Sunday, March 16, 2014

புழுவும்,நானும்!



ஒரு சாவகாசமான மாலைப் பொழுது....
புழு ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆமாம் ....நீ யார்?"
"நான் மனிதன்..."
"இன்னும் சொல்லலாமே..."
"நானா....வடமன்...திருச்சி ஜில்லா...பூர்வீகம் லால்குடி பக்கமுள்ள அரியூர்....வைஸ்வாமித்ர,
தேவராத,ஔதல என்கிற மூன்று ரிஷிகளின் வழி வந்தவன்..ஆனால்..."
"என்ன ஆனால்?"
"கொஞ்ச நாள் முன்னால் கண்டம் விட்டு கண்டம் போய் வந்தேன்...அதனால்....."
"என்ன அதனால்?"
"தினுசு,தினுசாய் மனிதர்கள்.....பிரிட்டன்,சைனா,ஜப்பான்,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து,
 வந்த வெவ்வேறு இன, மத,கலாச்சார மனிதர்கள்.....அவர்களை எல்லாம் பார்த்த போது,,,"
"பார்த்த போது?"
"என்னை அரியூர்,ஆங்கரை,திருச்சி,இந்தியா என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அறிமுகப் படுத்திக்
  கொள்ள விரும்பவில்லை....என்னை ஒரு International citizen என்று சொல்லிக் கொள்ள ஆசை!"
"நான் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு பிரஜை!....அது சரி...உனக்கு சொந்த பந்தம்?"
"பெற்றோர்....உற்றார்.....உறவினர் ...என்று ஏகப்பட்ட பேர் எனக்கு,உனக்கு?"
" இப்பூமியில் உள்ள அத்தனை ஜீவன்களும்..."
விஷமக் கார புழுவாக இருக்கும் போல இருக்கிறதே....நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்...
மௌனத்தை கலைத்தது புழு.
"வீடு,வாசல்?"
"ஆரண்ய நிவாஸ் என்று பெயர் என் வீட்டிற்கு....நிஜமாகவே ஆரண்யம் தான்...எக்க சக்க
பழ மரங்கள்..."
"போதும்....நிறுத்து.....ஒரே அருவருப்பாக இருக்கிறது..."
சட்டென ஒரு மின்னல் என்னுள்....இந்த பிரபஞ்சத்தில் எனக்குள்ள அத்தனை உரிமைகளும்
அதற்கும் இருக்கிறது..உயிர்களுக்குள் என்ன பேதம்? அவரவர்  கர்ம வினைப்படி நான் மனிதனாக,
அது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவு தான்...
தெளிவு பிறந்தது என்னுள்....என்னை நானே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்...
"புழுவே....உன்னிலும் தாழ்ந்தவன் நான்..." என்றேன் நாத் தழுதழுக்க..
"அட மனுஷா...இன்னுமா அந்த 'உன்னிலும்' மை விட வில்லை நீ?"
குலுங்கி..குலுங்கி சிரித்தது அந்த பொல்லாத புழு!







9 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான தத்துவம்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதப் பிறவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை ஒன்றுமில்லைதான்.
வாழ்ந்தல்லவா மனிதன் என்று நிரூபிக்க வேண்டும்.
அருமை ஐயா

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

sury siva said...

Mata cha Parvati Devi, Pita Devo Maheswarah
Baandava Shiva Bhaktyascha, Svadeso Bhuvanatrayam

Mother is shakti, father is shiva, relatives are the devotees of shiva and own country is all the three worlds.

Unknown said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு - தெளிவான தத்துவம்......

Unknown said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு - தெளிவான தத்துவம்......

ரிஷபன் said...

தத்துவம் அருமை....

கதம்ப உணர்வுகள் said...

நான் என்னும் அகந்தை அழிய ஒரு உந்துகோல் தேவைப்படுகிறது...

தன்னை தன் இருப்பை நிரூபிக்கவும் ஒரு உந்துகோல் தேவைப்படுகிறது..

இங்கே ஒரு புழுவுடனான உங்கள் உரையாடலை படித்துக்கொண்டு வரும்போது புழுவுக்கு தோன்றிய அதே கேள்வி எனக்கும் தோன்றியது.

அழகாக அதற்கான பதிலை நீங்களே சொல்லிட்டீங்க சார்...

அருமையான பகிர்வு...

தி.தமிழ் இளங்கோ said...

// உயிர்களுக்குள் என்ன பேதம்? அவரவர் கர்ம வினைப்படி நான் மனிதனாக, அது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவுதான்... //

.... என்ற உங்களது வரிகள், அது நாமாகவும், நாம் அதுவாகவும் ஏன் பிறக்கவில்லை என்பதற்குச் சிறந்த தத்துவ விளக்கம்!