களியக்காவிளையில் பஸ் நின்றது.
சிட்டுக் குருவி போல் கலகலவென்று சிரித்துக் கொண்டு
மாணவர் கூட்டம் ஒன்று பஸ்ஸில் ஏறியது.
ஒரே கும்மாளம் தான்.
அவர்களுக்குள் ஒரு சலசலப்பு.
பஸ் டிக்கெட்டை யார் ஸ்பான்சர் செய்வது என்று !
அதில் ஒரு பையன் துணிந்து சொன்னான்.
'நான் எடுக்கிறேன் ..நாம எத்தனை பேர் என்று சொல்லு? "
அதற்கு ஒருவன் கணக்கெடுக்க ஆரம்பிக்க,
இன்னொரு பையன் சொன்னான்.
"மச்சி எனக்கு டிக்கெட் எடுக்க வேண்டாம்டா...நான்
இங்க, தக்கலைல இறங்கப் போறேன் ..நான் எனக்கு
எடுத்துக்கறேன் "
சொன்ன பையனைப் பார்த்தால் படு சூட்டிகையாக இருந்தான்.
"சரிடா '
அந்த பையனை விட்டு பாக்கி பேருக்கு டிக்கெட் வாங்கினான் ஸ்பான்சர்
செய்தவன்.
அந்த பையன் கடைசி வரை டிக்கெட்டே எடுக்கவில்லை!
தக்கலையும் வந்தது!
என்ன நடந்தது தெரியுமா?
அந்த பையன் கண்டக்டரிடம் சென்றான் ..
"கண்டக்டர் பாக்கி சில்லறை/"
"எவ்ளவ் ?"
கண்டக்டரோ படு டென்ஷனில் !
"அம்பது ரூபா கொடுத்தேன்.. குழித்துறையில் ஏறினேன். ஆறு ரூபாய்
டிக்கெட் காசு போக பாக்கி நாற்பத்தி நாலு ரூபாய் தரணும் !
கண்டக்டர் நாற்பத்தி நான்கு ரூபாய் எண்ணிக் கொடுத்தார். பாவம் !
'தில்'லாக டிக்கெட்டில்லாமல் டிராவல் செய்தது போக, டிபனுக்கும்
காசை தேத்திக் கொண்டு இறங்கினான் அந்த பையன்!
சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், மோட்டார் வாகன விதிப் படி
ரூ 500 அபராதமோ, அல்லது மூன்று மாத சிறை தண்டனையோ அல்லது
இரண்டுமோ விதிக்கப் படும் என்ற நோட்டிஸ் போர்டு பஸ்ஸுக்குள்ளிருந்து சிரித்தது !

8 comments:
மாணவர்களுக்கு இலவசம் ஆக்கியதன் விளைவு போல!
ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றி.
IS IT A CRIME? என்பதற்கு பதில் மட்டும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
"IS IT A CRIME?"
மாணவ எண்ணம் ..????!!
ஹைதராபாதில் ஒரு முறை கைவண்டிக்கடையில் வாழைப்பழம் வாங்கி நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பாக்கிக்காகக் காத்திருந்தேன். ஆனால் கைவண்டிக்காரன் நான் காசே தரவில்லை என்று சாதித்தான்.கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. வண்டியில் சாக்குப் பை அடியில் வைப்பதை நான் பார்த்ததால் , நானே அங்கிருந்து அந்தப் பணத்தை எடுத்துக் காண்பித்தேன். அவன் அசடுவழிய மீதி கொடுத்தான். அவன் வேண்டுமென்று கொடுக்கவில்லை என்றானா, கவனம் இல்லாமல் அப்படிச் சொன்னானா என்று தெரியவில்லை. பணம் கொடுத்ததற்கு ப்ரூஃப் வைத்துக் கொள்ள முடியுமா. அறிந்தே ஏமாற்றினால் THAT IS A CRIME AND MUST BE PUNISHED. உடன் வந்தவர்களும் துணை போவது என்பது நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.அதுவும் இளஞ்சிறுவர்கள்.....!
இன்றைய இளம் தலைமுறை! தெரிந்தே கண்டக்டருக்கு இழப்பும் ஏமாற்றும் செய்த இந்த காரியத்திற்கு க்ரைம் என்பதை விட இன்னும் வேறு ஏதேனும் பெயர் கொடுக்கலாம்?
Conductor should have been cautious! Hereafter, he would not have trusted anybody as he would have made right the loss!!
Crime... I think, yes definitely it is
சிறுவர்கள்.... அதிலும் படிக்கும்போதே இந்த எண்ணம் வந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் இதே போல் ஏமாற்றத் தான் தோன்றும்.....
நிச்சயம் தவறு தான்... தண்டிக்க வேண்டும்.
Post a Comment