லண்டன் ...
பிக் பென் கடிகாரத்தை, 'ஓட்டு கேட்க வரும் அரசியல் வாதி பொது ஜனத்தை
அண்ணாந்து பார்ப்பது' போல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு விவசாயி.
ஒரு டிப்டாப் ஆசாமி அங்கு வந்தான்.
" என்ன பார்க்கிறே?"
"கடிகாரம் சூப்பர்!"
"உனக்கு வேண்டுமா?"
"ஆமாம்"
"ஆயிரம் பவுண்ட் அப்பேன்!"
"நிஜம்மாவா"
பக்கத்தில் உள்ள லங்காஷயரை சேர்ந்த விவசாயி அவன். லண்டனுக்கு வந்து
கோதுமை மூட்டையை விற்ற காசு மடியில் இருந்தது. யோசித்து பார்க்காமல்
ஆயிரம் பவுண்ட் பணத்தை டிப்டாப்பிடம் கொடுத்து விட்டான், விவசாயி.
பணத்தை வாங்கிக் கொண்ட அந்த டிப்டாப் சொன்னான்.
"ஒரு அஞ்சு நிமிஷம் நில்லு...நான் ஏணி கொண்டு வந்துடறேன், அதை எடுத்து தர"
"சரி"
போனவன் போனாண்டி தான்...
பாவம், விவசாயி ....
ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினான்...
அடுத்த நாள்....
அந்த டிப்டாப் அதே இடத்துக்கு வந்தான்..
என்ன ஆச்சர்யம்!
இன்றைக்கும் ஒரு பட்டிக்காட்டான் அந்த பிக்பென் கடிகாரத்தை அண்ணாந்து பார்த்துக்
கொண்டிருந்தான்..
"அட....இன்னிக்கும் நரி முகத்தில் முழிச்சிருக்கோம் போல் இருக்கே!"
ஆவலுடன் அவனிடம் சென்றான் அந்த டிப்டாப் ...
"என்னப்பேன், கடிகாரம் வேண்டுமா?"
"ஆமாம்"
"ஆயிரம் பவுண்ட்"
இடுப்பிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான், அவன்.
"அச்சச்சோ..."
தன்னை மீறி கத்தி விட்டான் அந்த டிப்டாப்...
நேற்று அவனிடம் ஏமாந்த அதே விவசாயி!
டிப்டாப் சுதாரித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பதற்க்குள் சட்டென அவனைப்
பிடித்துக்கொண்டு அந்த விவசாயி சொன்னான்:
" டேய்.....நேத்திக்கு ஏணி கொண்டு வரேன்னு சொல்லி ஏமாத்தினா மாதிரி இன்னிக்கும் ஏமாத்தலாம்னு நினைச்சியா?"
டிப்டாப்புக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
"அப்படி ஏமாத்தலாம்னு நினைச்சா அத்த உடனே மறந்துடு...நீ இங்ஙன இரு.இங்கே பக்கத்தில் தான் என் மச்சான் வீடு இருக்கு.....நான் போய் ஏணி கொண்டாறேன்!"
8 comments:
இப்பவும் போனவன் போனவன்தான்... ஹிஹி..
சபாஷ் !
விவசாயியா .... கொக்கா !!
டிப்டாப் ஆசாமியின் காட்டில் தொடர்ந்து மழை பெய்கிறதே !!!
பயங்கர புத்திசாலி..!
ஆகா அருமை
அடடா.... இப்பவும் ஏமாற்றம்.... :)))
அப்படித்தான் ஒவ்வொரு தடவையும் அரசியல் வாதிங்களோட வாக்குறுதிகளை நம்பி திரும்ப திரும்ப வோட்டு போட்டுக்கிட்டே இருக்கோம். நாமெல்லாம் அதி புத்திசாலிங்கதான்
இப்படித்தான் நம்ம சென்னைக்கு வந்த ஒரு கிராமவாசி அண்ணா சாலையில் உள்ள LIC கட்டிடத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பொது ஒருவன் அவனிடம் வந்து எத்தனையாவது மாடியை பார்துக்கொண்டிருக்கிராய் என்று கேட்க, கிராமவாசி ஏழாவது மாடி என்றான். அப்பன்னா 700 ரூபாய் ஆச்சுன்னு சொல்ல கிராமவாசியும் பணத்தை கொடுத்தான்.கொடுத்தவுடன் ஆள் எஸ்கேப். கிராமத்தான் மனசுக்குள் நெனச்சுக்கிட்டான் "பைத்தியக்காரன்.நல்லா ஏமாந்தான். நான் 12வது மாடியைத்தானே பாத்திட்டு இருந்தேன்"
என்னது விடிஞ்சும் விடியாம இருக்கும்போ, இந்த ராமு அண்ணன்
ஓட்டமும் நடையுமா வருது அப்படின்னனு நினைசுகிட்டே
என்ன அண்ணே என்ன விசேஷம் அப்படின்னு கேட்குது
மீனாட்சி பாட்டி.
என்னான்னு அப்பரம் சொல்றேன். அந்த ஏணியைக் கொஞ்சம் எடுத்துகிட்டு போறேன். எங்க ஏணி என்று கேட்டார் வேர்க்க விறு விருவிருக்க வந்த அந்த சாது மனுஷன்.
ஏணியா ? என்னது இன்னிக்கு ஏணிக்கு அவ்வளவு மவுசு ?
இப்பதானே இவரு எதையோ கடிகாரமாமே அதை எடுக்கணும் அப்படின்னு ஏணியை எடுத்துகிட்டு போனாரு..வந்த உடனே நீ எடுத்துட்டு போ, அதுக்குள்ள் ஒரு வாய் சாப்ப்பிடு.
என்கிறாள் மீனாட்சி பாட்டி.
Post a Comment