அவ்ளவ் தூரம் நாக்கில் நுரை தள்ளி, ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் ஓடினவனுக்கு, தண்ணீர் குடிக்கக் கூட உபயோகப்படாத கோப்பை பரிசாகத் தருகிறார் போல்,இப்பொழுதெல்லாம் கல்யாணங்கள் ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.நகரின் மையம் பகுதியில் பிரமாதமான மஹால்....
பொதுவாக கச்சேரி கேட்பவனுக்குத் தான் அஸாத்ய சகிப்புத் தன்மையும்,அபாரமான பொறுமையும் வேண்டும்...ஆனால், கல்யாண மண்டபத்தில் பாடுகிறவனுக்குத் தான் இது வேண்டும்.....ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தேன்...ஒரு பிரபல கச்சேரி வித்வான் அபூர்வமான ராகங்களில் உயிரைக் கொடுத்து பாடிக் கொண்டிருக்க, ஒருவரும் அதை கேட்காமல் அங்கும்,இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்....
அப்படியும், பக்கத்தில் இருந்த ஒருவர் "ஸார், இது பைரவி தானே" என்று சங்கீத்த்தைப் பற்றி தன்னுடைய மேதா விலாஸத்தை என்னிடம் காண்பிக்க முயற்சிக்க, நானும் பதிலுக்கு "பைரவியே தான்" என்று சொல்ல, சட்டென்று ஒரு நடுத்தர வயது மாது திரும்பி, "நான் தான் பைரவி...சேஷ ஐயங்காரின் பெண் வயிற்று பேத்தி...எம் புள்ள ரெண்டும், அமெரிக்கால......நியூ ஜெர்ஸில இருக்கறவனுக்கு, இப்ப பார்த்துண்டு இருக்கோம்....யாராவது வடகலைல பொண்ணு இருந்தா சொல்லுங்கோ"ன்னு instantஆ அப்ளிகேஷன் போட, இந்த பைரவி பேச்சுனால, அந்த பைரவியைக் கேட்க முடியாமப் போச்சு!
சரி.....சாப்பிடவாவதுப் போகலாமென்றால், அது இதை விட கொடுமை!
தொகுதி உடன்பாடு ஏற்பட்டு,தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு சீட்டாவது கிடைச்சுடும்....ஆனா,கல்யாண பந்தியில் சீட்டு கிடைக்கிறது அவ்வளவு கஷ்டம்!
அப்பாடா.......பந்தியில் ஒரு வழியாக இடம் கிடைத்து, உட்கார்ந்தோமானால், சுவையான பதார்த்தங்களை கரண்டி காம்பால் பரிமாறுகிறான் காண்ட்ராக்டர்....இதுல ஒருத்தன் 'வெந்த வெங்காயத்துல விளக்கெண்ணெய் ஊற்றுகிறார்' போல, " ஸார், சாதிக்கட்டுமா?" என்று கேட்க, "சாதிச்சது போதும்!" என்று எரிச்சலுடன் எழுந்து கொண்டேன்!
7 comments:
கல்யாண சாதனை எரிச்சலுடன் ரசிக்கவைக்கிறது..!
//"சாதிச்சது போதும்!" என்று எரிச்சலுடன் எழுந்து கொண்டேன்!//
தாங்கள் இதை நகைச்சுவையுடன் எழுதி சாதித்து, வாசகர்களுக்கு எரிச்சல் ஏற்படாமல் செய்துட்டீங்கோ.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
எம்.பி சீட் கிடைச்சாலும் கிடைக்கும் பந்தியிலே சீட் கிடைக்கிறது இல்ல இப்ப கஷ்டமாயிருக்கு! ஹாஹாஹா!
ஹா... ஹா... செம கரைச்சல்...
ஆகா
ஆகா
முகப்புத்தகத்தில் ரசித்தது..... மீண்டும் ரசித்தேன்..... சிரித்தேன்...
Post a Comment