================================
      SKULL லினை இழந்தவன் தன் இன்னுயிர் இழந்ததது போல்,
      FULL லிலே விழுந்தவன் சுயப்ரக்ஞையை இழந்தது போல்
  பல்லினை இழந்தவன் தன் சொல்லிழந்து போனது போல்,
  செல்லினை இழந்து இங்கு செயலிழந்து போனேனே!
                                               ப்ளாஷ் பேக்
  "ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை சார்" என்று நான் பெருமூச்சு விட...
  "பாவம் சார் நீங்க..போயும் போயும் உங்களுக்குப் போய் இப்படியா?" என்று ஒவ்வாருத்தனாய் பச்சாதாபப்பட...
பத்து சிவாஜி படங்களை ஒருமிக்க பார்த்தது போல் துக்கம் தொண்டையை அடைக்க..
குட்டி சுவர் ஒன்று கிடைத்தால் குலுங்கி குலுங்கி அழுது விடுவது போல ஒரு ஆத்திரம் வந்து தொலைக்க...
எல்லாரும் என்னை பார்த்துக் கொண்டே செல்லில் பேசுவது போல ஒரு ப்ரமை தட்ட‌….
இதில ஃப்ரெண்ட் ஒருத்தன் என் வயற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது போல யாரும் எனக்கு செல் கொடுத்து உதவக் கூடாது என்று 144 போட்டு விட..
மாஞ்சு மாஞ்சு ஸ்டேடஸ் லைக் கமெண்ட் என்று என்னை குலவை போட‌,
'எப்ப‌டா சாய‌ங்கால‌ம் ஆகும்என்று வழி மேல் விழி வைத்து பார்த்து தொலைக்க‌
அந்த கார்பப்ரேஷன் பஸ்ஸோ ஒவ்வொரு கிலோ மீட்டரையும் ஒவ்வொரு மணி நேரத்தில் கடக்க...
ஒரு வழியாய் என் ஸ்டாப் வந்து.....ஆட்டோ பிடித்து வீடு வந்து

அரக்க பரக்க ஹாலில் இருந்த செல்லை கட்டிக் கொண்டு அரைக்கால் மணி நேரம் அழுதேன்!

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//செல்லை கட்டிக் கொண்டு அரைக்கால் மணி நேரம் அழுதேன்!//

”உன்னைக் கட்டிக்கொண்டு அழும்படியாச்சே என் தலைவிதி” என்று நொந்தபடி நாம் சொன்ன காலமெல்லாம் போய் .....

செல்லைக் கட்டிக்கொண்டு .....

ஆக்கம் அழகோ அழகு !
அதன் தாக்கம் அதிகம்.

பாராட்டுகள் + வாழ்த்துகள்.

ஒருவழியாகக் கடைசியில் கரம் பற்றிய அவளை [செல்லைத்தான் சொல்கிறேன் ஸ்வாமீ] இனி கை விட்டு விடாமல் ஜாக்கிரதையாக இணைத்து, அணைத்து, அணைக்காமல் எஞ்சாய் செய்யுங்கோ ஸ்வாமீ.

அன்புடன் கோபு

ரிஷபன் said...

செல்லினை இழந்து இங்கு செயலிழந்து போனேனே!

கர்ணனுக்கு கவச குண்டலம் போல இப்போது கைபேசி இல்லாத மனிதன் கையறு நிலையில் இருக்கிற அவதி.. நல்லா சொல்லிட்டீங்க !

இராஜராஜேஸ்வரி said...

அடடா ..உடுக்கை இழ்ந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களையும் நட்பு கூட செல்லை இழந்தவனுக்கு உதவ முன்வராமல் வயற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது போல யாரும் செல் கொடுத்து உதவக் கூடாது என்று 144 போட்டு விட்டாரே.. என்ன கொடுமை இது..!

G.M Balasubramaniam said...


நகைச்சுவையாக ஒரு யதார்த்த நோக்கு. வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

SKULL, FULL, CELL - நன்றாகத்தான் சொன்னீர்கள்! நான்கூட முதலில் செல் தொலைந்து விட்டது போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன்! எதை இழந்தாலும் செல்லை யாரும் இழக்க விரும்புவதில்லை!

கரந்தை ஜெயக்குமார் said...

செல்லில்லாற்கு இவ்வுலகில்லை

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன். பலருக்கு செல் இல்லாமல் சொல் இல்லை!

சிவகுமாரன் said...

ஆகா அருமை.

மோகன்ஜி said...

ஹா.. ஹா... செல்லுக்கும் புல்லுக்கும் பதிவுபோட மூவாரால் மட்டுமே முடியும். நீர் கட்டிக் கொண்டு அழுது எம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்.சபாஷ் பதிவு!

மோகன்ஜி said...

ஹா.. ஹா... செல்லுக்கும் புல்லுக்கும் பதிவுபோட மூவாரால் மட்டுமே முடியும். நீர் கட்டிக் கொண்டு அழுது எம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்.சபாஷ் பதிவு!

நிலாமகள் said...

பத்து சிவாஜி படங்களை ஒருமிக்க பார்த்தது போல் //

ஹஹஹா....

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_30.html

முடிந்த போது வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

ஆதி வெங்கட்.