1. இனப் பெருக்கம்
செய்துகொண்டேயிருக்கிறது...
மொழி,
அம்மா என்ற வார்த்தையை,
தாயில்லாத
குழந்தைகளுக்கு!
2. கரப்புகளின்
இறுதி யாத்திரையில்,
எறும்புகளின்
ஊர்வலம்!
3. வயல்களில்,
அபார்ட்மெண்டுகள்....
பசுமரத்தாணியாய்,
வயல்கள்!
4. குடங்களில்,
வழிந்து,
ததும்புகிறது,
நிலா!
5. சொத்துக்களை,
பிரித்துக்
கொண்டிருந்தனர்...
அண்ணன்,தம்பிகள்!
வேர்களை படர
விட்டுக் கொண்டிருந்தது,
கொய்யா!
6.சண்டைபோட்டுக்கொண்டு
சாப்பிட்டனர்,
கூட்டாஞ்சோறு!
7.காதலுக்காக,
கயிற்றை சுருக்கும்
போது,
கான்க்ரீட்
போட்டுக்கொண்டு
இருந்தது,
உனக்கான,
வார்த்தைகள்!
8.வயலை
விற்று,
fees
கட்டினார்,
விவசாயக் கல்லூரி,
அட்மிஷனுக்கு!
9.இஸ்திரி போடுபவரின்
சுருக்கம் விழுந்த,
வயிறு!
எதிரில்,
கஞ்சி போடப்பட்டு,
துணிகள்!
இவை அனைத்தும் முரண் என்கிற தலைப்பில்!
அவர் பத்திரிகைகளுக்கு கவிதைகள் அனுப்பிக் கொண்டிருந்தவர்....ஒரு குடும்ப சந்திப்பில் " ஏதாவது இப்ப எழுதுகிறாயா?" என்று நான் கேட்ட கேள்விக்கு, சடசடவென
வாயிலிருந்து, விழுந்த வார்த்தைகள் ஒரு நொடிப்பொழுதில்
கவிதைகளாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு விட்டன!Hats off to Smt. ஜெயந்தி சிவகுமார்!
6 comments:
பெரும்பாலானவை மிகவும் அருமையாக உள்ளன.
அவருக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றிகள்.
9, 8, 2 மற்றும் 1 மிகவும் ரஸித்தேன்.
;) சூப்பர் !
அனைத்தும் அருமை.......
உங்கள் சகோதரிக்கு எனது பாராட்டுகள்....
ஆசு கவியா.? கேட்டதும் பாட்டெழுத வல்லவர் பாராட்டப் பட வேண்டியவர்
சடசடவென
வாயிலிருந்து, விழுந்த வார்த்தைகள் ஒரு நொடிப்பொழுதில்
கவிதைகளாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு விட்டன!Hats off to Smt. ஜெயந்தி சிவகுமார்!
ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..!
அருமை..
Post a Comment