Thursday, May 17, 2012

சமைத்துப் பார்?

முருங்கைக் கீரை ஸ்ட்யூ

தேவை : 1. முருங்கைக் கீரை - ஒரு கட்டு
2. கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
3. பூண்டு - ஒரு பல்
4. மிளகு - 2
5. பெரிய வெங்காயம் - 1
6. எலுமிச்சைச் சாறு - 5 துளி
7. ஆலிவ் ஆயில் (அ) ந. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
8. வேக வைத்த உருளைக் கிழங்கு - 2 துண்டு
9. உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு
பாத்திரத்தில் கீரையைப் போட்டு, வெங்காயம், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும், மசித்த உருளைக் கிழங்கை சேர்த்தால், கீரை கெட்டியாகி
விடும்.பிறகு, உப்பு,மிளகு,பூண்டு தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் எண்ணெய் சேர்க்கவும். இறக்கிய பிறகு, எலுமிச்சை சாறு
சேர்க்கவும்.
இது, ஆவியில் வேக வைத்த இட்லி,இடியாப்பம்,புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட் டிஷ்!

பி.கு. : நான் சமைத்துத் தான் பார்த்தேன். சாப்பிடவில்லை. முடிந்தால்,
நீங்களும் அப்படியே செய்யவும். எதையாவது சமைத்து,அதை சாப்பிட்டு,எதாவது ஏடாகூடமாகி, அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!

9 comments:

அப்பாதுரை said...

முருங்கைக் கீரை எங்கே கிடைக்கும்?

இராஜராஜேஸ்வரி said...

சமைத்துப் பார்?

தலைப்பே சொல்கிறதே சமைத்துப் பார் என்று..

சாப்பிட்டுப்பார் நான் பொறுப்பில்லை !!!

கௌதமன் said...

சமைத்துப் பார்?
சமைத்துப் பார்!
சமை, தூ! பார்!!

குறையொன்றுமில்லை. said...

iஇங்கேயெல்லாம் முருங்கைப்பூ கிடைக்காதே குறிப்பு நல்லா இருக்கு.

கே. பி. ஜனா... said...

அட சமைத்துப் பார்க்க (பார்க்க மட்டும்?) நல்ல டிஷ் போல தெரியுதே?

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா என்னா ஒரு கொலை வெறி.. ஆர் ஆர் ஆர்

சாப்பிடலாம் ரெசிபி டேஸ்டாதான் இருக்கு. நான் உருளை ஸ்டூ செய்வேன் இதுவும் செய்து பார்க்கிறேன்..:)

ப.கந்தசாமி said...

அப்போ சமையல் குறிப்பு எழுதறவங்க எல்லாம் இப்படித்தானா? அடுத்தவங்க சாப்பிட்டு பேதி, காலரா வந்து சந்தோஷப்படட்டும் என்ற பரோபகாரம்தானா. என்னே சேவை!!!!!!!!

சிவகுமாரன் said...

தங்கமணியிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

முருங்கைக்கிர்ரை ஆய்ஞ்சு கொடுத்தால் செய்ய ரெடி:)